சில நினைவுகள்
-காஞ்சனா
சினிமாவில் முதல் சீனில் காண்பிக்கும் பெரிய இரும்பு கேட்டினை திறந்துகொண்டு......ஐந்தாயிரம் அடி சாணிப்பூசி மெழுகிய வாசலில் கால் அடி வைக்கும்போது ஊர் பஞ்சாயத்து தலைவரின் பேத்தியாக மிடுக்காக உள்ளே நுழைந்த அனுபவங்கள்.....பெரிய பெரிய தாழ்வாரங்கள், சித்தி, பெரியம்மா,ஆயா, அண்ணா எல்லோரின் அன்பு வாழ்வில் என்றும் நீங்காத அன்பு......சூரிய உதயத்திற்க்கு முன்பே எழுந்து அவ்வளவு பெரிய களத்தில் ஒற்றை ஆளாக சாணித்தெளித்த என் ஆயாவின் வியர்வை இன்று இந்த சின்ன வீட்டினை பராமரிக்க முடியாத என்னை நினைத்து பார்க்க வைத்துள்ளது... விறகடுப்பில் மணக்க மணக்க சமைக்கும் என் ஆயாவின் கைவண்ணம் இன்றும் நாவில் நீர் ஊறவைக்கும்......பெரிய நாலணா அளவில் பொட்டு, கொசவம் வைத்த புடவை, அழகுக்கு அழகு சேர்க்கும் கண் கண்ணாடியில்.... அவர்கள் அவ்வளவு அழகு......!மிடுக்கோடு ஒற்றைப் பெண்மணியாக...தன் கணீரென்ற குரலால் 2ஏக்கர்தாண்டியுள்ள வேலை ஆட்களை வேலை வாங்கும் என் ஆயாவின் பெண் சுதந்திரம் இப்போது இல்லை இந்நகரத்தில்..... மோட்டார் தொட்டியில் இறங்கி....ஷாம்பு பூசிய தலையோடு அண்ணா, அக்கா,தம்பிகளோடு விளையாடிய நினைவுகள் மீண்டும் கிடைக்காத அனுபவங்கள்.... ஓங்கி வளர்ந்த கல்யாண முருங்கை மரங்களின் செழுமை காணக்கிடைக்காத சூழ்நிலைகள் இன்று..... மரங்களின் நடுவில்.....மாட்டு தொழுவத்தில் உள்ள துளைகளில் வண்டுகளின் விளையாட்டுகள் மறக்க முடியாத ரீங்காரம், தோட்டததில் பறித்த தக்காளியில் விளையாடி கூட்டாஞ்சோறு ஆக்கிய நினைவுகள்..... அப்படியே நேரம் ஆனப்பின் பக்கத்தில் உள்ள மில்லில்ப்போய்......செக்கினில் எண்ணெய் எடுத்துக்கொண்டிருக்கும் அம்மா.....ஆபிஸில் கணகெடுக்கும் டாடி, அரிசி அரைக்கும் இயந்திரத்தினை ரசிக்கும் நாங்கள் மதிய நேரத்தில் நீண்ட அந்த மில்லுக்குள் ஓடி ஒளிந்து விளையாடி..... அரிசி அரைக்கும் இயந்திரத்தின் பெல்ட்டில் உட்கார்ந்து விளையாடிய அனுபவங்கள் மீண்டும் இன்று மனதில் நுழைந்து உயிருட்டிக்கொண்டிருக்கும் சக்திக்கு நன்றி.....மாலை நேரத்தில் பொடி நடையாக நடக்கும்போது கிருஷ்ண நாயக்கர் பேரப்பிள்ளைகளா என்ற அனைவரின் விசாரப்பில் மிடுக்காக நடந்து தான்தோன்றிஸ்வரின் கோவிலிக்கு சென்று ஈசனை வழிபட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்த நினைவுகள் இன்றும் என் நினைவில் நீங்கா நினைவுகள்.......
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்...... இன்றும் நீங்க முடியாத பசுமையான ஞாபகங்கள்..... என் உணர்வுகளில!ஓட்டு வீட்டின் முற்றத்தில்..... கோழி🐥🐥சிங்கார நடையும்..... கொக்கரக்கோ என்ற🐓🐓கூக்குரல்களும்......காலை சுற்றி சுற்றி வரும் 🐕🐕🐈🐈களின் படைகளோடு..... கிணற்றருகில் (என் தந்தையின் வியர்வை துளிகளில் உருவாக்கிய)உள்ள தொட்டியில் உட்கார்ந்து ஆலங்குச்சியில் பல்துலக்கி.....மீண்டும்🐕🐈🐕🐈 படைகளோடு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு.....சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டு...... மீண்டும் என் தந்தை உருவாக்கிய சிறிய பெருமாள் கோவிலில் வந்து.....மனதில் கண்ணனின் லீலைகளில் மெய்மறந்ததது மட்டுமல்லாமல்.....அவனோடவே வாழ்ந்ததுப்போன்ற நினைவுகளில்.....சந்தனமரமும், கருகமணியின் நிழல்களில்...... பாறைகளில் உட்கார்ந்து பனம்பழம் சுட்டு சாப்பிட்ட நினைவுகள்.... இன்னும் நீங்கா உணர்வுகள்..... மீண்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, பக்கத்தில் இருக்கும்
🐂🐄🐂🐄 மாட்டுதொழுவத்தில் உள்ள அட்டாலியில் அமர்ந்து விளையாடிய நினைவுகள்...... மாலை நேரங்களில்🐃🐃🐃🐃 எருமை மாட்டின் மீது(ஏதோ அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் இளவரசியினைப்போல) அமர்ந்து மரிச்சியின் நடுவில் பயணித்து இருபுறமும் வளர்ந்திருக்கும் நெற்கதிர்களும், சோளககதிர்களின் வாசங்களில் சென்ற நினைவுகள் இன்னும் பசுமையாக என் நெஞ்சில்..... அப்படியே அம்மாகூடவே பக்கத்து காட்டில் இருக்கும் தாத்தாவின் மெத்தைவீட்டுக்குப்போய்.... அங்கிருக்கும் உறவுகளோடும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது....நான் மட்டும் ஏனோ என் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்.....அவ்வபோது பாரயணமும், சொற்பொழிவு ஆற்றும்.... என் தாத்தாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது பழைய புராணங்களின் கதைகளை உள்வாங்கிய நினைவுகள்தானோ என்னவோ இன்றும் இறைசேவைகளில் என் நாட்டத்திற்க்கான காரணமாய் இருக்கலாம..... அப்படியே தாத்தாவோடு மாரியம்மன் கோவில்க்கு சென்று.... பூஜைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கயிற்றுக்கட்டிலில் என் அப்பாவின் நெஞ்சினில் படுத்து......சிறுசிறு வண்டுகளின் ரீங்கரத்தோடும்....🐞🐞🐞🐞தவளைகளின் கரகரகுரல்களோடும் இனிமையான உறக்கம் இன்றும் என் நினைவில் நீங்கா உறவுகள்.........

பாரதிராஜா படம் பார்த்த மாதிரி இருந்தது ..அருமையான வரிகள்,அழகான நினைவுகள்
ReplyDeleteஆஹா... எத்தனை அருமையாக, நேர்த்தியாக நினைவில் நின்ற எண்ணங்களை தொகுத்து வழங்கியிருக்கறீர்கள் காஞ்சனா...கண முன்னே காட்சிகள் அனைத்தும் விரிகின்றன❤️❤️
ReplyDelete