சிறகின் ஊடே சிகரம் தொட்ட பறவைகள்
வானத்தில் தேடுவது தான் என்ன?
காட்சிகள் யாவும்
கருமையில் வெண்மையாய் தெரிவதும்
வெண்மையில் கருமையாய் மாறுவதும் ஏன்?
நிறம் மாறும் பூக்கள்
இருக்க
அந்த வித்தை தெரியாமல்
காற்றின் மோகத்தால்
மேகத்தின் இடையே
வலம் வரும் பறவைகள் ஓர் அழகே!
பூமியில் பறக்க வேண்டுமானால் உடல் மட்டுமல்ல
மனமும் இலகுவானால்
சிறகு இல்லாமற் பறக்கவும் முடியுமே!
வான் வெளியில் உள்ள சுத்தம்
பூமியில் இல்லையென்று சத்தமாய் சொன்னாலும் மனித
மனமும் தேடுவது
அமைதியை தான்
அதுவும் ஆர்ப்பரித்து கொண்டே அடைய நினைப்பதால்

No comments:
Post a Comment