என் கேள்விக்கென்ன பதில்??
வெயில் நினைத்தும் - நீ வாடியதில்லை..
மழை நனைத்தும் - நீ துவண்டதில்லை..
இரவு -பகல் வித்தியாசமும் பார்த்ததில்லை....
எனக்காகவே நித்தமும்-
உழைக்கிறாய்- என் நிழலாய்...நின்றபடி!!...
நான் என்ன - தருவேன்..
என்னை தவிர...!!!...
இது என்மேல் கொண்ட -
காதலாலா..?..இல்லை...கடமையா?...
வினவுகிறேன் நான்-நெற்பயிராய்!!!..
விடையரியாது நிற்கின்றாய் நீ ..
என் துணையான -
சோளக்காட்டு பொம்மையாய்!!!!!
-Kiruthika


அருமை😊
ReplyDeleteஅருமை அருமை 👏👏👏👏❤️
ReplyDeleteஅழகான அர்த்தம் உள்ள கவிதை 💐
ReplyDelete