Thursday, August 20, 2020

பழைமையை தேடும் புதுமை by Vidhya Nivash

 பழைமையை தேடும் புதுமை

அனைவருக்கும் வணக்கம் ,வேதவல்லி அம்மாவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை .

நான் எதை எல்லாம் பார்த்து வளர்ந்தேனோ அவை மீண்டும் வருகிறது கடைத்தெருவில்..

அன்று வீட்டின் வாசலில் வரும் பால்காரர், பூக்கார அம்மா,காய்கறிவிற்கும் அக்கா,புடவைகாரர் இன்னும் பல அனைத்தும் வருகின்றன இன்று "ஆன்லைன் ஷாப்பிங் " பல பல பெயர்களில்..ஒரே ஒரு வேற்றுமை நாம் அவர்களுடன் பழக்குவோம் உறவு முறையில் ஆனால் இன்று முகம் தெரியாதவர்களிடம்,நம் மொழிதெரியாவரிடம் வாங்குகின்றோம்.

கொல்லைபுரமும்,கிணறும் இல்லாத வீடே இல்லை அன்று..இன்று பெருகி வரும் வீட்டுத்தோட்டம் ..😊

கிணறு அற்புதமான ஒன்று அதில் தண்ணீர் இறைத்து குளிக்கும் சுகமே சுகம்!


என்னுடைய காலத்தில் பெருகிவிட்டன பள்ளிக்கூடங்கள் ஆனால் இன்று வருகிறது பழைய கால வீட்டு கல்விமுறை..

அன்றாட வாழ்வியலை சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களை தேடி கொண்டு இருக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள் பலர்..

செயல்முறையில் சொல்லி கொடுக்க பள்ளிக்கூடங்களும் முன்வருகின்றன..

அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று வலி

நிவாரணிகள் வாங்கும் வழக்கம் குறைந்து நம் பாட்டி கை வைத்தியம் வளர்கிறது..

கடந்த ஆறுமாதமாக சாதாரணமாக வரும் சளி,காய்ச்சல்,இருமல் கூட வரவில்லை என் குழந்தைகளுக்கு ..முக்கியமான காரணம் அவசர உலகிலிருந்து விலகி அமைதியான உணவு,உறக்கம்..

பல  இல்லத்தரசிகள் தொல்லைக்காட்சிகளில் இருந்து விலகி ஆர்வத்தை மீண்டும் செலுத்தினர் பல பயனுள்ள பொழுதுபோக்குகளில்..அதில் நானும் ஒன்று!

குறிப்பாக அன்று செய்யப்பட்ட பல சிறுத்தொழிகள் மீண்டும் உயிர்ப்பெற்றன..இன்று குடும்பத்துடன் ஈடுபடுக்கின்றனர் பலர்.

வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து எம்மை இன்று தெளிய வைத்திருக்கிறது இந்த இயற்கையும், கடவுளும் ..கண்டிப்பாக மாற்றம்.மிகப்பெரிய மாற்றம் தோன்றும் வருங்காலத்தில்,எப்படி நமக்கு தெரியாமல் நமக்குள் நுழைந்தவற்றை  களைந்து விடும் நேரம் தொடங்கிவிட்டது..

ஒருபுறம் விஞ்ஞானமும்,மெய்ஞானமும் சண்டை போட்டாலும்..நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த பழைய சோறு,மண்பாண்டங்கள்,சிலம்பாட்டம்,வேப்பங்குச்சி வந்துவிட்டது கடைத்தெருவிற்கு...

பழைமையை தேடும் புதுமைக்கு பெயர்தான் "தற்சார்பு வாழ்க்கை"..இயற்கையுடன் இணைந்து ஆனந்தமாக வாழும் வசந்த காலம் வருகிறது மீண்டும்   ...

பழைமையை விரும்பும் ,புதுமையை வெறுக்காத உங்கள் வித்யா😊.


11 comments:

  1. Wow..Super Vidhya..Nice Title with apt examples..



    ReplyDelete
  2. வாழ்க்கை ஒரு வட்டம். அருமையான எழுத்து. Like the last sentence. பழைமையை விரும்பும் ,புதுமையை வெறுக்காத உங்கள் வித்யா means you are open to changes.

    ReplyDelete
    Replies
    1. Yes..மிக்க நன்றி கீதா.

      Delete
  3. ரொம்ப அருமையா இருந்தது வித்யா. எளிமையான நடையில் அழகாக எண்ணங்களை எழுதி இருக்கீங்க. இன்னும் நிறைய எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி அகிலா..கண்டிப்பாக என்னால் முடிந்த வரை😊

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...