அனைவருக்கும் வணக்கம் ,சில மாதங்களுக்கு முன் ஒரு யோகப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிகவும் தெளிவாக விளக்கினார்கள் எவ்வாறு மூன்று முக்கிய காரணிகள் நம் உடலை இயக்குகிறது என்று.அவை மூச்சு,ஆகாரம்,மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் குறிப்பாக எண்ண அலைகள்.
ஆம்.என்றைக்காவது கவனித்திருக்கிறோமா நம்முடைய மூச்சை,இந்த உலகில் பிறக்கும் போது முதலாவதாக விடுவது மூச்சு கடைசியாக பிரிவது மூச்சு.உணவில்லாமல் கூட உயிர் வாழலாம் சில நாட்கள் ,ஆனால் முடியாது மூச்சில்லாமல். அப்படிப்பட்ட உயிர் மூச்சை கவனித்திருக்கிறோமா !!!
இரண்டாவதாக ஆகாரம்,இவ்வளவு வேகமாக இயங்குவது எதற்காக உணவிற்காக ஆனால் அதற்கான மரியாதை குறைந்து கொண்டிருக்கிறது.யோசித்து பாருங்க தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் பல எண்ணங்களுடன் குறிப்பாக பசி தெரியாம, ருசி தெரியாம விழுங்கின்றோம் பல நாட்களாக ..
மூன்றாவதாக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தான் மிக முக்கியமான காரணம்,அவர்களுடன் பழகும் முறை, நம்மை இயக்குகிறது.மனதின் எண்ணங்கள் மிக வலிமையானது.ஒரு சிறு கதை ஒருவர் புத்தரிடம் சென்று கேள்வி கேட்டாராம்,புத்தரின் வழக்கமான பதில் இதே கேள்வியை அடுத்த வருடம் இதே நாள்,இதே நேரம் கேள்.அவரின் சீடர்கள் நகைத்தார்களாம் இப்படி வந்தவர்கள் தான் நாங்களும் எது வேண்டுமானாலும் இப்பவே கேள் அதற்கு அப்புறம் கேள்வியே தோன்றாது.மனம் சமநிலை அடைந்துவிடும் அவருடைய போதனைகளில்!
ஒஷோவின் கருத்து நாம் மிக மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் நம் கள்ள மனம் எழுப்பும் இது உண்மையா! எதோ வரபோகிறது வருத்தம் பெரியதாக!
எப்போதும் வருந்துவதே பழக்கப்பட்ட பின் மெய்யான மகிழ்ச்சிகூட தெரியும் பொய்யாக..அதே துன்பம் நேரிடும் போது அனைத்துலக துன்பமும் வரும் கண் முன்னால்..
எண்ணங்களுக்கு ஊடுருவும் சக்தி மிக அதிகம் ஒருவர் ஆழ்மனத்தில் நினைப்பதை இன்னோருவர் வெளிபடுத்த முடியும் அன்பாக, ஆசையாக, கோபமாக,பொறாமையாக மற்றும் கருணையாக..
அதனால் முதலில் கவனிக்க வேண்டியது உங்கள் எண்ணங்களை,மனம் காற்றை விட வேகமாக செல்லக்கூடியது அதை தென்றல் ஆக்குவதும் சூறாவளியாக மாற்றுவதும் உங்கள் கையில்...
என்ன வேதாந்தம் பேசுகிறாள் என்று எண்ண வேண்டாம் நானும் உங்களை போன்ற கூட்டத்திலிருந்து வந்தவள் தான் தூங்கிகொண்டிருந்த என்னை எழுப்பி கொடுத்தாலும் சாப்பிடுவேன் நொறுக்கு தீனிகளை..நாம் உண்ணும் உணவில் இருக்கக்கூடிய சக்தி மிக முக்கியமான ஒன்று அதுவே எம்மை இயக்குகிறது.இயற்கையான அதிகமாக சமைக்கப்படாத உணவை உண்ணும் போது குறிப்பாக பசித்து,ருசித்து உண்ணும் பொழுது மனம் அமைதியாக இருக்கம்.பசி தெரியாமல் இனிப்பு,பிடித்த உணவு மற்றும் மெனு கார்டு பார்த்தவுடன் வருவது உணர்ச்சி,பசியில்லை...முடிந்த அளவு கவனிப்போம் உண்ணும் முறையை..
ஓய்வு கிடைக்கும் போது கவனியுங்கள் உங்கள் மூச்சு மற்றும் நாடி துடிப்பை.
இந்த அளவுகோல்கள் சரியாக இருந்தால் தூக்கம் தானாக வரும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அன்புடன் வித்யா.



Wow 🤩 dear
ReplyDeleteThank you dear
DeleteSuperb dear
ReplyDeletethank you 😊
Deleteஉயிர்மூச்சு, உணவு, உறவுகள் மூன்றும் சரியாக அமைந்துவிட்டால் வாழ்வில் கவலையேது.. அருமை வித்யா
ReplyDeleteதாஹிரா பானு
மிக்க நன்றி தாஹிரா😊
Deleteஉண்மை அருமையான பதிவு.அனைத்து வார்த்தைகள் அல்ல உன் அனுபவம்.வாழ்க வளமுடன்.
ReplyDeleteஆம்.மிக்க நன்றி வளர்மதி😊
DeleteUnknown by mistake its valarmathi
ReplyDeleteDear Vidhya,
ReplyDeleteAll three are really important to practice everyday! Thank you for registering your thoughts here! Keep going! :-)
Thank you Radhika 😊
ReplyDeleteஅழகான பதிவு💐💐💐
ReplyDeleteஎன்னை கவர்ந்த வரிகள்: “.இயற்கையான அதிகமாக சமைக்கப்படாத உணவை உண்ணும் போது குறிப்பாக பசித்து,ருசித்து உண்ணும் பொழுது மனம் அமைதியாக இருக்கும்.”
நிறைய எழுதுங்கள் வித்யா... நாங்கள் காத்திருக்கிறோம்!!
மிக்க நன்றி அகிலா😊
ReplyDelete