Tuesday, September 22, 2020

நலம் நாடும் நட்பு(பூ) by Jaya

                                     *நலம் நாடும் நட்பு(பூ)*

                                                                            -ஜெயா



தன்னலம் பாறாது, சினேகம் பாராட்டும் நட்பு...


நண்பருக்காய், தன் மகிழ்வை இழக்கும் நட்பு...


நண்பனின் உயர்வில் மகிழ்ந்தாடும் நட்பு...


அவரின் துயரில் உளம் வாடும் நட்பு...


உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசா நட்பு...


உள்ளூறும் அன்பாலே 

மகிழ வைக்கும் 

மெய் நட்பு...


வா என்றாலும் வருவதில்லை,

கேட்டாலும் கிடைப்பதில்லை...


புறப்பார்வைக்கு அல்லாது

பிறர்பார்வைக்கும் அல்லாது


அகப்பார்வைக்கு, அன்போடு இருப்பது

ஆத்மார்த்த நட்பு


ஆயிரம் மைல்கள் தாண்டி இருப்பினும்

மனதால் ஒருவரை ஒருவர் தீண்டி இருப்பது

இதயம் நிறைந்த நட்பு


நிறம் கண்டு வருவது அல்ல நட்பு

உரம் கண்டு வருவது நட்பு


பணம் கண்டு வருவது அல்ல நட்பு

பண்பான குணம் கண்டு வருவது நட்பு


நட்புக்கு இலக்கணமாய் நண்பர்கள் இருக்கையில்


நாளைய உலகில் நம் நட்பு இலக்கியமாய் இருக்கும்...

வாழ்வின் அங்கமாய் ஜொலிக்கும்


உயிர்ப்பான நட்புக்கு உண்மையான அன்பு உரமாகட்டும்


உண்மை நட்பு நம் அனைவருக்கும் என்றும் வரமாகட்டும்..

3 comments:

  1. Super pa..ஆயிரம் மையில்கள் தாண்டி இருப்பினும்...இதயம் நிறைந்த நட்பு...அருமை 🙂

    ReplyDelete
  2. அருமை ஜெயா.....அழகான பூ நட்பு(பூ)

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...