அனைவருக்கும் வணக்கம்,
முதலில் ஆரோக்கியம்,ஹெல்தி என்று நமக்குள் ஊடுருவியவற்றை பற்றி பார்போம் corn flakes, green tea,oats,protein rich,low fat,skimmed milk,sugar free,cholesterol free,baked chips,gluten free,no transfat, flax seeds இன்னும் பல புதிய பெயர்களில்,இவை அனைத்திலும் நமக்கு தெரியாத பல வேதி பொருட்கள் சேர்க்கப்படுக்கின்றன.
இதை விட பல மடங்கு ஆரோக்கியமானது அவல்,ஆவியில் வேக வைக்கப்படும் உணவுகள்,முளைகட்டிய தானியங்கள்,வேர்க்கடலை,கம்பு,கேழ்வரகு கூழ்,அரிசி கஞ்சி,உளுந்த களி,பழைய சாதம் என பல..
நெய்யை பார்த்தவுடனே cholesterol தான் ஞாபகம் வருகிறது,ஆனால் மிக அற்புதமான இயற்கை மருத்துவ குணம் இருக்கக்கிறது பசும் நெய்யிற்கு.
Flax seed விட பல மடங்கு சிறந்தது எள்ளும்,கொள்ளும் விலையும் மிக குறைவே..
எவ்வளவு அழகான சரிவிகித உணவு முறை நம்முடையது..உணவே மருந்தாக தெரியாமல் பசித்து சாப்பிட்டு இருந்திருக்கிறோம்.இப்போது இது கண்ணுக்கு,பல்லுக்கு,எலும்புக்கு நல்லது என்று உணவை மருந்தாக எண்ணி உண்ணுகிறோம்.
பள்ளியிலிருந்து வரும் போது அம்மா சமைத்த உணவு அமிர்தமாகயிருக்கும் பசியில்..இன்று இதுதானா வேற எதுவும் புதிதாக இல்லையா?
நாமும் பல செயற்கையான மணமூட்டிகள்,சுவையூட்டிகள் ,நிறமூட்டிகள் கலந்து கொடுக்கிறோம்..அநாவசியமாக.
தட்வெப்பநிலைக்கு தகுந்த மாதிரியான உணவுகள் பயிரிடப்பட்டு உண்டோம்,அவரவர் மண்ணில் விதைப்பதே செரிக்கும்...அதுவே மிகப்பெரிய ஆரோக்கியம்..எதையும் தேடி ஓட வேண்டாம்.
இப்போது முளைத்திருக்கிறது பல immune boosters..வீட்டில் கிடைக்கும் உணவே best immune boosters...
மேலும் சில செரிமானத்திற்கு சீரகம்,ஓமம் போதும்.
பல விதமான எண்ணெய்கள் அனைத்தும் வியாபாரநோக்கு..கடலெண்ணெய்,நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெயே சிறந்தது.
தலைவலி மாத்திரை தேவையில்லை ..தண்ணீர் பற்றாக்குறை,தூக்கம் இன்மை,செரிமான கோளறு இதுவே காரணம் .இரண்டு டம்ளர் தண்ணீர் உடன் சிறிதளவு ஓமம் போதும் மீறினால் நீர்க்கோவை மாத்திரையில் நெத்தியில் பத்து இட்டு பாருங்க.
வெளிப்புற ஆரோக்கியமாக பல அழகுசாதனப் பொருட்கள்..
தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் போதும்,முடியை வலுவாக்க வேண்டுமென்றால் அதனுடன் சேருங்க கருவேப்பிலை,நெல்லிக்காய்,வெந்தயம்,கருஞ்சீரகம் ,ஹெர்பல் ஹேர் ஆயில் ready.
சிறிது பொடிச்செய்த கல் உப்பு பயன்படுத்தி பாருங்க பல்லுக்கு..
சீயக்காயுடன்,பூந்திக்கொட்டை,வெந்தயம் ,பச்சைப்பயிறு, செம்பருத்திப்பூ,இலை மற்றும் எலுமிச்சம்பழம் சேர்த்து அரைத்து,சாதம் வடித்த கஞ்சி கலந்தால்..herbal shampoo with conditioner ready
தேங்காய் எண்ணெய் மற்றும் வாரம் ஒரு முறை oil bath எடுத்தால் ..moisturising cream தேவையில்லை.
குளியல் பொடியும், சோப்பும் வீட்டிலே தயாரிக்கலாம்..
உதட்டு சாயம் என்னால் ஏற்க முடியாத விஷயம் சின்ன குழந்தைகள்கூட சர்வ சாதாரணமாக போடுறாங்க ..எதோ தவிர்க்க முடியாத சில இடங்களில் சரி தினசரி ஆபத்தானது..போய் லிப்ஸ்டிக் வந்த ஹிஸ்டரி படித்துப் பாருங்க தூக்கி எறிந்து விடுவீர்கள்.
என்னுடைய தோழி வீட்டிலே தேவையான சமையல் எண்ணெய் தயாரிக்கிறார்.
இன்னொரு தோழி அனைத்தையும் தயாரித்தார்,இப்போது தேனீ வளர்க்கிறார். இவர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆர்வத்தால் நாங்களும் மாறிவிட்டோம். நாமே தயாரிக்கும் போது மகிழ்ச்சிகூட..
முடியவில்லை என்றால் தேடி வாங்குங்க தாத்தா கால பொருட்களை..இப்போது இருப்பை பல போலி,பெயர் தெரியாத பல இரசயானப் பொருட்கள் கலக்கப்பட்டது,அனைத்தும் ஆபத்தானது.
துணிகள் வருடத்திற்கு மூன்று முறை தான் எடுப்போம் ,அக்காவுடையது தங்கை என பல தலைமுறைகள் பயன் படுத்தியிருக்கோம். இப்போது நினைக்கும் போதெல்லாம் பலவிதமான தள்ளுபடிகளில் எவ்வளவு பொருள் சேதம்,இயற்கை சீர்கேடு.
இனியாவது யோசியிங்க, பலர் ஆரம்பித்துவிட்டார்கள் என்னை மாதிரி.நான் குறிப்பிட்டவை சிலவே..அழகும்,ஆரோக்கியமும் நம் கைகளிலே...வாழ்க வளமுடன்.

Super❤️
ReplyDeleteThank you Kalai😊
DeleteArumai
ReplyDeletethank you
Delete🙌👌👌
ReplyDelete👌👌👌👏👏👏
ReplyDeletethank you 😊
ReplyDeleteArumaiyana thoguppu....
ReplyDeleteமிக்க நன்றி😊
ReplyDeleteInteresting vidhya.good one
ReplyDeleteThank you 😊
Deleteகாலத்திற்கேற்ற விழிப்புணர்வு கட்டுரை வித்யா. இக்காலத்தில் எதுவெல்லாம் புதிது புதிதாக ஆரோக்கியம் என்று கூறப்படுகிறதோ அவற்றை விட நம் பாரம்பரிய உணவுமுறை, பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது ஆபத்து இல்லாதது.
ReplyDeleteமேலும் தொடர்ந்து நல்ல பதிவுகள் இட வாழ்த்துகள்.
-தாஹிரா பானு.
மிக்க நன்றி தாஹிரா😊
ReplyDelete