அன்னை தெரசா
நான் கண்ட முதல் செவிலியர் சகோதரி என்னைவிட வயதில் சிறிய பெண் ,இன்னும் ஞாபகம் இருக்கிறது "ஏன் இப்படி உங்கள் உடல் நடுங்குகிறது , பயப்படாதீங்க" என்று கூறிய வார்த்தைகள்.
என்னுடைய நெருங்கியவர் கூட செய்ய தயங்கும் வேலைகளை அவர்கள் சகிப்புத்தன்மையுடன் ,கூடிய அரவணைப்பு, வார்த்தைகளால் சொல்ல முடியாது . மனதால் அவர்கள் என்றும் உயர்ந்தவர்கள்.
முன்பின் தெரியாதவர்கள் அப்போது தெய்வமாக தெரிவார்கள். எப்போது வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருப்பது, அவர்கள் வருகைகாக மட்டும் அல்ல , பார்த்தவுடனே ஒரு புத்துணர்ச்சி வரும் . எத்தனை பிரச்சனைகள் தங்களுக்குள் இருந்தாலும் எம்மிடம் அவர்கள் காட்டும் அக்கறை மிகப் பெரியது .
அந்த ஒரு வார கால இடைவெளியில் ஒரு உறவே உருவாகும். அவர் காட்டும் அக்கறையும் கொடுக்கும் தைரியமும் நம்மை சீக்கிரம் குணமடைய செய்யும்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு சகோதரன் உதவி பண்ணினார் ,என்னால் நடக்க முடியாத போது அவர் கேட்கும் புன்னகையுடன் கூடிய நல விசாரணை மறக்க முடியாது. எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் செய்யும் சேவை மிகப்பெரியது.
இன்னொரு சகோதரி பணிவிடை செய்ய வந்தார் அவரை பார்த்து மிகவும் வியந்தேன் ,காலத்தின் கோலம் அவர்கள் திறமைகள் முடக்கப்பட்டு. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் உயர்ந்து இருக்கிறார்கள், ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்கிறார்கள்.
நான் கண்ட சில அன்னை தெரசா இவர்கள் இன்னும் எண்ணிலடங்கா சகோதரிகள் , சகோதரர்கள் இருகின்றனர் அவர்கள் என்றும் நலமுடன் ,வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் நாம் வெளியே செல்லக்கூட யோசியிக்கிறோம்,சேவை மனப்பான்மையுடன் இயங்கும் துப்புரவுத்துறையில்,மருத்துவ துறையில் மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களையும் வாழ்த்தி ,வணங்குகின்றேன்!!!
என்றும் அன்புடன்,
-வித்யா

💐👌
ReplyDelete🙏😊
ReplyDeleteWe have to Thank them Ever 🙏
ReplyDeleteNice write up Dear
Thank you Kiruthika😊
ReplyDeleteHi,vidhya all kavithai your own experience super
ReplyDeleteThank you Amma
ReplyDeletesuper
ReplyDeleteThank you 😊
ReplyDelete