Wednesday, August 26, 2020

ஜன்னல் ஓரம் by Vidhya Nivash

ஜன்னல் ஓரம்


நான் ரசித்த முதல் ஜன்னல் அழகான மரச்சட்ட ஜன்னல் அதற்கு உயிரிருந்தது அதனால் தான் அதில்  கரையானும் வாழ்ந்தது..

மார்கழி மாதத்து குளிர்ந்த காற்றும்,ஒலிப்பெருக்கியில் வரும் பாட்டும் இன்னும் ரிங்காரமிடுகிறது ..

மாலை பொழுதில் எதிர் வெயிலும்,மழைக்காலத்து சாரலும் கண்ணில் நிற்கிறது...

அறியாத வயதில் ஜன்னல் மேல் ஏறி ஆ என்று கத்தும் சுகமே தனி..

அடுத்து அம்மாச்சி வீட்டு மாமரத்தின் ஓர ஜன்னல்,இன்னொருப்புற ஜன்னல் பல வீட்டு கதை சொல்லும்...

பள்ளியில் சுவரொட்டிய ஜன்னலில் வரும் பேச்சு குரல்கள் நினைவுபடுத்தும் வீட்டை ஒரு நிமிடம்..

அடுத்து வந்தது கிரில் வைத்த ஜன்னல்,பக்கத்து வீட்டு அண்ணன் போட்ட இளையராஜா பாட்டை ,காதை கூர்மையாக்கி ரசித்த ஞாபகம்..

ஜன்னலில் சாய்ந்து படிக்கும் போது மாடியில் ஏறுபவர் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஞாபகம்..

கால்கடுக்க பேருந்தில் நின்று,நெரிசலில் நசுங்கி, கடைசில் கிடைக்கும் ஜன்னல் ஓர சீட் சொர்க்கம்,அதுவும்கூட வரும் ரேடியோ பாடல் காற்றில் பறக்க செய்யும் மனதை..

முடியாத போது படுக்கையில் இருந்து ஜன்னல் வழியே தெரியும்  நிலாவும், நட்சத்திர கூட்டமும் தனி கதை சொல்லும்..

மிகப்பெரிய ஆளுயர ஜன்னல் இப்போ, காலையில் வந்து என்னை எட்டி பார்க்கும் புறாக்கள்,குருவின் பாட்டும்,சிலிண்டர் வண்டியின் மணியோசையும் அழகு தான்!!

இப்போது என்னுடைய பிள்ளைகள் கேட்கிறாங்க window💺...ஜன்னல் ஓர பயணம் தொடர்கிறது...

8 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...