Tuesday, December 13, 2022

இன்றைய சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை


நமக்கு அன்பானவர்களும், நம்மை காயப்படுத்தியவர்களும் நம் மனதை விட்டு என்றுமே நீங்குவதில்லை


சிக்கு கோலங்களின் நடுவில் சிக்கி கொள்ளும் புள்ளிகளும் கோலம் முழுமை அடைந்தவுடன் அழகு பெறும் என்பது போல நம் வாழ்க்கையும் துன்பம் என்ற புள்ளியையும் முயற்சி என்ற வளை கோடுகளையும் கொண்டது. இறுதியில் அழகு கோலமே நம் வாழ்வின் வெற்றியாம்


மௌனமும் புன்சிரிப்பும் பொறுமையின் மொழிகள் எல்லை மீறும் வரை


மனதின் அழுக்கை நீக்கி அழகாக்கும் முயற்சி வேண்டும் நம்மிடம், அடுத்தவரை பழிக்காமல்


பணமாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் கிடைத்தால் தான் மகிழ்ச்சி. இல்லையென்றால் அதன் மதிப்பு சற்று குறையவே செய்யும்.


நாம் தேடும் எப்பொருளும் மறைந்து போவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தாலும் அது நம் கண்களுக்கே புலப்படுவதில்லை என்பது தான் உண்மை


கோபத்தின் வெளிப்பாடு சில நேரங்களில் மௌன மொழியாக இருக்கலாம். அதனால் மௌனத்தையும் வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்வில்


பெண் புதிராய் இருப்பதால் தான் இன்னும் புனிதமாய் போற்றப்படுகிறாள்


தென்றலும் புயலும் மாறி மாறி வாழ்க்கையில் வீசினாலும் வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறப்பதும் மனிதனின் வெற்றிக்கு அடிப்படை


ஒரு பொருளின் தேவையும் ஆசையும் உள்ளவரை அது நம்மிடமிருந்து நீங்குவதில்லை


ஆதீத கட்டுபாட்டால் விளைவது தவறும் பொய்யும்


சின்னஞ்சிறிய விசயங்களுக்காக மனதை குழப்பி கொள்ளாமல் அடுத்து நிகழப் போகும் செயல்களுக்காக சிந்தனையை தூண்டுவது எளிது


பசியினால் வயிற்றில் ஈரத் துணியை கட்டிக் கொண்டால் வறுமை. மாறாக தொப்பையை குறைக்க இடுப்பு வார் அணிந்து கொண்டால் செழுமை


வழியில்லா இடத்திற்கும் பாதையென்றானது மனிதனின் முயற்சியால்


பொருட்செல்வமே பிரதானமானால் மனிதநேயம் பறந்து விடும்


புரிந்து கொள்பவரிட த்தில் மட்டுமே நம் ஆழ்ந்த கருத்தும் செயலும் மிகைபடும்


மனதில் முயற்சி என்னும் விதையை இட்டால்

           வாழ்வில் வளர்ச்சி என்னும் விருட்சம் உதயமாகும்


ரகசியம் அவசியம் அதுவும் நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே சொல்லப்படவேண்டும்.


யாரும் எப்போதும் எல்லோருக்கும் நல்லவராக இருக்கவே முடியாது.


அடுத்தவருக்கு நலம் விரும்பியாக இருந்தால் மட்டும் போதும் நம் மனம் விரும்பும் செயலை அவரிடம் செய்ய தூண்டாமல்


ஒரு பொருளின் தேவை அதீத காதலாகும் வரை அர்த்தமுள்ளதாகவே இருக்கும்


சுடர் மேல் நோக்கி ஒளிர்ந்தாலும் அதனை சுற்றும் வெளிச்சம் ஒன்றே. அதை போல தான் மனவலி பெரியதாகிலும் சிறியதாகிலும் அதன் பால் உருவாகும் இடைவெளி ஒன்றே


பொறுமை இருக்கும் மனத்தில்

           வெறுமை இருந்தாலும் அது வாழ்வில் 

           என்றும் சிறுமையாகாது


 பரிசும் வெகுமதியும் நம்மை ஊக்கப் படுத்தவதற்கே. முன்னது முயற்சிக்கானது. பின்னது செயலிற்கானது.


வரன்முறையற்ற வாழ்வு செயலற்று போகும்


பிறரிடம் வாங்கும் போது நீளும் கரங்கள் கொடுக்கும் போது மட்டும் சுருங்குவதன் காரணம் அவரவர் மனம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...