என் (எண்) குழப்பம்
"அருணா! எனக்கு அவசரமா வேலை இருக்கு. அப்புறமா உன்னோட போன்ல பேசுறேன்" என்று சொல்லி ஓடினான் அகில். "ஓ கே. பரவாயில்லை நானே பேசுறேன்." என்றாள் அவன் முன்னாள் அலுவலக தோழி. சரி என்று தலையசைத்து சென்றவனிடம் "அதே நம்பர் தானே " என மறுபடியும் கேட்டவளுக்கு "அதே தான், 701 " என்று சொல்லிவிட்டு சென்றான் அந்த அவசரத்திலும். அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்து காபி அருந்தி சற்று இளை ப்பாறிய அருணாவு க்கு அகிலுக்கு போன் செய்ய வேண்டும் என்ற நினைவு வர அவனுக்கு போன் செய்தாள். எதிர் முனையில் பேசிய பெண்ணின் குரலை கேட்டு சற்று சுதாரித்தவளாய் "அகில்! " என்று மட்டும் சொல்லி நிறுத்தி கொள்ள, "நீங்கள் யார்? " என்று மறுமுனையில் கேட்க, " இது அகிலின் நம்பர் தானே?" என்று அருணா கேட்டதும் "ஆம் " என்றும் பதில் வந்தது. "701 தானே? அகில் இல்லையா?" என அருணா மறுபடியும் கேட்க, "701 - இது அகிலோட நம்பர் தான். ஆனால் கடைசியில் தான் 701 வரும். இது என் நம்பர். முதலில் 701 என்று வரும் " என்று பதில் சொல்லி அருணாவை யார் என விசாரிக்க, தன்னை பற்றி அருணா சொல்லியதும், "ஹாய் அருணா! எப்படி இருக்கீங்க? இவர் உங்களை பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்று அப்பெண் சொன்னதும், ஓ! இவள் தான் அகிலின் மனைவியா? என்று யூகித்து, குசலம் விசாரித்தாள் அருணா. பேசி முடித்ததும் அப்பாடா என்றாள் அருணா. முதலிலும் கடைசியில் வரும் போன் நம்பரை மட்டும் சொல்லியும் கேட்டும் இனி யாரிடமும் போன் பேசக்கூடாது என தீர்மானித்தாள் அருணா. அகில் என்ற பெயரில் இரு எண்களை பதிந்து வைத்துள்ளாள். தன்னை பற்றி அகில் தன் மனைவியிடம் சொன்னதால் தான் தப்பித்தோம். இல்லையென்றால் பிரச்சனை திசை மாறி போயிருக்க கூடும். வேறு எவருக்கேனும் நானும் போன் பண்ணி மாட்டிக்கொண்டிருப்பேன் என எண்ணி தலையில் அடித்து கொண்டாள்.

No comments:
Post a Comment