Friday, December 16, 2022

முத்துச்சரமா? கவிதைகளா? by Veena Shankar


 

இரண்டு மனம் வேண்டும் 


சமையல் நன்றாக அமைய வேண்டுமென்று 

சமையற்காரர் நினைக்கிறார் 

ஒரு பருக்கை சோற்றுக்கு காத்திருக்கும் 

பிச்சைக்காரனும் நினைக்கிறான் சமையல் 

நன்றாக அமைய கூடாது என்று 

இவ்வேளையில் கடவுள் நினைக்கிறார் 

எனக்கும் இரண்டு மனம் வேண்டும் என்று


தேர்தல்


வாராத குழாயில் தண்ணீர் வந்தது 

போகாத ஊருக்கு சாலை வந்தது 

எரியாத விளக்கில் வெளிச்சம் வந்தது 

இவையெல்லாம் வந்தது தேர்தல் சமயத்தில் 


நன்றியுள்ளவனா(நா)ய்


உன்னை திட்டி தீர்க்கும் மனிதர்களுக்கும்

நீ நன்றியுள்ளவனாக இருக்கிறாய் 

பிறரை ஏமாற்றி பிழைக்கவில்லை  

தண்ணீர் இல்லை என்பதால் நீ 

சாக்கடை குழியில் குளியல் எடுக்கிறாய் 

பள்ளிக்கு செல்லாமலே காலுறை அணிகிறாய்

 

அதிர்ஷ்டம்


செந்நெல் அறுவடை செய்யும் விவசாயியின் 

கண்களில் செந்நீர் வருகிறது வட்டி சுமையால் 

அரசாங்கமும் கடனை தள்ளுபடி செய்தது 

வட்டி கட்டி முடித்தபின் 

ஆற்றில் வெள்ளம் உண்டோ இல்லையோ 

கண்கள் குளமாயின தன் அதிர்ஷ்டத்தை எண்ணி


பள்ளிக்கூடம் 

பள்ளிக்கூடம் இருந்தால் நன்றாக இருக்கும் என 

நினைக்கிறான் மாணவன் வீட்டு வேலைகளில் 

இருந்து தப்பிக்க எண்ணுவதால் 

ஆசிரியரே இருக்க வேண்டாம் என 

எண்ணுகிறான் மாணவன் அவர் கண்டிப்பை 

விரும்பாததால் வெற்றி மட்டும் வேண்டுமென நினைக்கிறான் 

தன் எதிர்கால வாழ்க்கை வளத்திற்காக 


எண்ணம் 


காதல் தோல்வி அடைந்ததால் வந்தது என் 

கண்களில் கண்ணீர் 

காதலினால் உனக்கும் கண்ணீர் 

வருகிறது என நினைத்தேன் 

உணர்ந்தேன், உன் ஆடம்பர செலவை 

எண்ணி தவித்திருக்கிறது உன் மனம்


ஓட்டப் பந்தயம்


ஓட்டப் பந்தயம் அறிவிப்பானதும் கலந்துகொண்டனர் 

பிச்சைக்காரனும் போலீஸ்காரரும்

பின்தங்கியது பின்னது பல இடங்களில் 

வாங்கி தின்று வயிறு பெருத்த காரணத்தினால் 

ஓடியது முன்னது பல இடங்களில் வாங்கி தின்றாலும் 

வயிறு புடைக்க கிடைக்காததால் 


என் கட்சி


சிகரத்தை தொட நினைத்த எனக்கு 

நகரத்து வாழ்க்கை கசந்தது 

அகரத்தை சொல்லி பழகிய எனக்கு 

நரகத்தை கற்றுக்கொடுத்தது 

சிக்கலில் இருந்து தப்பிக்க தெரியாத எனக்கு 

பக்கத்தில் இருந்து 

உதவியது என் கட்சி எல்லோரும் 

ஓர் குலம் என்பதால்


வாழ்க்கையின் வாய்ப்பாடு


வந்தது வந்துவிட்டாய் அனுபவி என்றது விதி 

போனது போகட்டும் சமாளி என்றது மதி 

நடப்பது நடக்கட்டும் பிரி என்றது சதி 

கிடைப்பது கிடைக்கட்டும் கொள் என்றது கதி

இவை வாழ்க்கையின் வாய்ப்பாடு என்பதே சேதி


குழந்தை தொழிலாளி


குழந்தை தொழிலாளி இல்லை என்று எழுதி இருந்தது ஒரு கடையில் 

அங்கே கல்லாவில் அமர்ந்திருந்தவனோ முதலாளியின் சுட்டிபையன்


ஆணவக் கொலை


மின்னல் போல் மின்னிய முகம்  

இடி போல் முழங்கிய பேச்சு 

மழை போல் பொழிந்த அன்பு 

எல்லாம் அடங்கியது

என் காதலனின் ஆவி மட்டும் 

சுடுகாட்டின் சமாதிக்குள் அமைதியாய்

ஆணவக் கொலையின் விளைவாய்


சமுதாய பார்வை


நல்லவனாக இருந்த என்னை கள்வனாக 

மாற்றியது சமுதாயம் 

நல்லவனான பின்பும் நான் கள்வனானேன் 

அடுத்தவர் பார்வைக்கு


என் காதல்


நிலவு என்றால் குளிர் தந்திருப்பேன்

சூரியன் என்றால் ஒளி தந்திருப்பேன் 

மேகம் என்றால் மழை தந்திருப்பேன்

நட்சத்திரம் என்றால் மின்னியிருப்பேன் 

நானோ உன்னிடம் என் மனதை தந்திருக்கிறேன்

பார்த்துக்கொள் என் காதலுக்கு ஏதும் ஆகாமல்


அடகு


வந்தது வந்தது பண்டிகை 

வந்தது வந்தது குதூகலமும் 

வந்தது வந்தது பிள்ளைகளுக்கு புன்னகையும் 

போனது போனது புன்னகையும்  

மனைவியின் நகையை அடகு வைத்ததற்கு 

வட்டி கேட்டு ரசீது செய்து வந்ததால்


மதுபானகடை


திறந்திருந்த அவன் கூட்டத்தை பார்த்து யோசித்தேன் 

அங்கு பொதுக்கூட்டமும் இல்லை விழாவும் இல்லை 

விடை தெரியாமல் சென்றேன் அதனருகில் 

ஒரு பாட்டிலுக்கு ஒரு பாட்டில் இலவசம் என 

எழுதப்பட்டிருந்தது மதுபானகடை வாயினிலே


மனிதன் Vs கடவுள்


மனிதன் தவிக்கிறான் கடவுளின் அருளை அறிய 

கடவுளும் தவிக்கிறார் மனிதனின் மனதை அறிய


குழந்தை


குடம் தூக்கி பழக்கம் இல்லை என்றேன் என் சிறுவயதில் 

அதனால் கடவுளும் சுமக்க விடவில்லை என்னை 

ஒரு குழந்தையை என் வயிற்றில் 

 

காதல் மரணம்


நாளை இவ்வேளையில் எனக்கு திருமணம் என்றது 

ஒரு பெண்ணின் மனது 

நாளை இவ்வேளையில் எனக்கு மரணம் என்றது 

அதே பெண்ணின் காதல்


நண்பனின் காதல்


பூக்களின் சிரிப்பு என்னை மாற்றியது 

சிரிக்க சொல்லி 

பறவைகளின் சுறுசுறுப்பு என்னை மாற்றியது 

உயரப் பறக்க சொல்லி 

தேனீக்களின் கூட்டம் என்னை மாற்றியது  

கூடி வாழச் சொல்லி 

என் காதலை கைவிட சொன்னான் நண்பன் 

தன் காதலை உதாரணமாகச் சொல்லி


விடை


மலருண்டு மனமில்லை 

உயிருண்டு குணம் இல்லை 

பார்வை உண்டு கருணை இல்லை  

நெஞ்சம் உண்டு ஈரம் இல்லை 

நீயும் சொன்னாய் 

அன்பு உண்டு காதல் இல்லை என்று

என் கால்களுக்கு பதிலாய் காதலுக்கும் விடையாய்


லஞ்சம்


லஞ்சமாக பெற்ற பணம் லஞ்சம் ஆகிப்போனது

அடுத்த தேர்தலில் மக்களின் ஓட்டை பெறுவதற்காக

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...