Friday, December 30, 2022

யார் அந்த 'அது' by Vidhya Nivash

 


யார் அந்த அது?

ஒருமையா? பன்மையா?

நேற்றைய படத்தில் நெடுந்தூர சாலையின் இருமருங்கிலும் படர்ந்து செல்லும் செடிகள்...கண்ணை பறிக்கும் அழகு சில நொடிகளில் வளைவு .அந்த பாதை தொடருமா? அல்லது எங்கே போய் முடியும் என்ற கேள்வி?

அழகான சாலையில் படர்ந்திருக்கும் செடியின் நிழல் சாலைக்கு குடைப்பிடிக்க....பயணத்தை ரசித்த மனம்... தொடக்கத்தை தேடா மனம் முடிவை தேட அலைபாய்க்கிறது..

இடையில் பயணத்தை ரசித்த மனம் எங்கே?



தினமும் நாங்கள் வந்து வந்து மோதி போகிறோம்...

வருந்துவதற்கு காரணம் தேடுவதில்லை.. நினைத்தவுடனே எங்கிருந்து தான் வருமோ தெரியவில்லை.  மனக்குப்பையின் அடி ஆழத்திலிருந்து கிளறி வந்து வந்து போகும் நொடி பொழுதே எண்ணங்கள் பல..

சிரிப்பதற்கும், பாராட்டுவதற்கும்,ரசிப்பதற்கும் மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறதா??அதற்கு நாள்,நேரம் தேடும்..

அந்த அவை(கள்) வேரூன்றி வளர்க்கிறது...களையை அறுக்காமல் விட்டால் எளிதில் பெருகி முட்கள் போல் குத்தும்..

களைக்கொல்லியாக நாங்களும் தினமும் வந்து வந்து போகிறோம் ...

அவைகளின் நடுவே எங்களையும் கவனிப்பாய் என்று காத்திருக்கிறோம்...

யார் அந்த 'அவை(கள்)'?

தொடரும்..


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...