அனைவருக்கும் வணக்கம்
அருண்மொழி பட்டன் கோயில் கட்டும் இடத்திற்கு செல்கிறான். நடனம் ஆடுபவர்கள் தங்களுடைய வீட்டைப் பற்றி குறை கூறுகிறார்கள். நாங்கள் இரண்டு முறை ஆடினால் வீடே கீழே விழுந்துவிடும் போல் உள்ளது. இப்படியா எங்களுக்கு வீடு தருவீர்கள் ??என்று ஆளுக்கு ஒரு குறை கூறினார்கள்.
நேர் எதிர்புறம் சிற்பிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது .அவர்கள் எப்பொழுதும் கையில் சுத்தியல் வைத்து பாறைகளை செதுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள் .அவர்களுக்கு எதிரில் இவர்கள் ஆட்டமும் பாட்டமும் கூத்துமாக இருப்பது அவர்களை எரிச்சல் மூட்ட செய்தது. இதை எண்ணி பெருந்தச்சன் பெரும் கவலையில் இருந்தார்.
அப்பொழுது அங்கே மன்னர் புலவர் மாதிரி மாறுவேடம் போட்டு நோட்டமிட வந்திருந்தார் .அங்கே பெருந்தச்சன் மகனான சீராளன் புலம்பிக் கொண்டிருந்தான் .மன்னருக்கு மட்டுமா? பொறுப்பு இருக்கிறது. என் தந்தைக்கும் அல்லவா ?மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது .ஒரு பக்கம் நடனமாடுபவர்கள் ,மறுபக்கம் கைதிகள் ,இதற்கிடையில் சிற்பிகளை சரியான வழியில் நடத்தி சென்றால்தான் கோயிலை நல்லபடியாக முடிக்க முடியும்,என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். சீராளன் இடம் மன்னர்பேச்சுக் கொடுத்தார்.
முதலில் யார் என்று தெரியவில்லை. பிறகு அவர் மன்னர்தான் என்ற கண்டுபிடித்து விட்டான் .அங்கே தங்கியிருக்கும் கைதிகளிடையே சென்று சண்டை போட சொன்னார் .பிறகு அங்கிருக்கும் படைவீரர்கள் பிடித்து அடித்தார்கள். அந்தக் கூட்டத்திலேயே அடைத்து வைத்தார்கள். கீழ சாளுக்கியம் ,மேல சாளுக்கியம் கைதிகள் அவனுடன் பேச்சு கொடுத்தார்கள். நீ யார் என்று கேட்டார்கள் . நான் ஒரு சிற்பி ,ஒவியம் வரைபவன் என்று கூறினான் .எந்த நாட்டை சேர்ந்தவன் ,சோழ நாட்டை சேர்ந்தவன் .இந்த நாட்டை சேர்ந்த சிற்பிக்கு இவ்வளவு மரியாதையா?? எங்கள் ஊரில் சிற்பி என்றால் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் .என்று ஆளுக்கு ஒரு கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.
விகர்ணன் என்னும் கைதி ஒரு சந்தேகம் இருக்கிறது என்று கேட்டான் .ஏழு பனையுர கோயில் என்று சொல்கிறார்கள் .ஆனால் அஸ்திவாரம் இவ்வளவு சின்னதாக போட்டிருக்கிறார்கள் .குறைந்தபட்சம் மூன்று அடியாவது தோன்ற வேண்டாமா ?என்று கேட்கிறான் . சீராளன் நீங்கள் என்ன சிற்பியா? என்று கேட்கிறான் ,அந்த கைதியை பார்த்து .உடனே அவன் ஒரு ஓலையை எடுத்துக் கொடுக்கிறான் .இவன் ஒரு சிற்பி இவனை கோயில் கட்டும் வேலையில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று கடிதம் எழுதிக் கொடுத்திருந்தார் இளவரசன். மற்றொரு கைதி 7 பனை உயரம் கட்டுவதற்கு ஒரு பனை உயரத்தில் 7 கோயில் கட்டலாம் என்று கூறுகிறான் .இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை சொல்லினர்.
அவர் அதே வேடத்தில் கம்மாளர்கள் குடியிருப்புக்கு சென்றார் . அங்கே மக்களின் கோயில் கட்டுவதற்கான கருத்துக்களை ஆராய சென்றார். அங்கே கம்மாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். நாங்களோ இங்கு எந்த வேலையும் இல்லாமல் வருந்தி கொண்டிருக்கிறோம் .அரசர் எதற்காக இப்பொழுது கோயில் எழுப்ப போகிறார் . எங்களுக்கு சரியான மரியாதையில்லை ,நோய் வாய்ப்பட்டு இருக்கிறோம் ,என்ற தங்களுடைய குறைகளை புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
அதுமட்டுமில்லாது அந்தணர்களுக்கு தான் இப்பொழுது முழுமரியாதையும் அவர்கள் இல்லையெனில் நாடே இல்லை என்பது போல் இருக்கிறது .ஏன் அவர்களுக்கு மட்டும்தான் சலுகைகளா, நாங்களும் கற்களாலான வீடு கட்டக் கூடாதா ,வீட்டிற்கு வெள்ளை பூசக்கூடாதா,மேல் சட்டை ,பூணூல் அணியக் கூடாதா எங்களுக்கும் இந்த உரிமைகள் வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னரும் அவர்களை கோபப்படும்படி மன்னர் கேள்விகளை கேட்டார் .அதில் ஒரு இளைஞன் நாங்கள் இது மாதிரி எங்களுடைய உரிமைகளை கேட்பது என்ன குற்றம் என்று மன்னரை எதிர்த்து மிகவும் கோபமாக பேசினான்.கடைசியாக வந்திருப்பவர் மன்னர்தான் என்று மக்கள் உணர்ந்து அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். இதில் சேனாதிபதியான பிரம்மராயர் அந்தணர் என்பதனால் பல கேள்விகள் அவரை நோக்கியும் பாய்ந்தன. கடைசியாக மன்னர் நீங்களும் கற்கள் வைத்த வீடுகளை கட்டிக் கொள்ளுங்கள் முன்வாசல் ,பின்வாசல் ,திண்ணை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்பினார் .
பிரம்மராயர் மிகவும் வருத்தப்பட்டார் இவர்கள் இதோடு மட்டும் நிற்க மாட்டார்கள். அடுத்தடுத்த சலுகைகள் இருக்கும் கண்டிப்பாக உங்களிடம் வந்து நிற்பார்கள் ,என்று புலம்பிக் கொண்டிருந்தார் .மற்ற சமூகத்தினரும் எங்களுக்கும் இதே போல பல உரிமைகள் வேண்டும் என்று பல பிரச்சனைகள் இதனால் கிளம்பும்.
சிதம்பரத்திலிருந்து வந்த தேவரடியார் ஆன கரியமாணிக்கம் ,விகர்ணன் சிற்பியும் சந்தித்தனர் .அவர்கள் வீட்டிலிருந்த குறைகளை எல்லாம் விகர்ணன் தீர்த்து வைத்தார். அவர்களிடையே நட்பு உண்டானது. மன்னர் கைதிகளின் கூட்டத்தில் நடுவே போய் சென்று நின்று இங்கே சரியான உபசரிப்பு உங்களுக்கு இல்லை தங்குமிட வசதியும் தரப்படவில்லை .
இறைவனுக்கு செய்யும் தொண்டுகளில் இவையாவும் குறைகள் அல்ல என்று மிக உருக்கமாக கைதிகளுக்கு இடையேகிடையே பேசினார். அருள்மொழி பட்டணம் அங்கே நிலைமை சரியில்லாத காரணத்தினால், எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காக அங்கேயே அவர்களுடன் தங்க முடிவு செய்தான் .
இதற்கிடையில் மழை பெய்த காரணத்தினால் கைதிகளும் தென்னந்தோப்பில் இருக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். உடனடியாக அனைவரும் வரிசையாக அரண்மனை நோக்கி அழைத்து செல்லப்பட்டனர். 10,000 கைதிகளும் அரண்மனைக்குள்ளேயே ,வரலாற்றில் இது ஒரு பெரிய செய்தி .வாசல் கதவு மூடப்பட்டது மக்கள் யாரும் உள்ளே வராதபடி தடுக்க பட்டார்கள்.
அரண்மனைக்குள்ளே கைதிகள் ஒவ்வொரு இடமாக மிகவும் ஆச்சரியத்துடன், இவ்வளவு பிரம்மாண்டமான அரண்மனையை நாங்கள் பார்த்ததில்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையும் கண்டு வியப்படைந்தனர். அருண்மொழி பட்டன் ,பிரம்மராயர் மிகவும் வருத்தம் அடைந்தார்கள் இது என்ன இப்படி மன்னர் சரியான பாதுகாப்பு இல்லாமல் ,யார் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்கள்.
மன்னரோ மனைவியரோடு திருத்தொண்டர் புராணம் கதை கூறி பரவசப்பட்டு கொண்டிருந்தார்.ஒரே நாளில் உயரமான கொட்டகை கைதிகளுக்கு தயாரானது.
கருவூர் தேவருக்கு அதிகாரச்சி ஒருவரின் மூலமாக இங்கே தங்கி இந்தக் கோயில் பணியை முடித்து கொடுக்கும்படி காளியின் கட்டளை வருகிறது.
கருவூரார் பெருந்தச்சரை சந்திக்கிறார்.எப்படி கருவறையில் லிங்கத்தை வைக்கப் போகிறார்கள் என்று ,பலவற்றையும் விசாரித்துவிட்டு. குறிப்பாக கோயில் வரைபடத்தை வாங்கிப் பார்க்கிறார் .
கடைசியாக கருவூர்த்தேவர் அங்கு இருக்கும் கைதிகளின் நடுவில் சென்று அமர்ந்து அங்கேயும் நோட்டம் இடுகிறார்.
அனைத்தையும் முடித்து ஒரு பக்கம் தேவரடியார்கள் ,இன்னொரு பக்கம் இந்த கைதிகள் , சிற்பிகள் அனைத்தும் இறைவா உன் போக்கிலே நடக்கப் போகிறது என்று வானத்தைப் பார்த்து கும்பிடுகிறார். மன்னனோ அவனுடைய பழைய வேகத்திலிருந்து குறைந்து அமைதியாக ,கோயில் கட்டும் வேலையில் ஆழ்ந்து இருக்கிறான். கடைசியாக உணர்வான் எது இறைமை என்று.
மேலும் ஆயிரம் பேருடன் ராஜேந்திரன் தஞ்சைக்கு வருவதாக செய்தி வருகிறது .இதை கேட்ட சேனாதிபதி என்னுடைய பேச்சை இளவரசன் கேட்கமாட்டான் .நீயாவது உன்னுடைய நண்பனுக்கு அறிவுரை கூறு என்று மகனிடம் கூறுகிறார்.
இளவரசர் தஞ்சையின் எல்லையில் இருக்கும் கிராமத்தில் நெசவாளர்களை சந்தித்து அங்கே இருக்கும் குறைகளை கேட்கிறார் .மக்களும் இளவரசன் என்று அறியாமல் பலவற்றை கூறுகின்றனர். கடைசியாக நெகிழ்ச்சி அடைந்து இளவரசரை போற்றுகிறார்கள். அங்கே இருக்கும் தேவைகளை நிவர்த்தி செய்துவிட்டு.
அங்கிருந்து கம்மாளர்கள் வாழும் கிராமத்திற்கு ராஜேந்திரன் செல்கிறார் .முடங்கிப் போய் கிடக்கிறார்கள் , போர் இல்லை என்றால் தொழில் செய்ய கூடாத அங்கும் யாரும் ராஜேந்திரனை அறியவில்லை. இப்பொழுதே உடனடியாக 1000 ஈட்டிகள் செய்வதற்கு நான் உத்தரவிடுகிறேன் என்று கூறுகிறார் .அதன் பின்னரே மக்கள் உணர்ந்து ஆரவாரம் செய்கிறார்கள் .பின்பு அவர்கள் கோரிக்கையை ராஜேந்திரனிடம் சொல்கிறார்கள் .ராஜேந்திரன் அவர்கள் மீது உள்ள பாசத்தால் அனைத்து கோரிக்கைகளையும் முக்கியமாக பூணூல் அணிவதற்கு வாக்குறுதி கொடுத்து விடுகிறார். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவி விடுகிறது.
இந்த செய்தியை மன்னருக்கும் பஞ்சவன்மாதேவி காதுக்கும் சென்றடைகிறது. உடனடியாக பஞ்சவன்மாதேவி இளவரசருக்கு ஒரு ஓலையில் எழுதி அனுப்புகிறார். அதில் உன்னுடைய தந்தை கோயில் கட்டுவதில் மிக ஆர்வமாக இருக்கிறார் .அவரே நீ வந்து காண்பாய் என்று ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதி அனுப்பியிருந்தார்.
கோயில் கட்டும் இடத்தில் தந்தையும் மகனும் சந்திக்கும் வேலை அவ்வளவு ஆர்வமாக இருந்தது. மக்கள் அனைவரும் கண்டு பரவசப்பட்டனர் .அவர்கள் இரண்டு பேரும் கட்டி தழுவிக் கொண்டார்கள்.
பிறகு சிற்றன்னையை தனிமையில் சந்திக்கிறார் இளவரசன். அங்கே இளவரசனிடம் பஞ்சவன்மாதேவி நீ செய்வது சரியா ? தந்தை இருக்கும் பொழுது நீ உனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாய் ,என்று சரமாரியாக கேள்விகளை எழுப்புகிறார் .
அப்பொழுது ராஜேந்திரன் கம்மாளர்கள் தான் போருக்கு மிக முக்கியமானவர்கள். ஆனால் இங்கேயோ அந்தணர்கள், அவர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள் .அவர்கள் இல்லையேல் தேசமே இல்லை என்பது போல் உள்ளது. இது தந்தையின் ஆட்சிக் காலத்தில்தான் நடக்கும், என் ஆட்சியில் இவை யாவும் மாறும் என்று தன்னுடைய கருத்துக்களை கூறுகின்றான்.
தீப் போல் ஊர் முழுவதும் பரவுகிறது இந்த பிரச்சனை.அந்தணர்களுக்கும் ,கம்மாளருக்கும் சண்டை உருவாகிவிட்டது.வயது முதிர்ந்த அந்தணர்கள் தெய்வ வழிபாடே நமக்கு முக்கியம் ,ஏன் தேவையில்லாமல் இந்த விஷயங்களுக்கு நாம் போட்டி போடக் கூடாது என்று கூறுகின்றனர். அதைக்கேட்ட இளைஞர்கள் துள்ளி எழுந்தனர்.
இதேபோல் கம்மாளர்களிலும் வயது முதிர்ந்தவர்கள் மண் வீடும், இந்த உடையும் வேட்டியும் ,செருப்பில்லாமல் மண்ணில் வேலை செய்வதுதான் நமக்குப் பொருந்தும். கல் கொண்டு வீடு கட்டினால் அது ரொம்ப சூடு நம்முடைய உடல்நிலைக்கு ஒத்துவராது. நாம் எப்பொழுதும் நெருப்பில் வேலை செய்யப் போகிறோம், இந்த மாதிரியான சூழ்நிலைகள் தான் நமக்கு உகந்தது .எப்பொழுதும் தண்ணீரிலே இருக்கப்போகிறோம் இதில் செருப்பு அணிந்து வேலை செய்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள் .தேவையில்லாமல் இப்படி சண்டை போடுவது தவறு.இதை யாரும் கேட்க தயாராக இல்லை.
கடைசியாக சேனாதிபதி மன்னரை சந்திக்கிறார். மக்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடு. கோயில் கட்டுவது என்பது என்னுடைய ஆசை மட்டுமல்ல ,இந்த தேசத்தின் பலம் ,அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் .இதற்கு எதிராக யார் இருந்தாலும் நான் வெறி பிடித்தவனாக மாறிவிடுவேன் என்று கூறிவிட்டு . உடனடியாக அரச அவையை கூட்டுங்கள் .குந்தவைப் பிராட்டியையும் அழையுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
நன்றி.
இரண்டாம் பாகம் முடிவு பெற்றது மீண்டும் மூன்றாவது பாகத்தில் சந்திப்போம்.....
Click here for Udayar audio book part 2:2👇

Super
ReplyDeleteThank you Amma
ReplyDelete