Tuesday, September 3, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


விதி..

தந்த கரமோ...?

அல்லது -

தாமே -

பிடித்தம் கொண்டு..

பிடித்த கரமோ...?...


எதுவானாலும்..

பிடித்தது முதல்..

'பிடித்தம் '..

தவறாது -

இருகப்பற்றவே...

இணைந்த வரிகள்

பாடும் -

இசைந்த இதயங்களை

கருவாக்கி...!...


இதயத்தின் 

மெய்யான மொழி ..

மௌனம் !...

மொழிப் பெயர்க்கபடும்...

ஒரே அலைவரிசை கொண்ட 

மனதால் மட்டும் ...!!!..

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...