Saturday, September 21, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


புள்ளி கொண்ட மேகத்தின் கோலத்தை

கலைத்தது யார்?

நீ தானா!

நீலவெளியின் வெண் மேகங்கள்

மாரியை 

தருவதுற்கு முன் நீயும் வெளிப்பட்டது ஏனோ?

காற்றும் உன்னோடு சேர்ந்து மாரியை தடுத்து

எங்கள் புழுக்கத்தை 

மாற்றியதும் ஏனோ?

மாறியது நீ மட்டுமல்ல

ஒற்றை நிலவே

 நானும் தான் மாரியை வேண்டி நிற்கின்றேன்

உன் குளிரையும் கொஞ்சம் மேகத்திற்கு 

கொடுத்து குளிர்விப்பாய்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...