Monday, September 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஆணின் கை வரிகளுக்குள் பெண்ணின் மன வரிகள்

அது வரிகள் மட்டுமல்ல 

இருவரின் செயல் வடிவங்கள்

தாங்கும் கரங்கள் இருந்தால் தாரமும்

அடைக்கலமாவாள் கணவனின் கரங்களின் வரிகளிக்கிடையே

பிரிந்த ரேகைகள் இணையும் கோடுகளே! 

ஓர் சந்திப்பில்

அது கண்களுக்கு

புலப்படுமா காண்கையில்? 

அதுவும் தேவையில்லை என்கிறது மன மொழி அதுவும் சில வேளையில் மௌன மொழியே!

கோடுகளின் ஆழம் சொல்லும் தாங்கியதால்

கொண்ட வலிகளை

அவளும் அமர்ந்தாளோ இணைந்த கோடுகளின் மத்தியில்

தன்னை தாங்குபவனின் வலியை உணர்ந்தே!

தாங்குவது கூட எளிதே பிறர் வார்த்தையால் தாக்கப்படும் போது

புரிந்து கொள்வோம் துணையின் வலியை

கையின் கோடுகள் அழுந்தாமலும் அழியாமலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...