Wednesday, August 19, 2020

சைக்கிளுக்கு மரியாதை by Vedavalli Ramani, California, USA

 சைக்கிளுக்கு  மரியாதை !!

---------------------------------------------------

சைக்கிள் - ஏழை எளியவர்களின் வாகனம். ஒரு குடும்பத்தையும் அவரின் சுமைகளையும் சுமக்கும் வாகனம்.

1950களில் ஆசிரியர் வேலை பார்த்த எங்கள் தந்தை சைக்கிளில் தான் வேலைக்கு சென்று வருவார். டைனமோ இல்லாத காலத்தில் சைக்கிளின் முன் ஒரு திரி விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் இரவில் வருவார். பலமான காற்று அடித்து விளக்கு அணைந்தால் போலீசில் மாட்டிக்கொள்ளனும். 

சாலையில் எத்தனை சைக்கிள் சென்றுகொண்டு இருந்தாலும் எங்கள் தந்தையின் சைக்கிள் "ட்ரிங்க், ட்ரிங்க் "ஒலி கேட்டாலே அவர் வந்துவிட்டதை அறிவோம். அது ஒரு தனி ஒசை ! எனக்கு இசை !!

1980களில் பஜாஜ் ஸ்கூட்டர் தலையெடுத்தது . ஆர்டர் கொடுத்தால் கிடைக்க ஒரு வருடம் காத்து இருக்கணும். அதில் குடும்பமே சென்று வந்ததால் சைக்கிள் மவுசு குறைந்தது.

2000களில், சும்மா ஸ்கூட்டர்  வைத்து உள்ளவர்களையெல்லாம் "லோன் குடுப்போம்" என்று சொல்லி நான்கு சக்கர வாகனமான காரை வாங்க வைத்தார்கள். அதுவும் லாங் டிரைவ், பீச், பிக்னிக் என குடும்பத்துடன் போக உதவியாய்  இருந்தது.

சைக்கிள் ஏழைகளின் வாகனமானது. வாடகைக்கு சைக்கிள் கொடுத்தவர்கள் எல்லாம் கடையை மூடிவிட்டார்கள்.

2020இல் தற்போது லாக்டௌன் ஆகி 3 மாதமாக அமெரிக்காவில் இருக்கிறேன். கொத்தமல்லி வாங்கனும் என்றாலும் கார் எடுத்துதான் போவார்கள். அது அவசியமும் கூட. 

மூன்று மாதம் கழித்து லாக்டவுன் தளர்த்தப்பட்டது, மாஸ்க் போட்டு பக்கத்தில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி போக ஆரம்பித்தேன். அப்போது கணவன், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வரிசை வரிசையாக குடும்பத்துடனோ நண்பர்கள்,  அப்பா ,பையன்,அம்மா,பெண் என சைக்கிளில் போய்கொண்டு உள்ளார்கள். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. 

சைக்கிள் வாங்க இரண்டு மாதம் காத்து இருக்கனும். அவளோ டிமாண்ட் !!

உலகம் உருண்டை . மேலே போனவர்கள் கீழே வருவதும், கீழே உள்ளவர்கள் மேலே வருவதும் தொன்றுதொட்டு நடந்து வரும் செயல் .



எங்கள் அபிமான சைக்கிளுக்கு இப்போது மீண்டும் மரியாதை  !ட்ரிங்க், ட்ரிங்க்....வாங்க நாமும் ஓட்டலாம்.

- வேதவல்லி ரமணி, California, USA

(Publisher's thank you note: வணக்கம் அம்மா🙏...  In 80+yrs, your thought process and energy levels are amazing Amma...Privileged to have your article on the first day of launch of our blog here! நன்றி!நன்றி!! )

4 comments:

  1. அருமையான நினைவுகளைக் கிளறிவிட்டது இந்த பதிவு. எங்கள் ஊரில் இன்றும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டும் சிறு வயதினர் உள்ளனர். நானும் அப்படி ஓட்டியுள்ளேன். எவ்வளவு பெரிய காரில் சென்றாலும் மனதில் சைக்கிளுக்கு இருக்கும் மவுசு குறையாது.

    தாஹிரா பானு.

    ReplyDelete
  2. அருமை அம்மா..உங்களுடைய வரிகள் அழகு

    ReplyDelete
  3. அருமையான பதிவு அம்மா...

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...