Friday, September 20, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 




 Veena: விட்டு வெளியே வந்தால்

கோட்டை கூட வசமாகும்

அதற்கு கொஞ்சம் மதியும் மறதியும் தகுதியாகும்

மறதியை வென்றால் மதியும் வெல்லும்

Vidhya: பகட்டான வாழ்க்கைக்கு நகர்த்தும் பகடைகள் இங்கே காட்சிக்காக!

 Veena Shankar: கட்டம் அமைத்து தரம் நிர்ணயமாகும் இங்கே

 தகுதி என்பது ஒரு பகுதியே

விதியும் வெல்லும் மதியால்



பல திசைகள் திரும்பி சென்றாலும் வெற்றி மட்டும் கட்டத்திற்குள்ளே

Veena Shankar: வெளியே தலை நீட்டினால் மட்டுமே

 தெரியும் அவரவர் நிலை

உள்ளே என்றால் பெட்டி

வெளியே வந்தால் கட்டம்

கூட்டமாய் வந்தாலும்

நிறமும் நிலையும் வேறு தான்

வந்த பின்னும் எவரும் கொள்ளலாம் வெற்றி அது

போர்வீரர் என்றாலும்

விளையாடும் வீரர் என்றாலும்

Akhila: King & Queen - Eagerly looked upon by rest of the world😎😍

 Akhila: Zomato deliveryக்கு பதிலா Amazon delivery😵‍💫😵அடடா வட போச்சே🥸

Vidhya Nivash: மதியை வெல்லும் காய்கள் இங்கே மதியை மயக்கும் சுவையில் இனிப்பாக போட்டியில் வென்றவருக்கு பெட்டியில் வந்த பரிசு.

 Veena Shankar: இணைப்பின் பந்தம் இனிப்பின் வடிவிலே

Veena Shankar: இந்த தீபாவளி ரிலீஸ் ஸ்வீட் ராஜா அண்ட் கோ வடிவில்😉

Akhila: குதிரை: மன்னா, மக்களிடம் போய் என்ன சொல்ல வேண்டும்?


மன்னர்: வந்துட்டோம்னு சொல்லு! திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!! 

ராஜா ராணி season 2 🤴 👸

 Veena Shankar: நிறங்கள் எதிரியல்ல என்றும்

விளையாட்டில் அவற்றின் நிறத்தை வேறுபடுத்தி காட்டி ஒரே பெட்டியில் அடைக்கும் முறையும் சரி தானா?

வெற்றியும் தோல்வியும் சமமே என்று உணர்ந்த மனிதன்

எப்போதும் வெற்றியை மட்டும் ருசிக்க நினைப்பது ஏன்?

Veena Shankar: ஆட்டத்தில் மட்டுமல்ல கூட்டணி இங்கே

ஆட்டம் முடிந்தாலும் தொடரும் கூட்டணி பெட்டிக்குள்ளே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...