Tuesday, September 8, 2020

பெண் சக்தி by Susila

 பெண் சக்தி


pc: Kirthy Manoharan, Abu Dhabi

மங்கையராக பிறப்பதற்கு நல்ல

மாதவம் செய்திட வேண்டும் அம்மா!


ஆம், நமக்குள்தான் எத்தனை சக்தி

மாதவத்தால் கிடைத்த ஆற்றல்

நமக்குள் எண்ணிலடங்காதது.

பெண்ணே! நீ அகிலம்

சுவாசிக்கும் மூச்சுக் காற்று,

உன்னை உணர்ந்தவர்களுக்கு

மட்டும்தான் தெரியும் உன் ஆற்றலின் வல்லமை

நீ இல்லையென்றால் இந்த பிரபஞ்சம் நின்று போய்விடும்.


பெண்ணே!பொறுப்புடன் கூடிய

சுதந்திரத்துடன்,

அடக்கத்துடன் கூடிய அறிவுடன்,

தன்னம்பிக்கையுடன் கூடிய தைரியத்துடன்,

துவளாத துணிவுடன்,

என்றும் மகிழ்ச்சியுடன்,

மங்காத புன்னகையுடன்,

விண்ணிலும், இந்த மண்ணிலும்

ஜொலிக்கும் WIN மீன்களாக இருப்போம்.

என்றும் அன்புடன்,

ந. சுசிலா.


Special note from Editor:

 Kudos to Susila for her first attempt! சுசீலாவின் முதல் படைப்புக்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் பல கருத்துகளை பதிவு செய்ய விழைகிறோம்.

4 comments:

  1. பொறுப்புடன் கூடிய சுதந்திரம்,அடக்கத்துடன் கூடிய அறிவு...அருமை😊

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...