ஆடலும் பாடலும்
அனைவருக்கும் வணக்கம்,
நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் ஆடல் மற்றும் பாடலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பல பெயர்கள் உள்ளன. அதற்கென்று பல கலைஞர்களும் உள்ளனர்.
அடிவயிற்றில் இருந்து பிறந்து உள்ள உணர்ச்சிகளுடன் இணைந்து பாடலாக வெளிப்படும். நாடி நரம்பெல்லாம் உச்சநிலை அடைந்து ஆடுவோம் எப்போது ஒன்றிலிருந்து விடுபடும் போது ஆடலும் பாடலும் தானாக வரும்.
நாம் சந்தோசமாக இருக்கும் போது இசையை ரசிப்போம் அதுவே வருத்தமாக இருக்கும் போது பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் தேடுவோம். இசை மனதை இயக்கக் கூடியது.
ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஆடுவோம் குறிப்பாக குழந்தைகள் சந்தோசத்தில் குதிப்பார்கள். ஆடலையும்,பாடலையும் ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
அதன் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா நாம் அனைவரும் அறிவோம் பரதநாட்டியம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தக் கலை பரதரால் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடல், கூத்து ,சதிர்,தாசி ஆட்டம் எனக் கூறப்பட்டது. ஆடலை மார்க்கி,தேசி என்றும் அதாவது கடவுளையும் அரசனையும் போற்றக்கூடிய நடனம். தாண்டவம் மற்றும் லாஸ்யம் இரண்டும் சேர்ந்தே நாட்டியம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின் பரதரால் உரைக்கப்பட்டதால் பரதநாட்டியம் ஆனது. நான்கு வேதங்களில் இருந்து வந்த நாட்டிய வேதம் என்று புராணம் கூறுகிறது.
தாண்டவம் அழித்தலைக் குறிக்கும் நடனம் சிவபெருமானுடைய சப்த தாண்டவங்களிலிருந்து ஏழு ஸ்வரங்கள் பிறந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் நவ தாண்டவங்கள் மட்டும் 12 தாண்டவங்கள் சிவபெருமானுடைய பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாக புராணங்கள் கூறுகின்றன. ஆனந்த தாண்டவம் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் பெரும் தவத்தால் கைலாய மலையில் சிவபெருமான் ஆடியதாக குறிப்புகள் உள்ளன. சிதம்பரத்திலிருந்து இவர்கள் புரிந்த தவத்தால் ஆனந்த தாண்டவம் வெளிப்பட்டதாக தில்லையில் கூத்தனே ,நடராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். இதில் சிவபெருமான் இறைவனின் ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல் , அழித்தல் ,மறைத்தல் மற்றும் அருளல் வெளிப்படுத்தியதாக உணரப்படுகிறது.
108 கரணம் சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது, பரதநாட்டியத்தில் அவை பல்வேறு பாவனைகளாக வெளிப்படுகின்றன.
பரதநாட்டியத்திற்கு முன் சதிராட்டம் மட்டுமே வழக்கத்தில் இருந்திருக்கிறது. தேவரடியார்கள் என்னும் ஒரு சமூகத்தை சார்ந்த பெண்கள் கடவுளையும், பின்பு அரசனையும் போற்றி பாட பயிற்சிக் கப்பட்டு, நடனமாடி வந்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் கருவறைக்கு மேலே உள்ள கோபுரத்தில் சிவபெருமானின் 108 கரணத்தையும் ராஜராஜ சோழ மன்னனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சமாதேவி தேவரடியார் பாவனைச்செய்ய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (உடையார் புத்தகம் குறிப்பு) பல கோயில்களிலும் இது போலவே 108 கரணங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அது நாட்டிய கலையாக மாறியது.
பாடல் ,தாளம் மற்றும் ஆடல் இவை மூன்றும் ஒருங்கிணைந்து நாட்டியம் ஆக வெளிப்பட்டது .நாட்டுப்புற இசை பல வகைகள் உள்ளன .அதுவே நடனம் ,நாடகம் என்று உருவெடுத்தது. பின் பல புதிய இசைக்கருவிகள் பிறந்தது, பல விதமான நடன பிரிவுகள் வந்தன.
இன்று ஆடலும் பாடலும் அருமருந்தாக பல நோய்களை குணப்படுத்துவதாக குறிப்புகள் உள்ளது.
ஒருவர் பாடும்போதும் ,ஆடும்போதும் உடலில் உள்ள அனைத்து நாளங்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு உடற்பயிற்சி நடனங்களும் வந்துவிட்டன எடையைக் குறைக்க. நம்முடைய அன்றாட வாழ்வில் பாடியும் ஆடியும் வேலைப்பளு சோர்வில்லாமல் கூடி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர்.இன்று அதற்காக பணம் கட்டி செல்கிறோம் உடற்பயிற்சி மையங்களுக்கு...
நன்றி
வித்யா.


ஆடலும், பாடலும் பதிவு அருமை வித்யா!
ReplyDeleteமிக்க நன்றி அக்கா😊
ReplyDeleteArumai vidhya
ReplyDeleteThank you 😊
ReplyDeleteHi,Vidhya,super
ReplyDeleteThank you Amma 😊
ReplyDeleteMay new words and information I learnt through u.thank u.valar.
ReplyDeleteThank you Valarmathy 😊
ReplyDelete