Sunday, August 23, 2020

சிறு துளிகள் by Akhiladevi Kumaran

 சிறு துளிகள் 


நேர்மை 

ஆண்கள்  அணியும் 'மை'.


நேரம் 

சிலருக்கு பத்தாது; 

சிலருக்கு போகாது!


மழை 

வரமாக கொட்டும்;

வராட்டி வாட்டும்!


கைபேசி

அலையும் தொலைபேசி

பேசி பேசி 

நேரம் போச்சு! 


மண்ணாங்கட்டி 

மண்ணால் கோட்டை கட்டி 

மாளிகை என்றான் - மண்ணாங்கட்டி!


பணம்

எண் அச்சிடப்பட்ட தாள்;

என்னை அச்சப்பட வைத்த தாள்; 

உன்னை அதிகம் நேசித்ததால்-

அமைதி இழந்தேன் காலத்தால்!


பாட்டு 

சோகமும் சுவைக்கும்; 

இன்பமும் இனிக்கும்;

குத்தும் குதூகலிக்கும்;

கூத்தும் குளிரவைக்கும்!


பிழை (இரு யானைகளின் உரையாடல்)

நாம் இடம் கொடுத்தது பிழை தான் - மனிதர்க்கு 

நாம் இடம் கொடுத்தது பிழை தான்! 

இன்று,

நாம் உண்ண தழை கூட மிஞ்சவில்லை!

நம் பிழையால் தழை கூட மிஞ்சவில்லை!! 


- Few drops from Akhiladevi Kumaran

3 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...