Monday, August 31, 2020

கணினியும் கல்லூரியும் by Vidhya Nivash

                    கணினியும் கல்லூரியும்

அனைவருக்கும் வணக்கம்,

கமலியின் எழுத்து எனக்கு கல்லூரியை மீண்டும் ஞாபகப் படுத்தியது. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு கட் ஆப் மார்க் குறைந்ததால் என்னால் மருத்துவராகவும் ,பொறியாளராகவும் ஆக முடியவில்லை .அம்மா பணம் கொடுத்து சேர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


பயோ கெமிஸ்ட்ரி வந்த புதிது , நுண்ணுயிரியல் சென்று சேர்ந்தேன். நான் பள்ளி படித்தது தமிழ் வழிகல்விமுறையில் இப்பொழுது அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது .பாக்டீரியா ஸ்பெல்லிங் கூட தெரியாது பக்கத்தில் இருந்த என் தோழியை பார்த்து விரைவில் கற்றுக் கொண்டேன் அனைத்தையும், ஒரு மாதத்திற்குப் பின் தானாக வந்துவிட்டது ஆங்கிலம் .

எங்களுக்கு ஒரு பேப்பர் இருந்தது அப்பிளைட் கம்ப்யூட்டர் சயின்ஸ் அதை ஒரு கணித ஆசிரியர் எடுத்தார் .அப்பொழுதுதான் முதன் முதலாக நான் கணினியை பார்த்தேன் என்று சொல்வதை விட பயன்படுத்தினேன் .அதற்கு முன்னர் சில சமயம் சிலர் வீட்டில் பார்த்திருக்கிறேன். சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு மாக்ஸ் என்றாலே பயம், இதில் இன்னமும் பயம் அதற்கு மேல விரிவுரையாளர் கடுமையானவர் .வகுப்பறையில் ப்ரோக்ராமை எக்ஸ்பிளைன் பண்ணிவிட்டு கம்ப்யூட்டர் லேப்க்கு அழைத்து செல்வார் ரொம்ப பழைய கம்ப்யூட்டர் , இதுல எழுதிட்டு போனா அழகான ப்ரோக்ராம் அப்பப்பா சொல்லவே முடியாது அந்த காமெடி ,சந்தேகம் கேட்டா அதுக்கு மேல திட்டுவாங்க ஒருவழியா நாங்க அந்த ப்ரோக்ராமை டைப் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து முடிப்பதற்குள் டீச்சர், programmer's, ஸ்டுடென்ட்ஸ் உள்ள ஒரு பெரிய கலவரமே நடந்து முடியும். அந்த ஆண்டு கம்ப்யூட்டர் பேப்பர் முடிஞ்சிடுச்சு .


என்னுடைய எம்எஸ்சி படிக்கிறப்ப applied bioinformatics ,எனக்கு கெடச்ச கம்ப்யூட்டர் டிப்ஸ் சொல்லித்தர ஆசிரியர்கள் யார் என்றால் என்னுடைய மாமா பையன் ,சித்தி பையன் என்னுடன் எம்எஸ்சி படித்த என்னுடைய நண்பர்கள் அவங்களோட துணையில்லாமல் நான் கம்ப்யூட்டர் சென்டருக்கு போனதே இல்லை .அப்ப அந்த கம்ப்யூட்டர் சென்டர் குள்ள போவது என்றாலே ஒரு நடுக்கம் வரும் . அந்த ஒரு அலைடு பேப்பர் பயோ இன்பர்மேட்டிக்ஸ்க்கு ஆக ,இதல ப்ரோக்ராமிங் எல்லாம் போய் படித்தேன் ஒரு கணினி மையத்தில்,கடைசியில ரெண்டே ரெண்டு புரோக்ராம் வச்சு அந்த பேப்பரை முடித்து விட்டார் .

கேட்டீங்கன்னா இந்தமாதிரி எம்எஸ்சி படிச்சிட்டு இருந்தேன், ஒரு நாள் ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு காலையிலேயே போயிட்டேன் நான்தான் மொத ஆளு கம்ப்யூட்டர் சென்டர் திறந்தவுடன்,ஒரு தைரியத்துல போயிட்டேன் கம்ப்யூட்டரை ஆன் பண்றேன் கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை .அங்க இருக்க அசிஸ்டன்ட் கூப்பிடலாமா வேணாமான்னு ஒரே டவுட் கடைசியில ஒரு வழியா கூப்பிட்டேன் மெயின் சுவிட்சை போடாம எப்படிமா கம்ப்யூட்டர் ஆன் ஆகும் என்று கேட்டாரு ...ஐயோ என்னால மறக்கவே முடியாது.

எம்எஸ்சி மற்றும் என்ஃபீல் ப்ராஜெக்ட் டையும் தங்கச்சியோட துணையுடன் முடிச்சேன் .

கமலி சொன்னது போல தான், நானும் என் கணவரும் ஒரு வருட காலம் கணினியின் உதவியுடன் இனிமையாக நாட்களை கழித்தோம். எங்களுடைய பையனின் பத்தாவது நாளிலிருந்து ஒன்றை வயது வரை..

கடைசியா இப்ப கம்ப்யூட்டர் இல்லாம ,ஸ்மார்ட்போன் இல்லாம என்னால இருக்க முடியல அந்த அளவுக்கு அதோட உதவியோடு நான் இப்ப வந்து நிறைய என்னுடைய திறமைகளையும் வெளிப்படுத்தி இருந்தாலும்,இப்பவும் சில இடங்களில் சிலரின் உதவி தேவைப்படுகிறது ,இப்போதய கணினி ஆசிரியர்கள் என் பிள்ளைகள் மற்றும் அகிலா.

எனக்கும் அகிலாவை சந்திக்க முதல் வாய்ப்பு கணினி பயிற்சி வகுப்பு மூலம் கிடைக்க இருந்தது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை அப்போது.. பின்னர் நிறைய மாற்றத்தை பார்த்தேன் தோழிகளிடம் ,வகுப்பில் சேரும் ஆசை வந்தது ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு விதமாக அகிலாவின் நட்பு கிடைத்தது. அதன்பின் அகிலா எதை நடத்தினாலும் ஒரு முறை எப்படியாவது சென்று தெரிந்துக்கொள்வோம் என்ற ஆசை வந்தது. அதன் பயனாக இங்கே எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.

மிக்க நன்றி.

வித்யா.

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...