Arigato அனுபவங்கள்
Arigato #1 - நரிடாவை நோக்கி..
டிசம்பர் 6 - 3:15 am
டிசம்பர் 7 - 3:20 am
டிசம்பர் 8 - 3:45 am
.
.
டிசம்பர் 11 - 4:50 am
டிசம்பர் 12 - 5:15 am
டிசம்பர் 13 - 4:50 am
டிசம்பர் 14 - 5:20 am
டிசம்பர் 15 - 5:15 am
பத்து நாட்கள் கடந்த பின்னும், அலாரமின்றி, இன்னும் ஜப்பான் நேரத்திற்கே, என் உடலும், மனமும் இயங்கிக் கொண்டிருந்தது!
இதை just like that “JET Lag” என்று சொல்லி கடந்து செல்ல முடியவில்லை.. 3-4 நாட்கள் ok? But 15 days??!! Something fishy!
RJ Balaji styleல சொல்லனும்னா எதோ ஒரு "அமானுஷ்ய சக்தி"னு சொல்லலாமோ? JAPAN lag-அப்படி சொல்லிக்கலாமோ? அப்போ கூட Japan lag-னு சொல்ல மாட்டேன்! Japan Lead-னு தான் சொல்லனும்னு நினைக்கிறேன்!
எது எப்படியோ, இதுக்கு முன்னாடி 12 countries tour.. Historic sites, wildlife destinations, scenic places போயிருந்தாலும்…அதைப் பத்தி எழுதனும், share செய்யனும்னு தோணலை… First time felt so..in that Japan leads!
வியக்க வைத்தது இடங்கள் மட்டுமல்ல..ஈர்க்க வைத்தது எண்ணற்றவை -இயற்கை, இயந்திரங்கள், இயக்கங்கள்…எல்லாத்துக்கும் மேல - " மனிதர்கள்”.
திரும்பி வந்தது Dec 5th..இந்த Early rise on Dec15th- எனக்கு ஏதோ செய்யத் தூண்டியது..இதோ எழுத உக்காந்துட்டேன்!
Japan tourism- சுற்றுலா கதவுகள் ரொம்ப lateஆ தான் October-ல open ஆச்சு. உடனே தயாரானோம். Previous wide spectrum of toursக்கு அப்புறம், Bhutan & Japan தான் எங்க மனதில் தோன்றிய, எங்களை ஈர்த்த கிழக்கு ஆசிய நாடுகள். Bhutan-க்கு போறதுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி plan பண்ணோம்..set ஆகலை. Bhutan மலைகள் இன்னும் எங்களை அழைக்கவில்லை போல! Right time இன்னும் வரலை..இயற்கையின் அழைப்புக்காக காத்திருப்போம்!
Travel planning-ல ஜப்பான் பத்தி Google-ல ரொம்ப ஆராய்ச்சி செய்யலை… purposefully தவிர்த்தேன்..except for flight, hotel & local guide bookings, Google/other apps நாங்க use பண்ணலை. அதுக்கு முக்கிய காரணம் மனசையும், நிகழ்வுகளையும் முடிஞ்சவரை openஆ வெச்சுக்கலாம் என்று தான்! Once we research more, I feel we get into validation mode…Judgmental mode on ஆகி excitement mode off ஆகிடுதுன்னு நான் feel பண்றேன். Also, Safety & Systematic approach in Japan எங்களை coolஆக இருக்க வைத்தது.
Ok now, flight mode ON!
முதல்ல Flight ticket booking முடிஞ்சவுடன், 6 days & 5 nights excel sheetல பதிவு செய்தோம். Tokyo சென்று Osakaவிலிருந்து return plan!
2 நாள் - TOKYO மாநகரம்; 1 நாள் புல்லட் ரயிலில் tokyoவிலிருந்து osaka பயணம்; 2 நாள் - KYOTO மாநகரம் - இது தான் high level plan(இதில் ஸ்வாரசியமான இடங்கள் surprise-ஆ பின்னர் சேர்ந்துச்சு luckily..அதை போகப் போக சொல்கிறேன்!)
Full trip individual family package இல்லாமல் நாங்க செல்லும் முதல் பயணம் இது! போகும் தூரம் தெரியும்; இடம் தெரியும்; எப்படி தெரியும்! எங்கே, ஏது, என்னனு பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டோம்.
பக்கா planners, trackersலாம் ஓரங்கட்டிட்டு, பல சவால்களையும் எதிர்கொள்ள ஜோரா ஜப்பான் புறப்பட்டோம் - with essential bookings like:
** Hotel bookings(Agoda website)
** Bullet train booking(rail ninja)
** Airport transfer from Narita to Tokyo(Klook app)
** Day tour in Tokyo with local guide(Toursbylocals site)
** Day tour in Mt. Fuji & Hakone(Klook)
** Day tour in Kyoto with local guide(Viator)
** Day tour in Nara with local guide(City unscripted)
Itinerary முடிவானவுடன், எல்லா printouts கையில் எடுத்துகொண்டு Japan embassy சென்று விசா விண்ணப்பம்...5 நாட்களுக்குள்ள 5 வருட multiple entry விசா வந்தது! நாங்க கேட்டது single entry தான்..ஆனால் Indiansக்கு அதே 30 dirhams fees - multiple entry வாங்கிக்கோங்க என்று embassy பெண்மணி அன்புக் கோரிக்கை- 5 வருஷம் என்னை தரிசிக்கலாம்னு எங்க காதுல Japan சொன்னது சந்தோஷமா இருந்தது(போவோமோ இல்லையோ, போக முடியும் என்ற விஷயமே bonus தானே..) புன்னகையுடன் ஏற்றோம்!
அடுத்த முக்கியமான step - share பண்ண விரும்புறேன் - VISIT JAPAN WEB registration online!
92 பக்க manual இருக்கு ஆனா website ரொம்ப easy & user-friendly. நிறைய videos YouTubeல இருக்கு. நாம எல்லா தேவையான documents for Quarantine, Immigration & Customs upload செய்யனும். Scanning, verification - எல்லாமே instantly done- பக்கா systematic!
ஒவ்வொரு பயணிக்கும் மூணு விதமான colour codes -3 விதமான QR codes வரும். Narita Airportல இறங்கியவுடன் smartphoneல காட்டணும். நாங்க safetyக்கு printouts-உம் வெச்சிருந்தோம்!
Ok now, flying mode ON!
Honestly, I witnessed their trash cleanup attitude - literally everywhere I went in Japan! Big salute to them!
Emirates terminal போய் சேர்ந்தோம்.. ஆட்கள் யாருமின்றி, பெட்டிகள் கழுத்தில் மணி போல bagtags மாட்டிக் கொண்டு, தன்னைத் தானே சம்ர்த்தாக கூட்டிக் கொண்டே சென்றது முதல் முறை நான் பார்த்தேன்..பெட்டிகளுக்கு குட்டி byebye சொல்லிவிட்டு Loungeஇல் கண்ணுக்கு FIFA football match விருந்து கொடுத்து, வயிற்றுக்கும் சிறிது அளித்து காத்திருந்தோம்!
முதல் முறை Arabic sweet Luqaimat(meaning little bites) try பண்ணேன்!
பார்க்க Gulab Jamun மாதிரி இருந்தாலும், எனக்கென்னவோ rasgullaவை நினைவு படுத்தியது - because அந்த syrup இல்லாவிட்டால் blandஆ இருந்துச்சு. இது ஒரு traditional Emirati dish.. 
ரமதான் மாசத்துல எல்லா Iftar-லயும் இருக்கும்னு சொல்லுவாங்க!
With slight variations in texture and sweetener, they are known as zalabia in Egypt; aweimat (floaters) in Lebanon and Syria; and skaramati in Somalia-:)
'Airport of the Year' award வென்ற Dubai airportக்கு ஒரு அழகான Arigato சொல்லிவிட்டு A380 விமானத்தின் கீழ் தளத்தில் நுழைந்தோம்! Already Japanக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருந்தது…flight fully Japanese and Arab crowd!
கன்னிப்பையனின் வாழ்க்கைச் சங்கடங்களை - காமெடி கலந்து அளித்த கன்னட திரைப்படம் Hareesha vayassu 36 சில மணி நேரத்தை விழுங்கியது! 36 வயதினிலே ஜோதிகா rangeக்கு எதிர்பார்த்து, பார்க்க ஆரம்பிச்சேன்…but, Bachelor பரிதாபங்களை சிரிப்புடன், சிறப்பாக படைத்திருந்தார்கள்..சில நொடிகளே வந்தாலும், அந்த அப்பா character மற்றும் மாணவியாக வரும் கல்யாணத் தரகர் character ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது…அடடே...track மாறி பயணக் கட்டுரை, சினிமா விமர்சனமாயிடும் போல…Break போடுவோம்…!
6852 தீவுகள் சூழ்ந்த Japanese Archipelago-வில், Narita International Airport வந்துடுச்சு...இறங்குவோம்!!
10 அடிக்கு ஒரு வயதான மூதாட்டியோ, மூத்த குடிமகன்களோ, QR code அட்டையைக் கையில வெச்சிகிட்டு வழி காட்டினாங்க.. மிக முக்கியம்- சிரித்த முகத்துடன், குனிந்து குனிந்து Arigato சொல்லி கொண்டே!
10-15 நிமிஷத்துக்குள்ளே, பெட்டிகளுடன் வெளியேறினோம்!
Placard வெச்சுகிட்டு நின்ற ஜப்பானிய முகம் புன்சிரிப்புடன் வரவேற்று சொன்ன முதல் வார்த்தை “No English”.
சிரிப்பை திரும்ப அளித்து விட்டு, SIM Card கடை நோக்கிச் சென்று முதல் வேலையாக wifi sim வாங்கினோம்! YENகளில் எங்கள் முதல் கொடுக்கல் வாங்கல்! இந்த wifi கார்ட் வாங்கியதற்க்கு பல முறை எங்களுக்கு நாங்களே Arigato சொல்லிக்கொண்டோம் - all 6 days!! Google-இன்றி ஒரணுவும் அசையாதல்லவா?! உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உற்ற நண்பன் அவனே!
சிறு சாரல், மழைத்துளிகளுடன் ஒரு மணி நேரப் பயணம் Naritaவிலிருந்து TOKYOநகரின் IKEBUKURO என்ற இடத்தில் உள்ள METROPOLITAN Hotelக்கு சென்றோம்.
ஜப்பான் உலகுக்கு அளித்த பல கொடைகளில் ஒன்றான -HAIKU - 5 -7- 5 syllable magic!
“ஹைக்கு” வரிகளில் , ஒரு சிறு முயற்சியுடன், இந்த பதிவினை Arigatoவுடன் நிறைவு செய்கிறேன்!
அகண்ட வான்பரப்பில் ஜொலிக்கும் விண்மீன்கள் ஒளியால்!
ஆழியில் ஜப்பான் தீவுகள் ஆயிரம் ஆயிரம்.. ஜொலிப்பது உழைப்பால்!
வெற்றிக்கு வித்திட்ட விந்தைகளை..விடியலில் சந்திக்க!!
மீண்டும் சந்திப்போம்..அடுத்து வருவது Tokyo Day 1 - Imperial Palace பயணம் -Arigatoவுடன்!
- அன்புடன் அகிலா🙏
பின் குறிப்பு: திரும்ப திரும்ப தோன்றிய “Arigato” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. ஆமாம் அதன் அர்த்தம் "நன்றி" தான்! Arigato gozaimasu means THANK YOU!
அத்துடன் இடை இடையே என் English மற்றும் Tanglish, மாறி மாறி இடம்பெறும் பேச்சுத் தமிழ், செந்தமிழ் நடையைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Please “Uketamo”.. இந்த நடையில், என் மனதை directஆ -as it is express பண்றதா உணர்கிறேன்!
நன்றி. வணக்கம். மீண்டும் சந்திப்போம்!!





அழகான பயண தொகுப்பு அகிலா.
ReplyDeleteஅருமை,பார்வைக்கும்,படிக்கவும் விருந்து
ReplyDelete