Thursday, August 27, 2020

சின்ன சின்ன ஆசைகள் by Kanchana

சின்ன சின்ன ஆசைகள்

                       -காஞ்சனா



பூக்கள் நிறைந்த


பாலைவனத்தில் உன்னோடு


சேர்ந்து தோட்டம்


அமைக்க ஆசைதான்.


வண்ணத்து ப் பூச்சிகளோடு


சிறகை விரித்து உன்னோடு


பறக்க ஆசைதான்.


மேகக் கூட்டங்களுக்கு நடுவில்


உன்னோடு ரோஜாகூட்டம்


அமைக்க ஆசைதான்.


நிலவின்வெளிச்சத்தில்


வானில் உன்னோடு


நட்சத்திரமாக இருக்க ஆசைதான்.


அதிகாலை வேளை


மார்கழி பனியில்


உன்னோடு கைகோர்த்து நடக்க ஆசை தான்.


போகும் இடம் தெரியாமல்


நேரம் அறியாமல்


உன்னோடு பேசிக்கொண்டு இருக்க ஆசை தான்.


இளவேனில் காலத்தில்


தூறும் மழை துளிகளோடு


உன்னோடு நனைந்து செல்ல ஆசை தான்.


ஏட்டில் எழுதிய


சின்ன சின்ன என் ஆசைகள்......


அனைத்தையும் நிஜமாகி கொண்டிருக்கிறேன் உன் கை கோர்த்து இன்று.


2 comments:

  1. உன் கைகோர்த்து செல்ல
    எனக்கு ஆசைதான்.-வளர்மதி.

    ReplyDelete
  2. அழகான ஆசைகள் அக்கா😊

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...