Saturday, September 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கருங்கூந்தல் விரித்து

செங்குருதியில் நினைத்து

நிற்பதும் எதற்கோ?

வெண்கரங்கள் பற்றிக்கொள்ளும் என்பதாலா?

வரவையும் எதிர்நோக்கி

 வருகையையும் பதிவது நியாயம் தானா?

பெண்ணிற்கு பேதை என்ற பெயரும் சரிதானா?


 உதிரத்தை உதிர்த்து பிறப்பு கொடுக்கும் 

பெண்ணே!

உன் மீதமிருக்கும் உதிரத்தை எடுக்கும்

கயவர்கள் இருந்தாலும்

உன்னை தாங்கும் கரங்களும் உண்டே!

உன் முகம் மறைத்து 

நீ கொண்டாடும் வெற்றியையும்

நீ கொள்ளும் வேதனையையும் 

பகிர ஆளில்லாமல் 

நீ தவித்தாலும்

உன் வாழ்வில் தவிர்க்க முடியாதவனும் ஓர் ஆணே!

அவன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொள்வான் உன்னை எப்போதும்

உன் உயிருள்ள வரை


 முகம் தெரியா மனிதரை 

 தாங்கிய கரங்கள், தங்கள் 

முகவரியை தொலைத்த கதையும்

உண்டு இங்கே

முகமூடி கூட செல்வத்தை மட்டுமே

பறிக்கும்

இந்த முகம் மறைக்கும் வித்தை மனிதனையே சிதைக்கும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...