Friday, August 21, 2020

கடந்த கால கிறுக்கல்கள் by S.Veena

                          கடந்த கால கிறுக்கல்கள் 

           கடந்த கால நினைவுகள் என்று சொல்லும்போதே என் பள்ளிப் பருவம் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வரும். பள்ளியின்கட்டிடம், மைதானம் மற்றும் அங்கிருக்கும் சுற்றுச்சூழல், பள்ளியில் செய்த குறும்புகள், ஆடல் ,பாடல் என்பன பல. குறிப்பாக தோழன்,தோழியர்களோடு கொண்டாடிய 'ஆசிரியர் தினம்' மறக்க முடியாத மற்றும் மறுக்க முடியாத நினைவாக இருக்கும். சிறுக சிறுக காசு சேர்த்து  வகுப்புத் தலைவியிடம் அதனை சமர்ப்பித்து அந்த தினத்தை எப்படி நடத்துவது என்று திட்டமிட்ட காலம் மறுபடியும் வர வாய்ப்பே இல்னல. அன்னறய ஆசிரியர் தினமானது நிஜமாகவே ஆசிரியர்களுக்கு ஓர் நன்றி கூறும் தினமாகவே அமைந்திருந்தது.மேலும்  அவர்களுக்கு பரிசுப் பொருள் வாங்கி தருவது, அவர்கனள வரவேற்று குளிர்பானம் கொடுப்பது, ஆடல் பாடல்களில் அவர்கனள திளைக்கச் செய்வது என்று ஒவ்வொரு  நிகழ்ச்சியையும் திட்டமிடுவது முதல் அதை நினறவேற்றுவது வரை அனைத்து மாணவியரின் பங்களிப்பும் இருக்கும்.அன்னறய தினமானது வகுப்பறை, பட்டத்து யானை போலவும், ஜல்லிக்கட்டுக் காளை போலவும் அலங்கரிக்கப்பட்டு களை கட்டி இருக்கும்.                                                       

    பள்ளிப் பருவத்தை வாழ்க்கையில் இணைத்து பேசக்கூடிய ஒரு பண்டிகை தீபாவளி. நாம் வாங்கிய ஒரே ஒரு புத்தாடையை அடுத்த வருட தீபாவளி வரை பேசத் தூண்டும் வகையில் வகுப்பறையில் வகுப்புக்கிடையே சிலாகிப்பது, பள்ளித் தோழிகளுக்கு அவரவர்களுக்கு   பிடித்த தலைவர்களையோ, நடிகர்களையோ வாழ்த்து அட்டை அனுப்பிய காலமும் அதுதான். எனினும் இந்த பேச்சுகளும் செயல்களும்  மற்றவரை  புண்படுத்தாமலும் ஒப்பீடு செய்யாமலும்  தான் இருந்தது தீபாவளி. பொங்கல் அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தான் நாம் கண்டு ரசித்தோம். தொலைக்காட்சியில் தெரியும் ஒரே ஒரு அலைவரிசையை மட்டுமே பார்க்க முடியும் என்பதால் எவரும் நிராசையானது கிடையாது. தீபாவளிக்கு திரையிடப்படும் புதுப்படங்களுக்கு  ஒரு கூட்டம் காத்திருந்தாலும் மற்றவர் தொலைக்காட்சியில்  கண்டு களித்தோம். அத்தினம் கிடைக்கும் இட்லி,அதிரசம், முறுக்கு எல்லாம் இன்றைய  பீட்சா, பர்கர்  போல இருந்தது,குறிப்பாக இனித்தது.

    காலங்கள் மாறிவிட்டன. நான் சிறு வயதில் படித்த 'மேகி' என்ற ஆங்கில  பாடம்  தற்போது  நினைவாகியுள்ளது. ஆம்.அதில் வரும் கதாபாத்திரமோ பள்ளியையோ வகுப்பறையையோ ஆசிரிய- மாணவர்களையோ கண்டிராதது. எல்லா பாடங்களையுமே வீட்டீலேயே திரையில் காணும் வகுப்பு முறைதான் இருந்தது. எனவே பள்ளிகள் என்று இருந்ததாகவும், ஆசிரியர்கள்  பாடம்  நடத்தியதாகவும்,மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து கவனிப்பதாகவும் இருக்க, அக்கத பாத்திரத்திற்கு பெரிய ஆச்சரியத்தை  ஏற்படுத்தியது.முன்பெல்லாம் பாடம்  இப்படித்தான் நடந்திருக்கிறது  என எண்ணி வியந்ததாக நான் படித்தப் (ஆங்கில) பாடம் இருந்தது. என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை. தற்போது கணிப்பொறியின் முன் மாணவர்கள் படிப்பது என்பது தொடருமேயானால் நம் அடுத்த சந்ததியினரும் அப்பாடத்தில் வரும் கதாபாத்திரம் போலவே பள்ளியைக் கண்டும் கல்வி  முறையைக் கண்டும் ஆச்சரியப்படுவார்கள். 

   "கடந்த காலம் கடந்து போனது.  

நிகழ்காலம் நின்று போகிறது.

எதிர்காலம் எங்கோ போகிறது".

என்பதைத் தான் நான் நினைத்து  பார்க்கிறேன். 

                          -  S.VEENA.

 Veena Shankar is from Thiruthangal near Sivakasi and she runs youtube channel - Home Rainbow.

6 comments:

  1. Lovely...Keep writing dear....we are waiting for your nice writings!

    ReplyDelete
  2. Hi veena...always ur rocking 👌

    ReplyDelete
  3. அருமை..அனைவரின் பள்ளி வாழ்க்கையும் பல கதை சொல்லும்

    ReplyDelete
  4. Woww
    Remembered my school days.
    ❤️❤️😊❤️😊

    ReplyDelete
  5. Very nice memories. Last 4 lines👌

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...