Thursday, December 29, 2022

யார் அந்த "அது" by Vidhya Nivash

 


தினமும் சூரியனும், சந்திரனும் வந்து வந்து  போகிறார்கள்...

வெயிலும், மழையும் ,பனியும் ,பசியும் வந்து வந்து போகிறது...

ஆசையும், பாசமும் ,கோபமும் வந்து வந்து போகிறது...

தினமும் நேரமும்,வாய்ப்பும் வந்து வந்து போகிறது...

மனதில் எண்ணிலடங்கா எண்ணங்கள் வந்து வந்து போகிறது..

மறந்து போன விடாமுயற்சியும் ,அடையாளமும் வந்து வந்து போகிறது...

என்று அது உன்னில், உன்னை அறியாமல் வேரூன்றி ஆழமாக போகிறது ...என்பதை அறிவாய் என வந்து வந்து போகிறோம்..

என்று அந்த மாயத் திரையை விலக்கி...

விழிப்பாய் என்று தினமும் வந்து வந்து காத்திருக்கிறோம்...

ஆனால் நீயோ பல காரணங்களால் எங்களை மறந்து பலவற்றில் மூழ்கி உன்னை மறந்துவிடுவாயோ என வருத்தம்..

யார் அந்த "அது"....

தொடரும்...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...