Thursday, December 29, 2022

படத்திற்கு கவிதை "டோரா வின் சாயலில் ராதாவின் வேடம்" by Veena Shankar

 


டோரா வின் சாயலில் ராதாவின் வேடம்


அரண்மனையில் பூக்களை கண்டுள்ளேன் ஆனால் அரவாணியான பூக்களை கண்டிலேன்


மாறுவேட போட்டியில் வென்றது ஆணா? பெண்ணா?

கண்ணாடியில் தெரிவது நீயா? நானா?

வண்ணத்தில் சிறந்தது வெண்மையா? நீலமா?

அழகில் மயங்கியது கிருஷ்ணனா? ராதையா?

மலராக ரசிப்பது உன்னையா? என்னையா?


பெண்ணும் கடவுள் என்பதன் மறைமுகப் பார்வை


முகம் பார்க்கும் கண்ணாடியிலும் மதுசூதனனின் பிம்பம் தெரிய மதி மயங்கி நின்றாள் இந்த ராதை


காதலனே கணவனாகி விட்டால் கனவும் காத தூரம் செல்லும் கள்ளமில்லா காதலியின் காதலால்


கற்கண்டாய் இனிப்பேன் என்று சொல்லி கற்பூரமாய் மறைந்த காதலனை எண்ணியே உருமாறிய காதலியின் அர்த்த தோற்றத்திலும் நர்த்தனமாடுகிறது கண்கள்


இப்படி இருந்தால் ஆதார் அட்டை கிடைக்குமா? அரசுக்கே சவால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...