Thursday, September 10, 2020

உறவுகள் - பலமா?பலவீனமா? by Jaya

                    *உறவுகள் - பலமா? பலவீனமா?

                                                                  -ஜெயா



உறவுகள் நமக்கு பலமா?

நமை வீழ்த்தும் பாலமா?


பலமாய் நினைக்கும் உறவுகள் 

பல சமயங்களில் நம் தூணாய்

சில சமயங்களில் நம்மில் 

பலவீனமாக 

நம்மை முற்றுகையிடும்


பலவீனமான உறவை பலப்படுத்த முயலுகையில், சிற்சில நேரம் 

பலவீனமாய் நினைத்த மனது 

பலங்கொண்டு மாறும்

பலவீனம் ஊனுக்குத்தான் 

மனதிற்கில்லை


மறவாதீர்.......

உறவுக்கு கை கொடுப்போம், 

உறுதிக்கு தோள் கொடுப்போம், 

பலப்படுத்தி பயனுறுவோம்

வாழ்க்கை ஒரு முறைதான்

வாழ்ந்து தான் பார்த்திடுவோம்!!!

2 comments:

  1. நல்ல பதிவு ஜெயா.....வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்ந்துதான் பார்ப்போம்!

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...