Akhila: ஆனைக்கு நம்பிக்கை படகோட்டியிடம்
அலனுக்கோ பயம கலந்த நம்பிக்கை-
ஆனை ஆடவும், ஓடவும் கூடாதென!
Vidhya Nivash: இரு வேறு நிலை, ஒன்று அலங்கரிக்க பட்டு மேளதாளத்துடன் கோவிலில்...
மற்றொன்று அலங்காரமின்றி மிருகக்காட்சி சாலையில்..
பொதுவில் இரண்டும் காட்சிப் பொருள்!
ஒன்று நிச்சயிக்கப்பட்ட திருமணம்,
மற்றொன்று காதல் திருமணம்,
மொத்தத்தில் நம்பிக்கை செல்வோர் இரண்டும் மகிழ்ச்சி தேடி ஆனால் செல்வோருக்கு தெரியாது மகிழ்விக்க என்று.
Veena Shankar: பாரம் தூக்க ஓர் நீர்வழிப் பயணம் இங்கே
அதற்கு யானையை தாங்கும் படகும் இங்கே
படகையும் தாங்கும் நீரும் இங்கே
இதில் பாரம் யாருக்கு அதிகம் என்ற
கேள்வியை மனதால் கொண்டாலும்
என் மனம் சொல்கிறது
இம்மூன்றையும் திறன் கொண்டு
கையாளும் படகோட்டியிடமே!
Veena Shankar: தும்பிக்கை உள்ளவனின் நம்பிக்கை பயணம்
புத்துணர்வுக்காகவா?
துணையை புரிந்து கொள்வதற்காகவா?
நாட்டு மக்களை உற்சாகப்படுத்தவா?
தன் நடையின் நளினத்தை
தரையில் காட்டவா?
பாட்டாடை உடுத்தி அரசரை சுமக்கவா?
தேரில் பவனி வரும் கடவுளை அலங்கரிக்கவா?
திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை கம்பீரமாகக் காட்டவா?
மறைத்து வைத்த திறமையை திருவிழாவில் வெளிப்படுத்தவா?
அலங்கரித்து தன்னை அழகாய் காட்சிப்படுத்தவா?
தன்னை தானே வெறுமையாய் உணர்ந்தாலும் திறமையுள்ளவன் இவன்
அவன் பயணத்தின் பலன் கிடைக்க
அவன் பலத்தை அவனுக்கு உணர்த்தாமல் ரசிப்போம்
அவன் இருக்கும் இடத்திலே

No comments:
Post a Comment