இயற்கை
அலைகள் தவழ்ந்திட
அகிலமெங்கும் ஒலித்திட
மேகங்கள் முழங்கிட - மழை
மேலிருந்து பொழிந்திட
பூக்கள் குளிர்ந்திட - வாசம்
பூமி எங்கும் பறந்திட
மழைத்துளி பெய்தது
உடலெங்கும் சிலிர்த்திட
தேனீக்கள் குவிந்திட
தேகமெங்கும் மகிழ்ந்திட
கண்களை கவர்ந்திட
காலமெல்லாம் இனித்திட
இயற்கையை ரசித்திட
இந்தக் கண்ணிரெண்டும் போதாதே!

ஆமா ஜெயா,நேரமும் பத்தாது இயற்கையை ரசிக்க 😊அழகான வரிகள்
ReplyDeleteS jaya very true and lovely lines.valar.
ReplyDelete