Thursday, September 5, 2024

கடிதம் by Veena Shankar

 


கடிதம் ஒன்றே போதுமே

நம் துயர் துடைக்க!

எதிரே யார் இல்லாதபோதும்

இருவருக்குமான பகிர்மானம் அரங்கேறும் இவன் மூலம் 

பல சமயம் ஆவலாய்

சில சமயம் ஆறுதலாய்

பல சமயம் அலங்காரமாய்

சில சமயம் அவசரமாய்

பல சமயம் காதலாய் 

சில சமயம் வெறுப்பாய்

பல சமயம் அமைதியாய்

சில சமயம் ஆதங்கமாய்

பல சமயம் சினேகமாய் 

சில சமயம் வெறுமையாய்

பல சமையம் அருவியாய் 

சில சமயம் அழுகையாய் 

பல சமயம் துடிப்பாய் 

சில சமயம் ஆதங்கமாய் 

எவர் இலர் இவனை கையாளாமல் அக்காலத்தில்

பண்டிகைக்கு பலவாறாய் பிரசவிப்பான்

பிரசாரமாவான்

பிரபலமாவான்

பிரகாசமாவான்

நம் முன்னே

தேவையுள்ள போது 

துணையானான் 

இன்றோ ஏனோ அந்நியமானான் 

பழைய கதை மீண்டும் அரங்கேறுவது போல்

மீண்டு வந்து உயிர்த்தெழுவான்

எதிர்காலத்திலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...