தாத்தாக்களும் தலைமுறைகளும்
பாலுமகேந்திராவின் தலைமுறைகள் என்ற திரைப்படம் எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான திரைப்படம் பாலுமகேந்திரா என்றாலே வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டுபவர் .குறிப்பாக பின்னணி இசை மிகவும் தத்ரூபமாக இருக்கும். நாமும் அதில் சேர்ந்து வாழ்வது போல் இருக்கும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் தாத்தா மற்றும் பேரன்.தாத்தாவின் மகன் காதல் திருமணம் செய்து கொள்வார் ,அதுவும் கலப்புத் திருமணம். கிராமத்தில் தாத்தா மிகவும் ஆச்சாரியம் கடைபிடிப்பவர். எப்படி ஒரு பேரனின் வரவினால் வாழ்க்கையே மாறுகிறது என்பது தான் திரைப்படம்.
இதில் நான் பார்த்து ரசித்தவை கணவன் மனைவிக்கான விட்டுக்கொடுக்கும் தன்மை, வயதான காலத்தில் முதியவர்களுக்கு பேரப்பிள்ளைகளின் துணை மற்றும் நமக்கும் அவர்களுடைய அரவணைப்பு எவ்வளவு முக்கியம் வாழ்க்கையில் . குறிப்பாக கிராமத்துக்கு இளையதலைமுறையின் தேவை மற்றும் தாய்மொழியின் முக்கியத்துவம்.
அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு அவர்களின் முந்தைய தலைமுறைகள் தான் அடித்தளம்.
மனதிற்கு பிடித்துவிட்டாள் மதங்களும் மறந்து விடுகின்றன..
என் நினைவில்....
தாத்தா எல்லா பேத்தி களுக்கும் கிடைத்த
வரப்பிரசாதம்!!!
எப்பொழுது வருவார் என்று ஆவலாக காத்திருப்பேன்?
தாத்தாவும் ஆசையாக நேராக வந்து அவர் மடியில் கட்டி இருக்கும் பூரி செட்டை எடுத்துக் கொடுக்கும் போது அமிர்தமாக இருக்கும்..
யாருக்கும் தெரியாமல் நாடார் கடைக்கு அழைத்துச் சென்று அவர் வாங்கிக் கொடுக்கும் பொரி உருண்டையும், தேன் முட்டாயும் இன்றும் இனிக்கிறது.
தாத்தா பேத்திகான உறவை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றும் கலந்திருக்கிறது என் நினைவுகளில்...
இப்படிக்கு ,
உங்கள் பேத்தி.

Wonderful very nice.i too remember my grandfather weekly we go to salem from mettur.He takes me to tailor shop to switch different type of dresses hope I dont remember readymade.wonderful memories so good thought vidya.valarmathi.
ReplyDeleteThank you Valarmathy 😍
DeleteReadymade dresses in my childhood is very rare to us.
ReplyDeleteyes yes.my chithi made for me
DeleteHi,Vidhya,super
ReplyDeletethank you Amma
DeleteMy grandpa is also my math teacher
ReplyDelete..he dropped me in school with his bicycle..told many stories💓💓
😍🙌
ReplyDelete