Sunday, August 23, 2020

என் கேள்விக்கென்ன பதில்?? by Kiruthika


என் கேள்விக்கென்ன பதில்??

வெயில் நினைத்தும் - நீ வாடியதில்லை..

மழை நனைத்தும் - நீ துவண்டதில்லை..

இரவு -பகல் வித்தியாசமும் பார்த்ததில்லை....

எனக்காகவே நித்தமும்-

உழைக்கிறாய்- என் நிழலாய்...நின்றபடி!!...

நான் என்ன - தருவேன்..

என்னை தவிர...!!!...

இது என்மேல் கொண்ட -

காதலாலா..?..இல்லை...கடமையா?...

வினவுகிறேன் நான்-நெற்பயிராய்!!!..

விடையரியாது நிற்கின்றாய் நீ ..

என் துணையான -

சோளக்காட்டு பொம்மையாய்!!!!!

-Kiruthika



3 comments:

  1. அருமை அருமை 👏👏👏👏❤️

    ReplyDelete
  2. அழகான அர்த்தம் உள்ள கவிதை 💐

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...