Saturday, December 31, 2022

யார் அந்த அவை by Vidhya

 


யார் அந்த அவை ?

வானம் வசப்படும்...செக்கச்சிவந்த சூரியனின் ஒளிக்கதிர்களால் வானம் மட்டும் வசப்படவில்லை ...

கடலும் வானமும் சங்கமிக்கும் அழகைக் கண்ட நாம் சிவந்த கீழ்வானும் மனிதனின் கைவண்ணத்தால் மெருகேறிய சாலையும் வானமும் சங்கமிப்பது வானத்தோடு நம்மையும் வசப்பட செய்கிறது..

நீண்டு செல்லும் சாலையின் இருப்புறமும் பாலைமண் சூழ கண் எட்டிய தூரம் வரை மண்மட்டுமே ...

காற்றில் பறக்கும் பாலைமண்ணை பார்க்க மனம் பறக்கும் புது அனுபவம்..

பாலையில்க்கூட செழித்திற்கும் புதரைப்பார்க்கும் போது தினமும் வந்து வந்து காத்திருக்கும் உங்களின் ஞாபகம் வந்தது...

முதலும்,முடிவும் இல்லா சாலையும் , வானமும் 

வளைவுகள் போன்றவை வந்தாலும் ,மாயத்திரையை விலக்க..

ஏதுமற்ற நிலையில்...அவைகளை களைந்திட வானம் வசப்படுத்தியது...

காலமும் மனமும் வசப்பட்டால் பாலைக்கூட சொர்க்கமாகும்...

யார் இந்த அவைகள்..

தொடரும்...




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...