Wednesday, September 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நகைப்பின் கோணம் பலவகை ஆகும் போது

நகைப்பவரை கண்டு அச்சம் கொள்ளாமல்

தான் நினைத்ததை முடிக்கும் எண்ணம் 

இருக்கும் வரையில்

எல்லா நாட்களும் இனியவையே


 பரிகாசங்கள் கூட பரிதாபமாகும் சில சமயம்

ஆனால் அதுவே எட்டாக்கனியையும் பறிக்க தூண்டும் பல சமயம்


 பின்னால் நின்று நகைப்பவர் யாரும்

முன்னால் வருவதில்லை

எக்காரணத்திற்காகவும்

கருவியும் அவரே நம்மை ஊக்கப்படுத்த

அறுவி விட வேண்டாம் அவரை

நம் வாழ்வில்

தானாய் இடம் மாறுவர்

வடிவம் தருவர்

நம் வெற்றிக் கண்டு

அப்போதும் திருந்தாமல் அடுத்தவரை பரிகாசம் செய்வர்

உன்னை சொல்லும் போது அவர்களை பக்கமாகவும்

அடுத்தவரை சொல்லும் போது தூரமாக நிறுத்தி விடு அப்படிப்பட்ட மனிதர்களை

நீ மென்மேலும் உயர

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...