Saturday, December 31, 2022

தோன்றும் வினாக்கள் by Veena Shankar

 


தோன்றும் வினாக்கள்


உழைப்பிற்கேற்ற கூலி செல்வமா? நிம்மதியா? - அது எது என்று எண்ண தோன்றுகிறது



எங்கோ இருப்பவனுக்கு எங்கிருந்தோ கிடைக்கும் உணவுக்கும்

உடைக்கும் மூலதனம் - அது யார் என்று எண்ணத் தோன்றுகிறது



கண்டுபிடிப்புகள் எங்கோ அரங்கேற அவை உலகமயமாதலும் - அது எதனால் என்று எண்ண தோன்றுகிறது



பாச வலையில் சிக்கி தவிக்கும் உறவுகளுக்கு வரும் மனஸ்தாபங்கள் - அது ஏன் என்று எண்ண தோன்றுகிறது



ஆறறிவு படைத்த அனைவரும் சமம் என்று சொன்னாலும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை வருவது - அது எதற்கு என்று தோன்றுகிறது



பருவம் பல கடந்து வந்தாலும் பெண்ணின் உடலில் தோன்றும் வெட்கம் - அது எப்படி என்று எண்ண தோன்றுகிறது



கருவறையில் ஜெனிக்கும் உயிரும் அது வரும் பாதையும் - அது எவ்வாறு என்று எண்ண தோன்றுகிறது 



ஆண் - பெண் பார்வையில் ஆரம்பித்து உடலில் முடிவடையும் அந்த பந்தம் - அது என்ன என்று எண்ண தோன்றுகிறது



கோடி வருடங்கள் ஆனாலும் பூமியில் கொட்டி கிடக்கும் செல்வங்கள் - அது எவ்வளவு என்று எண்ண தோன்றுகிறது



நம்மை மீறிய சக்தி உண்டு என்று நம்பினாலும் - அது எந்த வடிவம் என்று எண்ண தோன்றுகிறது

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...