பெண்ணெனும் பெரும் சக்தி
அனைவருக்கும் வணக்கம்,
சில நாட்களுக்கு முன் கார்கில் கேர்ள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .அதில் ஒரு பெண் எவ்வாறு போராடி ஓர் விமானி ஆகிறாள். குறிப்பாக கார்கில் போரில் பங்கு பெறுகிறாள் இதுதான் கதை. அதில் அவளுடைய தந்தை முழு உறுதுணையாக இருக்கிறார். அவள் துவண்டு போகும் போதெல்லாம் முயற்சியை மட்டும் கைவிடாதே என்று அறிவுரை கூறுகிறார்.
" Her safety is more important than her happiness "
இது மற்ற அனைவரின் கருத்து அவளை பற்றி.இதுபோல் பல திரைப்படங்கள் பெண்கள் விளையாட்டு துறையில் படும் பாடு பற்றி வெளிவந்துள்ளன.
எப்போது நிற்கும் இவை!!!
பெண்களிலே வேலைக்கு செல்பவர்கள், செல்லாதவர்கள் என்று பலர் பேசுகிறார்கள்.
என்னுள் நீண்ட நாட்களாக அது ஒரு கேள்வியே!!!
எங்கே வந்தது அந்த வேறுபாடு ,இரண்டுமே ஒன்றுதானே?
குடும்ப சூழ்நிலை மற்றும் சில காரணங்களுக்காக வெளியே சென்று தன்னுடைய தனித்திறமையை ,பல போராட்டங்களுக்கு இடையில் நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை தான் வீட்டில் இருக்கும் மகளிரும் புரிகின்றனர் .
ஆனால் வீட்டில் இருப்பவர்களோ எங்கே வாய்ப்பு கிடைக்கிறது என்று காத்திருந்து நிறைய இடங்களில் அது தங்களுடைய திறமை என்று ஏற்றுக் கொள்ளப்படாமலே.. வெளிப்படுத்தி கொண்டுதானிருக்கிறார்கள்.
அதற்காக நான் ஒன்றும் வெளியே சென்று வேலை புரிபவர்களுக்கு எதிரி அல்ல. அவர்களும் தங்களுடைய கடமையை ,திறமைகள் பலவற்றையும் வெளிப்படுத்த ..அதுவும் கடுமையான சூழ்நிலையில் அங்கீகாரம் கிடைக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பலதுறைகளில் பெண்கள் வளர்ச்சி அடைய மிகவும் போராடுகிறார்கள் .ஆணாக இருந்தாலும் ,சரி பெண்ணாக இருந்தாலும் சரி தன்னை விட ஒருபடி வளர கூடாது.. குறிப்பாக அது பெண்ணாக இருந்தாள் முளையிலேயே கிள்ளப்படுகிறது. எத்தனை பாரதி வந்தாலும் அடங்காது!!!
ஒத்துக்கொள்ள முடியாது ,நிலாவில் சென்று வாழ்ந்தாலும் பெண்ணின் அடிமை தன்மையை மாற்ற முடியாது . படிக்காதவர் முதல் படித்தவர் வரை பெண்களின் வெற்றியை முழுமனதோடு ஏற்க முடியாது . பெண்களின் பாதுகாப்பு என்று சுட்டிக் காட்டினாலும் அது ஒருவிதமான பயமே அவர்களிடம்...
ஆண்களும் போராடி தான் முன்னேறுகிறார்கள், முழுமனதோடு ஒத்துக்கொள்கிறேன். பெண்கள் என்றால் அதிகம் அதுவும் வேலை செய்யும் இடங்களில் பெண்களே பெண்களுக்கு முதல் எதிரி இன்றும் தொடர்கிறது அதிலும் இப்பொழுது கல்யாணம் ஆனவர் ,ஆகாதவர் என்ற வேறுபாடு வேறு ,அவ்வளவு முட்டாள்தனம் மடிந்து இருக்கிறது.
கல்லூரியிலே எதற்கு இப்படி படிக்கிறீர்கள் வழியை விடுங்க, எப்படியும் எல் கே ஜி டீச்சராக இது அதிகம் என்று காதுபடவே கேட்டிருக்கிறேன்.
அக்காலத்தில் சென்று பாருங்கள் ,எல்லோருடைய பாட்டியும் கண்டிப்பாக இரும்பு மனிதர்கள். வீட்டு வேலையும் ,ஆண்டிற்கு ஒரு குழந்தை, அதில் எது சாப்பிட்டது என்றுகூட தெரியாது அந்த அளவிற்கு கடும் உழைப்பாளிகள். பல போராட்டங்கள் அதில் தங்கள் பிள்ளைகளைக் கரை சேர்த்து இருக்கிறார்கள். சில இடங்களில் கணவர் வெளியூரில் வேலை செய்வார் .அப்பொழுது முழு பொறுப்பும் அவர்கள் தலையிலே. வீட்டு வேலை, வயல் வேலை ,தோட்ட வேலை , மாட்டுத் தொழுவ வேலை ,என்று பல...
அவர்கள் மட்டுமா? உங்களுடைய குடும்பத்தையே பாருங்கள் அம்மா, மாமியார் ,சித்தி ,அத்தை ,பெரியம்மா, அக்கா என்று எண்ணிலடங்கா மங்கையர்க்கரசிகள் ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு திறமைகள் , பலவும் தங்களுடைய விருப்பு வெறுப்பு தெரியாது, மக்களை வளர்த்திற்கும் இரும்புத் தூண்கள்.
ஆனால் எங்கே கிடைத்துள்ளது பெண் சுதந்திரம் இன்றைய சூழ்நிலையில் அரசு வேலைகளிலா? விளையாட்டு துறைகளிலா ? அன்றாட வாழ்விலா ? ஒவ்வொரு வெற்றியாளர் பின்பும் ஆயிரம் சோகங்கள் இருக்கும்.
ஆரோக்கியமற்ற சுதந்திரம் மட்டுமே கிடைத்துள்ளது ,மொழியில் ,தேவையில்லாத இடங்களில் ஆடைகளில், திருமணத்தில் என்று பல பல தவறான அறிவுரைகளால் பலரது திருமணங்கள் விவகாரத்தில் முடிந்துள்ளது. அதில் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகள்
எத்தனை பேர் சீர்திருத்த பள்ளி வரை செல்கிறார்கள்.. அதை தவறாக பயன்படுத்தும் பல குள்ளநரி கூட்டங்கள்.
பல முத்துக்களும் ரத்தினங்களும் இருக்கின்றனர் கணவர்கள், அப்பாக்கள், தாத்தாக்கள் ,மாமாக்கள்,மாமனார்கள் ,பெரியப்பாக்கள் ,சித்தப்பாக்கள் ,அண்ணன்கள், இவர்கள் பல மங்கையர்கரசிகளுக்கு உறுதுணையாக உன்னால் முடியும் முயற்சியை விட்டு விடாதே என்று தங்களுடைய விருப்பு வெறுப்புகளை விடுத்து குடும்பப் பொறுப்புகளை குறிப்பாக குழந்தைகளை வளர்த்து திருமணம் ஆனபின்பும் பெண்கள் சாதிக்க ஊன்றுகோலாக விளங்குகின்றனர்.
ஒரு பெண் வெளியையும் வீட்டுக்குள்ளேயும் சாதிக்க ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவரும் முதலில் ஆதரிக்க வேண்டும் அப்பொழுது தான்,அது முத்தாக வெளிப்படும்.
இல்லை என்றாலும் பெண் சக்தியின் வடிவம் , அவள்தான் அண்டத்தின் இயக்கம், அவள் எங்கிருந்தாலும் சூரியன் போல் பிரகாசிப்பாள்!!!
மிக்க நன்றி.
வித்யா.

வித்யா ரொம்ப அருமையான பதிவு வித்யா, பெண்மையை ரொம்ப அழகாக விவரத்திருக்கிறாய் வித்யா, பாராட்டுகள் வித்யா 👏👏
ReplyDeleteமிக்க நன்றி அக்கா😊🙏
ReplyDeleteமிகவும் பிடித்து இருந்தது வித்யா. பல கோணங்களில் பல தரப்பட்ட கருத்துகளை பகிர்ந்து இருந்தீர்கள்.
ReplyDeleteபற்பல மங்கையரின் முகங்கள் என் கண் முன்னே தோன்றி மறைந்தது..
சில வருடங்கள் முன்பு நானும் பெண் சக்தி பற்றி எழுதிய சில வரிகள் உள்ளன. விரைவில் பதிவிடுகிறேன்!!
மிக்க நன்றி அகிலா..ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்கள் பதிவிற்காக 😊
ReplyDeleteசூரியன் போல என்றும் பிரகாசிக்க ஏன் வாழ்த்துக்கள் கண்மணியே.வளர்மதி.
ReplyDeleteThank you Valarmathy 🥰🙏
ReplyDeleteஆண், பெண் வேறுபாடுகள், இவற்றைத் தாண்டினால் வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்லாதவர்கள் என்ற பாகுபாடு.. வேலைக்குச் செல்லாத பெண்கள் எல்லாரும் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.
ReplyDeleteஅவரவர் தேவைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டாலே போதும்.
நல்ல தலைப்பில் பதிவு வித்யா.
மிக்க நன்றி பானு😊
ReplyDelete