Tuesday, September 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


சொல்லால் சுட்டெரித்த என் காதலியை விட

மெய்யால் சுட்டெரிக்கும் உன் கதிர்கள் மேல்

ஏதோ ஓர் வெளிச்சம் என் முன்னே

என் அறியாமையால் உனை ரசிக்க மறந்தேன் இப்போது

காலையில் உன் அழகை கண்ட பின் இன்னும் அதனின்று மீளாதவலாய்


 ஆரம்பத்தில் வெளிச்சம் அமைதியாய்

நீயும் உயர செல்ல செல்ல

மறந்தாயே மக்களையும் மாக்களின் நிலையையும்

உன் தாகம் தணிய கொஞ்சம் நீர் கொண்ட பின் 

எங்கள் தாகம் தீர்க்க

மேகத்தை துணை கொண்டனையே!

உன் சுட்டெரித்த கதிர்களும்

மன்னிப்பு கேட்டன மாலையில்

நிலவின் வருகையால்

செய்த உதவி மறந்ததை போல்

நீயும் மறந்தனையோ?

உன் கதிர்களை இதமாய் பதமாய் இருக்க சொன்னால் தான் என்ன?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...