Wednesday, September 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


திறவுகோல் எங்கே உன் விழியிலா?

 அன்பு எனும் விதையில் விருட்சமாய் ஓங்கி

வளர்ந்து நான் நிற்க 

விதையிட்டவனே உறவிகளிலிருந்து விலகி இருக்க சொல்ல 

நானும் முயல்கிறேன்

மனசாட்சிக்கு எதிராக

ஓரளவு வெற்றி கொண்டாலும் உனையும் 

மறக்க வழி தேடுகிறேன்

முயன்றும் முடியவில்லை

உன் அடி தொடுவதன்றி

கண் திறந்தால் என் செயலால் நீயும் அன்பு கொள்வாயோ?

திறவுகோல் என்னிடமில்லை அது என்றும் உன்னிடமே!

விழி மூடியிருந்தாலும் இதழின் அதே அழகு விழியில் ரம்மியமாய்

என் விழி திறந்து காட்சியை பார்த்த போதும் 

என் விழியும் உன் உதடு போல் 

புன்னகைக்க மறுத்ததே 

உன் உறுப்புகள் இடம் மாறி வனப்பு தந்தாலும்

என் விழி அதை ரசித்து உன்னிடம் அடிமையாக்குகிறதே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...