*என் மகாகவிக்கு......என் வந்தனங்கள்*
-ஜெயா
மகாகவியே.......
நின்வரிகளைக் கொண்டு என் வரிகளை துவக்குவதா....இல்லை
என் வரிகளால் உமை அர்ச்சிப்பதா
சொல் மகானே,
தமிழால் உனக்கு பெருமையா ??
உன்னால் தமிழுக்கு பெருமையா ??
சுதந்திரப் போரில் வீறு கொண்டு வெள்ளையனை....விரட்டிய நின் வரிகள் அனைவர் உள்ளத்திலும்
நீங்கா 'தீ'
அனைத்து மதத்தவர்களுக்கும்
கவிசொன்ன மகான் நீ
நின் கவிகள்
எண்ணிக்கையில்
சொற்பம் ஆயினும்
எதையும் விடவில்லை நீ,
கவிஞானி நீ,
கலைஞானி நீ
விஞ்ஞானமும் சொன்னாய்,
மெய்ஞானமும் சொன்னாய்
அஞ்ஞானம் களையவும் சொன்னாய்
பெண்களின் விடுதலையைப் பறைசாற்றி
புதுமைப் பெண்களாய் நிமிர்ந்த
நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய்
உலவவிட்ட புதுமைக் கவி நீ
சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்
நாட்டுப் பற்றை ஊட்டியவன் நீ
பாப்பா பாட்டு பாடிய பாட்டுடைய தலைவன் நீ
கண்ணனையும், கண்ணம்மாவையும்
நீ காதலித்தது கண்டு, அந்தக்
காதலின் மேல் காதல் கொண்டவர்
எத்துனை பேர்??
நீ மறைந்தாலும் நின் வரிகளால் மறவாமல் என்றும் எங்கள்
நெஞ்சில் நீங்கா இடம்
பெற்ற மகாகவியே,
எங்கள் பாரதியே
தமிழை வாழ வைக்கும் முண்டாசிக்கவியே
வணங்குவோம்
என்னாளும்!!!!!
பாரதியின் நினைவு நாளில்
என் அர்ப்பணம்
வரிகளால் சமர்ப்பணம்🙏🙏🙏

ஒவ்வொரு வார்த்தையும் அழகு..
ReplyDeleteமகாகவியினை வார்த்தைகளால் அர்சித்த ஜெயாவிற்க்கு என் மனமார்ந்த பாராட்டுகள் 👏❣👏
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDelete