Tuesday, December 20, 2022

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Rishi

 


தொன்று தொட்டு இன்றுவரை

தொடர்ந்து கொண்டே இருக்கும்

தொழிலில் தையலும் ஒன்றே!!!

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்,

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்,

பழமொழி அனைவரும் நன்கு அறிந்ததே!!!

பலருக்கு இன்றும் கைக்கொடுக்கும்

தொழில் இதுவே... அக்காலத்தில் விழாக் காலங்களில்

மட்டுமே இலாபம் கிட்டியது...

இன்று விரல்விட்டு

எண்ணும் அளவிற்கு

வந்து விட்டது...

சில பெண்கள் 

வீடுகளில் தன் கையே தனக்குதவியாக

தைத்துக் கொள்கின்றனர்...

 ரெடிமேட் ஆடைகள்

இருந்தாலும்,

இன்றும் பள்ளிக்

குழந்தைகளின் சீருடைகளை 

அளவெடுத்து 

கச்சிதமாக தைக்க


அவர்களால் மட்டுமே


இயலும்...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...