Ramalakshmi: World's best active timekeeper,hardworker and the best one who follows queue ever
Vidhya Nivash: பள்ளிக்கு செல்லவில்லை,
பாடம் படிக்கவில்லை, செல்லப்பிள்ளை இல்லை இவை, அனுபவ பாடம் தந்த உழை, பிழைத்து வாழ் என்ற தன்னம்பிக்கை
Veena Shankar: வெயிலுக்கான குடை இங்கே பசுமையாய்
எறும்பின் மழைக்கால உணவிற்கு துணையாய்
Veena Shankar: கரடு முரடான பாதையில் ஓர் தேடல் உணவிற்காக
தேடலுக்காக கால்கள் அமர மறுக்க
குடையானது ஓர் மெல்லிய இலையும்
அன்று தண்ணீரில் தத்தளித்த எறும்பிற்கு படகாய்
இன்றோ அதுவே குடையாய்
நட்பின் அடையாளமாய் காணவும் விழிகள் நிறைகிறது கண்ணீரால்
Vidhya Nivash: இங்கே அங்கீராத்திற்கு கூட பாரபட்சம் உண்டு,
எந்த அகங்காரமும் இல்லா எளிமையான எறும்பு
Veena Shankar: இந்த இலையை சுமப்பது எதற்கு?
வீட்டில் நுழையும் தண்ணீரை நிறுத்தவா?
வெப்பம் அதிகமானதால் அதை தணிக்க கூரை வேயவா?
பசுமையை என்றுமே மனிதனிடமிருந்து காக்ககவா?
காரணங்கள் பல மனதில் வந்த போதும் எறும்பின்
உழைத்து பிழை என்ற எண்ணம்
அதுவும் பிழையில்லாமல்
அடுத்தவரின் உழைப்பை திருடி
அவர்களுக்கு இழப்பை இழைக்காமல்
Vidhya Nivash: எளிமையிலும் வலிமை,
புத்தியால் சித்திப் பெற்ற கூட்டம்,
ஒற்றுமை என்ற ஆயுதம் போதும்,
துரும்பும் எறும்பும் சேர்ந்து வெல்லும் எப்படையையும்,உடல் வலிமை என்ற வேசம் தேவையில்லை
Vidhya Nivash: சிறுசேமிப்பு மற்றும் தகவல்தொடர்பின் குரு
Veena Shankar: புகைப்படக் கருவியில் சிக்கியவை
இவை இரண்டு
மாய வலையில் வீழாத இவைக்கு
தண்ணீரில் கண்டம்
தன்னை தீண்டியவனை ருசிப்பதால் எறும்புக்கு கண்டம்
மனிதன் அவன் துண்டிப்பதால் இலைக்கு கண்டம்
ஆனால் அவனுக்கு எப்போது விளங்குவது
பசுமையைத் துறந்தால் தன் கண்டத்திற்கு கண்டம் என்று
Vidhya Nivash: தேன் போன்ற உடல்,
சீண்டினால் தரும் வலி தேள் போல கொட்டும்
Veena Shankar: கொட்டும் மழையில் புற்றை விட்டு வெளியே வாராது
கொட்டு அடித்துக் கொண்டு தன் உழைப்பை தாராது
கொட்டி கொட்டி கொடுத்தாலும் தேவைக்கு மேல் தேடாது
கொட்டு வாங்கினாலும் மானிடன் மனநிலை என்றுமே மாறாது
Veena Shankar: இருட்டில் கொண்ட பயணம் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது

No comments:
Post a Comment