Monday, August 24, 2020

Happiness by Vidhya Nivash

                                 ஆனந்தம்


அனைவருக்கும் வணக்கம்,

                  ஆனந்தம் எங்கே இருக்கிறது! வேற எங்கும் இல்லை நமக்குள் !!

 ஆனந்தத்தை அடைய இரண்டே வழிகள் எந்த செயல் நடந்தாலும் ஒன்று உன் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மற்றொன்று உன் கட்டுப்பாட்டில் இல்லையா ...

   உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அதில் வரும் விளைவுகளுக்கு முதல் காரணம் நீங்கள் தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் முழு மனதுடன் ..அதை விட்டு விட்டு இப்படி நடந்து விட்டது என்று நினைத்தே வருந்த அது ஆழ் மனதில் பதிந்துக் கொண்டே நேரம் வரும் போதெல்லாம் சோகத்தை தரும்...ஒப்புக் கொள்ளுதல்,நம் கட்டுப்பாட்டில் ஒன்று உள்ளது மற்றும் அதற்கான முயற்சி எல்லாமே மகிழ்ச்சி தான்.

நாம் நம்முடைய தவறை ஒப்புக் கொள்ளும் போது மற்றவருக்கு சுட்டிக்காட்ட வாய்ப்பே இல்லை..ஆனந்தம் தான்.

மற்றொன்று நம்முடைய கட்டுப்பாட்டிலே இருக்காது அதை விட்டு விலகி செல்லாமல்,அதற்கும் வருந்துவோம். எடுத்துக்காட்டாக இப்போதய  சூழ்நிலை உலக அளவிலானது அனைவரும் போராடி கொண்டிருக்கிறோம்..ஒவ்வொருவரும் தம்மாலான பல முயற்சி களைச் செய்து கொண்டு இருக்கிறோம் அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி.

குழந்தைகள்கூட கீழ்ப்படியவில்லை என வருந்த வேண்டாம் மகிழ்ச்சியாக பல புதிய முயற்சிக்களை செய்யுங்க அதில் தோல்வியே இல்லை அவர்கள் நலனுக்காக நாம் செய்யும் மகிழ்ச்சி...நாம் தான் செய்யவேண்டும்.காலம் வரும் போது புரியும் அவர்களுக்கும்..

பழைய பதிவுகளை அழித்து மற்றும் ஒத்து கொண்டு.பல புதிய மகிழ்ச்சியான முயற்சிக்களுடன் ஒவ்வொரு புதிய நாளையும் வரவேற்று மற்றும் நன்றியுடன் முடிப்போம்!

நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை உணர்வோம்!

  குறிப்பு: முகநூலில் படித்ததில் பிடித்தது அதனுடன் என்னுடைய கருத்தையும் இணைத்தேன்😊

            

7 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...