Friday, September 27, 2024

பொள்ளாச்சி போலாமா by Vidhya Nivash

 


ரொம்ப நாள் ஆசை பொள்ளாச்சி ,வால்பாறை பார்க்க. தீடிரென கிளம்பி பயணத்தை அதிகாலையில் தொடங்கினோம்.போகும் வழியில் அணைக்கட்டு, அருவிகள் செல்ல முடிவுச்செய்தோம்.

திண்டுக்கல்லையை தாண்டியது தான் மிச்சம் சாலையின் இருமருங்கிலும் அழகான தென்னை மரத்தோப்புகள் வரவேற்க, அழகான மலை தொடர்ச்சி கூடவே வர.அடித்த காற்றில் மொட்டை மாடியில் நின்று கூந்தலை காற்றில் பாடவிடும் பெண்ணை போல் ஒவ்வொரு தென்னையும் காட்சி தந்தது. 



ஆனைமலை மேகங்களுக்கு நடுவே இளைப்பாற, ஆழியார் அணை ஒருபுறம்,மறுபுறமாக அறிவு திருக்கோயில்,கண்டிப்பாக அந்த சூழ்நிலையில் ஒய்வெடுத்தால் அறிவு மட்டுமா! சாவியில்லாமல் மனமும் திறக்கும்.

மெல்ல ஆரம்பித்த மழைச்சாரல், ஆவலாக செல்ல விரும்பிய கவியருவி, மழை வந்து வழிமறித்தது.



கட்டுக்கடங்காத காட்டருவி பாறை வெடிக்க முழங்கி சென்றது.வழியெங்கும் காட்டருவி.

 மலை ஏற்றத்தில், மழைச்சாரல் நடைப்போட ,இசையுடன் சேர்ந்து சொர்க்கமாக தோன்றிய நேரம்.எங்கும் பச்சைப் பட்டு விரித்த தேயிலை தோட்டங்கள். ஆங்காங்கே அருவி,ஆனால் எதிலும் சிரம் கரம் புறம் நனைக்க முடியாமல் கடைசியாக மழையில் நனைந்த சுகத்துடன்,உணவு , விடுதியில் ஓய்வு.






விடாமல் பிடித்த மழை, கண்ணாடி அறையில் மாட்டிய பறவை போல் மனம்.இதற்கிடையே மகனின் உடல் ஒத்துழைக்கவில்லை.கைவசம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டாச்சு.ஊசியும்,மருந்தும்,போட ஆளும் வேண்டும்.(டாக்டர் கைவசம், தொலைபேசியில் தம்பி)இரவு எட்டு மணிக்கு ஊரே அடங்கிவிட்டது.கூட்டி சென்ற ஓட்டுநரை பாவம் தூக்கத்தில் எழுப்பி.நல்ல வேளையாக விடுதிக்கு கீழே அரசு மருத்துமனை ,தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு சுத்தம்.ஒருவழியாக இரவு கழிந்தது.

தொடர் மழை,வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.காலையில் சிறு நடைபயணம்..

தொடரும்..


1 comment:

  1. என்றுமே அழகு இயற்கை தான் வித்யா. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...