Thursday, December 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அறிவிற்கும் அழகிற்கும் 

பஞ்சம் கிடையாது

புரட்டலுக்கும் புரிதலுக்கும் 

இடையே நடக்கும் போட்டி

யார் வந்து சீண்டுவர் என்று 

காகிதத்திற்கும் கடிதத்திற்கும்

உள்ள வேறுபாடு இங்கே

யார் அறிவர் என்று 

ஆனால் 

காதலுக்கு மட்டுமே

துணை போகும் கருவிகள் இரண்டு

இங்கே

ஒன்றையொன்று இன்னவர் இவர்

என புரிந்து கொள்ளாமல்


படித்தால் மட்டுமே அறிய முடியும்

இருவரையும்

புரட்டுவதை காட்டிலும்

- Veena 

அழகோவியம் இரண்டுமே,

 இரண்டையும் படிக்க நேரத்தோடு

 பொறுமையும் வேண்டுமே,

ஒருவரின் சிந்தனையில் வடித்த

 எழுத்துக்கள் ஒன்றாகி ஒரு

 சிலையை வடிக்க, பல

 உருவெடுக்கும் பலரின்

 சிந்தையில்...  வருவாள், வளர்வாள்,

 விரிவாள்,மறைவாள்..

- Vidhya

Sunday, December 7, 2025

படமும் கருத்தும் by Veena Shanker



எத்தனை தலைகள் கொண்டாலும்

மனது ஒன்றே!

அந்த மனமும் அறியாது விழிக்கும்

ஓர் பெண்ணின் மனதை படிக்க முடியாமல்


ஓர் பெண்ம(தி) யின் 

சுறுசுறுப்பு

பல தலைகளையும்

ஆட்டுவிக்கும்

- Veena 


Tuesday, December 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வாழ்வின் கனவு அங்கே

வான் ஊர்தியில் பறக்க

நினைவுகள் மட்டுமே 

பரிசு புது மணப்பெண்ணுக்கு

வருவான் வருவான் 

தன்னை மணப்பான்

என்ற ஏக்கம் தீர்ந்து

நின்ற அவளுக்கு

 அவளை அடைந்தும்

அகன்று சென்றான்

வேலை நிமித்தமாய்

பொருள் சேர்க்க வேண்டிய 

கட்டாயத்தால்

பின்னாளுக்காக சென்றான்

இந்நாளின் மகிழ்ச்சியை

விடுத்து

பல நினைவுகளோடு அவனும்

மௌன மொழி மட்டுமே

அரங்கேறும் 

அங்கங்கள் மனதால் பிரிந்தாலும்

தங்கம் தானே !

பிரிவு ஏதும் இல்லாது

போனாலும்

அங்கே

வசந்தம் கொணறாது

ஊடலும் பின் கூடலும்

இலக்கியங்களில் மட்டுமல்ல

நிஜத்திலும் உண்டு

- Veena 

கனவிற்கும் நிஜத்திற்கும்

 இடையேயான காதல்

 வானூர்தியில் பறக்க, இதுவும்

 நிஜமாகும் என்ற கனவில்

 மிதக்கின்றன ஆசைகள்,மீண்டும்

 கனவல்ல நிஜம் மென உறக்கத்தை

 தள்ளி வானூர்தில் பறக்கிறாள்..

- Vidhya 

Friday, November 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhy

 


நானும் கடலும்


கடன் வாங்கி வலை வாங்கி

காற்றின் திசையில் 

என் படகு அசைந்து

எதிர்நீச்சல் போட்டு

கடலில் மிதந்து மீன் பிடித்து

தரை இறக்கி

விலை சொல்லி

பேரம் முடிந்து 

வியாபாரம் செய்து

ஈட்டிய பணத்தை

வட்டிக்கும் அசலுக்கும் கட்டி

மிச்ச மீதியை

இல்லத்தாயிடம் கொடுத்து

என்னை

விதைத்தவளுக்கும்

விதைத்ததுகளுக்கும்

செலவாக்கி 

செய்த பாவத்தை

தொலைக்கவும் 

ஒதுக்கி 

நான் காலத்தை ஓட்ட

சுனாமி அலைகள்

என் வாழ்வை சிதைக்க

என் இருப்பிடமும்

உடையவர்களையும்

உடமையையும்

கடல் அன்னை

பறிக்க

நான் மட்டும் இருந்து

என்ன செய்ய?

என்று கேட்கிறது என் மனம்

நாங்கள் ருசிக்க நீ

மீன் பிடித்து தர வேண்டும் 

என்றது எங்கிருந்தோ

கேட்ட குரல்

- Veena 

சில நேரங்கள்ல ஏமாற்றம் நம்மை

 கோழையாக்கும், 

அன்பைக் காட்டி அடிமைகளாக , 

நம்பிக்கையில்லாத சூழல்,

 வெறுமை,தனிமை கொடுமை. 

பல நேரத்துல தனிமையே,

 சிந்திக்க ,தனக்கென கிடைக்கும்

 ஆறுதல்,வெளியே கிடைக்கா

 மருந்து.

- Vidhya

Wednesday, November 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அவள் எழுதிய புத்தகத்தில்

மடல்கள் விரிந்தன

தன் அவன், அவன் அவன் என்றே!

ஒவ்வொருவரின் நினைவும்

மனதில் பசுமையாய் பதிய

அவள் வரைந்த காகித

மடல்களும் நிரப்பின

புத்தகத்தின் பக்கங்களில் காவியமாய் 

அவள் அழகை மட்டும்

ரசித்தவர்கள்

அவள் அங்க ஊனத்தை

கண்டு விலகியதும் ஏனோ?

மனதில் ஊனம் இல்லாத

போதும் அது மௌனம்

மட்டுமே காத்தது

ஊமை போல்

யாதும் பாலின் நிறம்

என்ற எண்ணம்

அவள் வாழ்வை

புரட்டி போட்டதே!

கற்ற பாடத்தை மறந்து

வகுப்பில் புதிதாய்

கற்கும் மாணவன் போலே

அவள் இருக்க

மீண்டும் மீண்டும்

பாடம் புகட்டாமல் 

அவள் உடல் நிலையை 

ஏற்று

மௌனத்தை கலைப்பவனும் எவனோ?

- Veena

எது ஊனம்?

காதலை வெளிப்படுத்த தெரியாத மனமே..

காதல் நிறைந்த மனதில் வேறென்ன

 வேண்டும்,சிந்தனை முழுவதும் அவனே

 ஆட்க்கொள்ள, எதனை படிக்க, அவனை

 நேசிக்க இந்த புத்தக துணை வேண்டுமோ!

அவன் வாழும் இடத்தில் எதுவும் நுழைய

 மறுக்க, 

மறுக்க மறுக்க படித்தும் புரிய வில்லை..

- Vidhya



Wednesday, November 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காலத்தினால் பல பாதைகள்

உண்டென்றாலும் 

ஓர் பாதையே

சரியான பாதையாய் 

நம்மை இட்டு செல்லும்

அதன் வழி பின் தொடர

மேடுகளும் உண்டு

பள்ளங்களும் உண்டு

வளைவுகளும் உண்டு

நிறுத்தங்களும் உண்டு

அதை கடந்து போவதே சிறப்பு

வாழ்விலும் இது

பொருந்துமே 

அறிய துடிக்கும் வயதில்

அறிவதும்

தேட பணிக்கும் வயதில்

தேடலும்

ஒருவருக்கான வாழ்வியலையும் 

கற்றுக் கொடுக்கும்

சீரான பாதையின் முடிவு மட்டுமே

கொடுக்கும் செழிப்பான வாழ்க்கையை

அதை கண்டு கொள்வதும்

அமைத்துக் கொள்வதும் 

நம் கையிலே!

- Veena 

ஒவ்வொரு வளைவிலும் ஒரு

 குதூகலம் ,அதில்

 பயணப்படுவோருக்கு ஒரு

 புதுவிதமான அனுபவம் ,அதை

 வழிநடத்துபவருக்கே தெரியாது

 அதன் ஆபத்து ,எதையும்

 எதிர்கொள்ளும் தைரியத்தை

 பயணங்கள் மட்டுமே தரும்

 அதிலும் மலை பயணங்கள் பல

 விசித்திரமான கதைகளையும்,

 அதில் வசிக்கும் உயிரினத்தின்

 துடிப்பையும் கண்ணில் காட்டி

 செல்லும்,வளைவு ஒரு புதிர் .

- Vidhya 


Tuesday, November 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


சிறகு இருந்தும் பறவாத பறவையும்

மொட்டுக்கள் கொண்டும் பூக்காத பூவும்

எது சுதந்திரம் என்று 

அறியாத பெண்ணும்

மாயை இவ்வுலகில்

தனக்கு தேவையானதை

பெற தெரியாமல்

அடிமை கோலம் பூண்டும்

ஆணின் தோளுக்கு உறுதுணையாய் 

நிற்பவளும் அவளே!

கால்கள் இல்லாவிட்டால் என்ன 

கரங்கள் உண்டு

கரங்கள் இல்லாவிட்டால் என்ன 

கால்கள் உண்டு இங்கே

என்று சொல்லி 

மாற்று அவள் நிலையை

- Veena 

மாயாஜால மந்திரமோ

தந்திரமோ மெல்ல மெல்ல உடல்

 மறைய காற்றில் மிதக்கும் சருகு

 போல் பறக்கும் பெண்ணே,

 எதுவும் பூமிக்கு பாரமில்லை

அதை நீ இழக்காத வரை, மேலே

 பறக்க அது  மேலும் உந்துதே !

பறவையோடு போட்டியிட அவள்

 செய்யும் ஒத்திகை..

- Vidhya 

Monday, November 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 இடம் மாறும் பூக்கள்

சில நேரங்களில் 

தேவைக்காக

பாசத்திற்காக

காதலுக்காக

அன்பிற்காக

அழகிற்காக

அர்ச்சனைக்காக

அழைப்பிற்காக

ஆதரிப்பதற்காக

ஆராதனைக்காக

சமாதானத்திற்காக 

சுகத்திற்காக

இறைக்காக

இறப்பிற்காக

மனதார இதை கொடுப்பதில் உள்ள ஆனந்தம்

பெறுவதில் குறைவே

மலர்கள் மட்டும்

விதி விலக்கு இங்கே

- Veena 

மல்லிகையின் மணம்

 மாமானுக்கு தெரியுதோ

 இல்லையோ, அதை சூடும்

 மல்லிகாவின் மனம் அவனுக்கு

 புரிந்தால் போதும்!

மலர்களின் மொழி மௌனம்

 அதன் மணம் கலைக்கும்

 மனதின் மௌனத்தை..

- Vidhya 

Saturday, November 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உடலால் சிறைப்பட்ட 

மனம் வெளிச்சத்தை

கண்டவுடன்

 நாணுகிறது 

ஏங்குகிறது

புது உறவிற்காக 

நிரந்தரமாய் தன்னை

கொள்பவன் எவனோ

அவனிடம் அடிமைப்பட்டு நிற்க

சிறையில் அடைந்து கொள்ள

காதல் ஓர் ஆயுதமல்ல

எவரையும் தன் வயப்படுத்த

ஓர் உணர்வு அது

இது நாள் வரை

கண்டது காதல் அல்ல

உணர்வும் அல்ல

அங்கங்களின் சங்கமம் தானே!

மனங்கள் சங்கமிக்க

வாய்ப்பும் இல்லை

தேவை முடிந்த பின்

எதுவும் பெரிதில்லை

இருட்டும் பகலும் ஒன்றே!

கட்டிலும் சல்லாபமும் ஒன்றே!

இன்பம் பெறும் மனிதர்களை தவிர

கையில் பணத்தோடு

வருபவன்

தாலியோடு வந்தால்

அவள் மனமும் 

ஏற்காதா என்ன?

வலியோடு பிறக்கும் தாகம் தீர்க்க

வழி உண்டு இங்கே

வாயில் வரை மட்டும்

இன்றோ பிறந்தது

நாளைய மறைமுக

தேவைக்காக!

- Veena 

கண்களை மூடி நினைவை அசை

 போட வரும் சிரிப்பு ,மழை நின்ற

 பின் சொட்டும் நீர் தேனை போல்

 அழகு,நாணத்தில் சிவக்கும்

 கன்னங்களை போல் அழகு,

 மொட்டு அவிழ்க்கும் இதழை விட

 அழகு அவள் சிரிப்பு ..

- Vidhya 



Wednesday, November 12, 2025

அன்றொரு நாள் பேருந்தில்- கதை by Veena Shankar

 



அன்றொரு நாள் பேருந்தில்



நான் எப்போதும் நெடுந்தூர பயணத்திற்கு ரயிலில் செல்வது தான் வழக்கம் என்றாலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் பேருந்திலும் பயணம் செய்பவள் . அன்றும் ஒரு முக்கிய நிகழ்சசிக்காக நான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி பஸ் நிலையத்திற்கு செல்ல , அங்கே நான் போக வேண்டிய இடத்திற்கான பேருந்தும் நின்றிருக்க அருகில் நின்ற நடத்துநரிடம் விசாரித்த பிறகே அந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் பேருந்து புறப்பட நடத்துநர், சரியான சில்லறை தந்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள பணித்தார். ஆனால் அப்போது தான் சம்பளப் பணம் கையில் வந்தது போல ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்ட, கடுப்பானார் அவர். இருந்தாலும் முடிந்த வரை சில்லறையை சரியாக திருப்பி கொடுத்தார்.  


அனைவருக்கும் கடிந்து கொண்டு சில்லறை கொடுத்ததால் என்னிடம் வரும் போது எனக்கும் சில்லறை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நான் என்னிடம் இருந்த ஐநூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுக்க, என்னிடம் மட்டும் நூற்றி ஐம்பது ரூபாயை சரியாகக் கொடுக்கு படி கூற, மறு வார்த்தை பேசாமல் நானும் இருநூறு ரூபாய் தாள் தான் உள்ளது என அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கியவர் ஐம்பது ரூபாய் சில்லறையை பின்னர் வாங்கும் படி சொல்லி அவர் தன் இருக்கைக்கு சென்றார். 


எதிர் வந்த நிறுத்தங்களில் பல பேர் ஏற, இவர் பயணச்சீட்டை கொடுப்பதும் ரூபாயை வாங்குவதுமாக இருந்தார். அவர் முன் பின் வந்து செல்லும் போது நான் அவரை பார்க்க அவரும் தன் திசையை என் பக்கம் பார்த்தால் என் பாக்கியை திருப்பி கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.  


ஒரு கட்டத்தில் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய , நினைவாற்றலில் கொஞ்சம் சிறுத்து போயிருக்கும் நான், அவரிடம் ஐம்பது ரூபாயை எப்படி கேட்பது என்ற அவலாதி என்னிடம் தொற்றிக் கொண்டது. நான் ஏதும் கேட்டு அவர் திருவாயிலிருந்து ஏதாவது கேட்க கூடாத வார்த்தைகள் வந்து விடுமோ என்ற அச்சம் வேறு என்னை உறுத்த , கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு நிலைக்கும் என்ற நம்பிக்கையில் நான் அமைதியாய் இருந்தேன்.


 "உன் காசு தானே! நீ கேட்கலாம். இதில் என்ன வெட்கம் வேண்டியிருக்கு?" என்ற உங்கள் கரிசன வார்த்தை எனக்கும் கேட்காமலில்லை.


அவர் விரலிடுக்கில் ஒருசில ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருந்தது என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் ஓர் கூச்சம். சரி இறங்கும் போது சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டேன். 


ஒரு வழியாக கூட்டம் குறைய ஆரம்பிக்க, அவரே என்னிடம் வந்து புது ஐம்பது ரூபாய் தாளை கொடுத்தார். 


என் நினைப்பு சரி தானே? கஷ்டப்பட்டது ஏதும் நிலைக்கும். 


மேலும் என்னிடம் ஐம்பது ரூபாயை திருப்பி கொடுக்கும் போது நான் கேட்டவுடன் நீங்கள் தான் முடிந்தவரை சில்லறை கொடுத்தேர்கள். மற்ற எவரும் என் பேச்சை சட்டை செய்யவில்லை. நெடுந்தொலைவு பயணம் என்றால் நடத்துநர் சில்லறை தந்தே ஆக வேண்டும் என்ற நினைப்பு பயணியரிடம் உண்டு. போன் பே, ஜி பே போடுங்கள் என்றாலும் மலைக்கிறார்கள் என்றும் தன்னிடம் இருந்த நோட்டுகள் யாவும் கிழிந்திருந்ததால் எனக்கு அதை கொடுக்க விருப்பமில்லை என்று சொல்லி சென்றார். 


வராதது வந்தது போல் உணர்ந்து அவர் மனசாட்சியை வெகுவாய் ரசித்தேன். உள் மனதில் அவரின் நிலையை எண்ணி இனி முடிந்த வரை சரியான சில்லறையை நடத்துனரிடம் தர முடிவு செய்தேன்.

Tuesday, November 11, 2025

 " உ " வின் பயன்பாடு by Veena Shankar



 " உ " வின் பயன்பாடு


உயிர் கொடுத்தவரை

உணராமல் இருந்தால்

உதாசீனப்படுத்தபடுவாய் 

உன்னுள் பாச 

உணர்ச்சியை உணர்த்திய 

உயரிய செல்வம்

உன் தந்தைக்கு

உண்டி கொடு

உடை கொடு

உயிரும் கொடு 

ஆனால் அவருக்கு

உறைவிடம் மட்டும்

உன் வீட்டில் கொடு 

உதிக்க வைத்தவருக்கு

உறுதுணையாய் இருப்பதே உசிதம்

உயிர் கொடுத்தாலும்

உயரும் வாய்ப்பு

உப்பிட்டவரின் ஆசியால்

உன்னை உளமாற

உணரும் என்றும் இந்த

உணர்ச்சி என்பதை

உலர வைத்த பின்

உயிர் வாழும்

உன் உள்ளத்தில்

உரிய நேரத்தில்

உழைப்பை கையாள

உரிமை பிறக்கும்

உண்ண நினைக்கும் வரை 

உழவும் சிறக்கும்

உண்மையாய் இருப்பதும்

உதிரி பாகங்களாய் 

உடல் ஆன பின்

உதிர்க்கப்படுவதும் உண்டு 

உகுந்த நேரம் 

உண்டு எதற்கும்

உத்தியை கையிலெடுக்கும் வரை

உருவாக்கம் உண்டு

உளி தாங்கும் கல் போல்

உள்ளம் மாறும்

உறுதியாய் உருபெறும்

உவமானத்தில் உள்ள

உண்மை

உவமேயத்தில் உண்டோ?

உதிக்கும் சிந்தனையில்

உதிர்த்த வரிகள்

உருமாறவும் செய்யும்

உற்ற நேரத்திற்கேற்ப

உட்புகுந்து செல்லும்

உத்தம நெஞ்சரின்

உத்தியும் உண்டு

உன்னை உயரம் தொடுவதில் 

உறவாடும் உறவுகள்

உதறி செல்வது ம்

உடன் வருவதும்

உதிரம் உள்ளவரையே

உதிர்ந்த இலைகள்

உள்ளம் தொடா

உவகையோடுள்ள மனது

உன்னதம் கொள்ளும்

உரியவருக்கு துணையாய் உரிமையாய் 

உளமுமாய் இருக்க

உண்டு எதிலும் ஏற்றம்

Sunday, November 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மனதின் இனிய நினைவிற்கு பசுமை காட்சியாய் 

விலகி நிற்கும்

நினைவுகள் பட்டுப்போன மரமாய்

ஓர் மரத்தில் காயும்

பழமுமாய் விளைவது போல


 வாழ்ந்து முடித்தவனின் தியாகத்தால்

வாழப் போகிறவனின்

 வாழ்வில் என்றும் வசந்தமே!


 பட்டு போன மரம் 

துயில் கலைந்து 

துளிர்த்தது

மனிதனின் தேவைக்காக

- Veena 

இரண்டுமே அழகே

ஒன்றின் பசுமையை போலவே

 முதுமையும் அழகே,

வெகுளிதனம் ,பக்குவம்

 இரண்டுமே தேவை,

நேரத்திற்கும், காலத்திற்கும்

 இடையில் விளையாடும் ஜாலம்,

ஆனால் இரண்டையும் ரசிக்க

 இல்லை மனமே,கணமே..

- Vidhya 


Thursday, November 6, 2025

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


வழி தேடுவதற்கான வரைபடத்தின்

வழி காட்டுதலின் படி

சென்றவர் 

மரத்தில் ஏறியது ஏறினோம்

இரண்டு இளநீர் பறிக்க நினைத்ததால்

இந்த காட்சி

வரைபடத்தின் வழிகாட்டுதலில்

வழி தவற விட்டாலும்

தாகம் தீர்த்தது

- Veena 

நிழல் செல்லாத உயரத்தில்

 இவன் வாசம்..

எவர் கையிலும் நானே எதை

 செய்யும் முன் என்னை

 கேட்காமல் யாரும் எதையும்

 செய்வதில்லை,இல்லையேல்

 கைக்கு எட்டியது வாய்க்கு

 எட்டாது.

- Vidhya 

என் எண்ணத்தின் வண்ணமே

படபடவென வளர்ந்த பட்டாம்பூச்சியே !!


என் அறிவினை ஊற்றி

உனக்கு செயற்கை நுண்ணறிவு சேர்த்திடுவேன்


ஆய கலைகள் அறுபத்து நான்கையும்

அரை நொடியில் உனக்குள் புகுத்திடுவேன் !!


பால்வெளியின் நீளம் முதல்

அந்திரொமேடா தூரம் வரை

அனைத்தையும் உனக்கு

அத்துபடி ஆக்கி வைப்பேன்


நீ பூமிக்கு புதிதாய் வந்த அயலான் !!


எஞ்சிய ஏழாம் அறிவு அதிசயத்தின்அடுத்த கட்டம்


பல்லாங்குழியும் பொய்க்கால் குதிரையும்

விளையாடும் போது அறியவில்லை


இந்த உலகம் என் கையடக்கமென்று


உனக்கு உணர்வு ஊட்டப்பட்டிருந்தால்

என்னுடன் உறங்கி இருப்பாய்


எதிர்காலத்தில் நடக்குமோ என்னவோ?


என் வீட்டில் யாரையும் நான் விட்டதில்லை

உன்னை மட்டுமா?


அலெக்சா.....ஒரு ஹாஃப் பாயில் போடு


—பிரியா


Wednesday, November 5, 2025

யார் அறிவாளி? - கதை by Veena Shankar

 


யார் அறிவாளி?


"அம்மா! இந்தா, புது விளக்குமாறு" என்று தான் கடையிலிருந்து வாங்கி வந்த வீடு கூட்டும் விளக்குமாறை காண்பித்தான் சுடலை. அவன் காண்பித்ததை மேலும் கீழும் பார்த்த அருக்காணி , " என்னடா இது? பிஞ்சு போன விளக்குமாறை காண்பிச்சி புதுசுன்னு சொல்லுறியே "? என்று கேட்க , "நீதான் சொன்னே கடையிலே விளக்குமாறு வாங்கினா மட்டும் பத்தாது, நல்லா பெருக்குதான்னு பார்த்து வீட்டிற்கு கொண்டு வா ன்னு , அதான் இதை வண்டிக்கு பின்னால கட்டி ரோட்டை பெருக்கிட்டே வந்தேன். பின்னாடி பாத்திட்டே வந்தேன் ரோட்ல ஒரு தூசியும் இல்லை. நான் எவ்வளவு அறிவாளி பார்த்தியா. இன்னும் கடைக்காரனுக்கு காசு கூட கொடுக்கல, நம்ம சின்னா கடையில தான் வாங்கினேன். நாளைக்கு நீ அந்த வழியா போகும் போது காசு கொடுத்துடு" என்று சொல்லி பிய்ந்து போன விளக்குமாறை அம்மாவிடம் ஒப்படைத்து பறக்க முயல, "அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கிற, அன்னிக்கி உன் அப்பன்ட்ட தீக்குச்சி நல்லா எரியுதான்னு பார்த்து வாங்கி வான்னு சொன்னா அவன் எல்லா தீக்குச்சியையும் எரித்து, எரிந்து போன தீக்குச்சிய டப்பால அடைச்சி கொண்டாந்தான். என்னானு கேட்டா தீக்குச்சி நல்லா எரியுதான்னு பார்த்து வாங்க சொன்னதால எரிச்சு பார்த்து கொண்டாந்தேன் ன்னு சொல்றான். எல்லாம் என் தலையெழுத்து . " என சொல்லி தனக்கு வாச்சதையும் பிறந்ததையும் நினைத்து சலித்து கொண்டே சுடலையை நைய புடைக்க அதே பிய்ந்து போன விளக்குமாறை கையில் எடுத்தாள் அருக்காணி. 


எதையும் சொல்வது பெரிதல்ல, அதை விவரமாய் விளக்கி சொல்வதே சிறப்பு

Tuesday, November 4, 2025

வந்தவர் எவரோ?- கதை by Veena Shankar

 


வந்தவர் எவரோ?


வசுந்தராவின் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கால் மணி நேரம் பேருந்து பயணம் கால் மணி நேரம் நடைபயணம். எப்போதும் கிளம்பும் நேரத்தில் தான் மேனேஜர் அந்த பைல் கொண்டு வாங்க இந்த வேலையை முடிச்சிட்டு போங்க என்று சொல்லுவார். ஆனால் அவர் விடுப்பில் இருப்பதால் சரியாக ஐந்தரை மணிக்கு கிளம்பி பேருந்தின் கூட்ட நெரிசலில் சிக்கி, தளர்ந்த நடையுடன் வீடு வந்து சேர்ந்தாள் ஐம்பது வயதை கடந்த வசுந்தரா. 


வீட்டிற்கு வந்ததும் கை கால் முகம் கழுவி, சாமிக்கு விளக்கேற்றி, பாலை காய்ச்சி, காபி கோப்பையுடன் சோபாவில் அமர்ந்தாள். 

" ச்சீ! இப்போதானே உட்கார்ந்தேன். அதுக்குள்ள வந்துட்டீங்களே! என்ன அவசரம் ? கொஞ்ச நேரம் கழித்து வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறேன். ஏசில உட்கார்ந்து வேலை பார்த்துட்டு சில்லுன்னு காத்துல உட்கார்ந்து காபி கூட குடிக்க விடமாட்டீங்களே! அப்படி வந்து என்ன செய்யப் போறீங்க? என் கடைசி சொட்டு இரத்தம் இருக்குற வரைக்கும் உங்களுக்கு கொடுக்கணுமா? என் மனசையும் உடலையும் குத்தி குத்தி என்னை ரணப்படுத்தி என்னை மூலையில உட்கார வைக்கணும்னு நினைக்கிறீங்களா? வாங்க! வாங்க! வந்து என் உயிரை ஒரேடியாய் எடுத்துட்டு போங்க! என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ன்னு காட்டிட்டு போங்க! அன்புன்னா இப்படி தான் இருக்கணும் " என கத்த, இவள் சத்தத்தை கேட்டு

 " யாருகிட்ட பேசுற வசு? எனக்கு காஃபி கூட போட்டுக் கொடுக்கல" என்று ரூமை விட்டு ஹாலை எட்டி பார்த்தாள் அவள் அம்மா. 


" நீ வேற இரும்மா, இந்த கொசுக்களிட மிருந்து என்று தான் விடுதலையோ தெரியலை? இந்த வாய்க்கா வேற சரியா சுத்தம் செய்யமாட்டேங்குறான் இந்த பஞ்சாயத்து போர்டுகாரன். இரு! வந்து காபியை கலக்கி தரேன். அதுக்கு முன்னாடி ஜன்னல் கதவெல்லாம் சாத்துறேன். விளக்கு வச்சதும் லட்சுமி வராளோ இல்லையோ இதுங்க முதல்ல வந்துடுதுங்க" என்று கொசு கடித்த இடத்தை தடவி கொண்டே ஜன்னலை சாத்தினாள் வசுந்தரா.  


"அட போம்மா! அன்பு கின்பு ன்னு சொன்னியே! நானும் உன் புருஷன் தான் குடிச்சுட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்துட்டானோ ன்னு நினைச்சேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் அவள் அம்மா.


யாரையும் தவிக்க விடுவது இயல்பு, ஆனால் பாதிக்கப்பட்டவர் எதனின்றும் மீள்வது சிறப்பு.

Monday, November 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பாத்திரத்தில் சமைத்த

 பதார்த்தங்கள்

பந்தியிலே!

பந்தியில் இட்ட 

மிச்சமும் தொட்டியிலே!

தொட்டியில் தன் பசியை

தீர்க்கும் மனிதன்

கொஞ்சம் மிச்சமும் 

வைத்தான் வாயில்லா

ஜீவன்களுக்காக


கண் பார்க்க கை

வேலை செய்யும்

சமைப்பதிலும் 

அதை சுவைப்பதிலும் 

இடம் வெவ்வேறானாலும்

- Veena 

பசி என்ற ஈர் எழுத்து தன்னிலை

 மறக்க செய்யும், அரை

 ஜான் வயிறு பொறுக்கா பசியால்

 பற்றி எரியும் தீப்போல

 தன்னையும் ,பிறரையும்

 கொல்லும்..

பசி அறிந்து உண்ண சுகம்

 பெறும் மனமும்

 உடலும்,இல்லையேல்

 கட்டுக்கடங்காத நோய்!

பசியில் வருவோருக்கு ஆதரவு 

 குப்பைத்தொட்டி,

ருசியில் உண்டு மண்டும் இடம்

 மருத்துவமனை,

மிதமிஞ்சி உண்பதை விட

 பகிரிந்து அளித்தால் இந்த

 அவலம் இல்லையேல்...

- Vidhya 

Sunday, November 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பட்டு போன மரங்கள்

ஒன்று வேருடன் 

மற்றொன்று வேர்வையுடன்


முதுமை இரண்டு

இங்கே கலங்கியபடி 

ஒன்று எரியூட்ட

ஒன்று எரிபட 

இரண்டிற்கும் அழிவு

ஒரே நேரத்தில்

கைகளில் சாம்பலாய்


மரம் உயிர் பெற்றது

முதியவரின் மனதினிலே

முதுமையும் கொண்டதால்

உடலும் மரத்துப் போனது 

துளிர்விடும் மரமும்

காய்ந்த மனமும்

மனிதம் பிறப்பதிலே!

- Veena 

வேரூன்றி, பல விழுதை தாங்கி,

பூத்து,பழுத்து,விதைத்து, பட்ட

 மரம் ....

பட்ட மரம், கதை சொல்ல விட்ட

 மரம்,மீண்டும் துளிர்விட,சிறு

துளி  ஆதரவாய் கைக்கொடுக்க

 மீண்டும் பிறப்போம்,படைப்போம்

 பல ...

- Vidhya 

Thursday, October 30, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


புல்லாங்குழலூதும் கண்ணனோ?

அவன் என்றும் மாயவனோ?

ஆயர் பெண்களின் காதலனோ?

எவரையும் மயக்கும் மாதவனோ?

பசுக்களை மேய்த்தவனோ?

உள்ளம் கவர் கள்வனோ?

தாய்க்கு விளையாட்டுப் பிள்ளையோ?

வெண்ணெயை திருடி உண்டவனோ?

பாடம் புகட்டும் ஆசிரியனோ?

தோழிக்கும் சிறப்பான தோழனோ?

உற்றவனோ?

யார் அவன்?

என்னில் எண்ணம் உதிக்க அவனை 

காண வேண்டி

திக்கு தெரியாத காட்டில் 

தொலைத்தேனோ?

அதுவும் அவனாலே 

மீள்வேன் என்பதும் உறுதியே!

பேருந்தில் அடைந்த பெருமிதம் - கதை by Veena Shankar



 பேருந்தில் அடைந்த பெருமிதம்


ஒரு சில மாதங்களுக்கு முன்பு நானும் என் மகளும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறு வயதுடையவர் நடத்துநராகவும் ஓய்வு பெறும் வயதுடையவர் ஓட்டுநராகவும் பணியாற்றினர். பேருந்தில் பயணிகள் குறைவாகவே இருக்க முக்கிய பேருந்து நிலையத்தில் சொற்ப நேரம் நின்று பயணிகளை ஏற்றுவதில் மும்முரமாய் இருந்தார் ஓட்டுநர். 


நடத்துநர் சிறு வயதுக்காரர் என்பதால் அவரிடம் போதிய அனுபவம் இல்லை. மேலும் போகும் ஊர் பெயரை சொல்லி பயணியரை ஏற்றுமாறு ஓட்டுநர் நடத்துநரை பணிக்க, ஒப்புக்கு நடத்துநரும் கூவ, " நீ எல்லாம் எதுக்கு வேலைக்கு வர? பயணியரை ஏற்றும் திறமை கூட இல்லை. பேருந்தை விட்டு கீழே இறங்கி அழை" என்று கொஞ்சம் சத்தமாக சொன்னார் ஓட்டுநர்.  


மீண்டும் அவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடத்துநரும் அவ்வாறே செய்ய பயணிகள் யாரும் ஏறுவதாக இல்லை என்று பதிலளித்தார். அவனுடைய பேச்சில் கடுப்பாகி போன ஓட்டுநர், பேருந்து நிலையத்திற்குள் வரும் அனைத்து பேருந்துகளையும் இடை மறைத்து பயணியரை ஏற்ற முற்பட்டார். சில பயணிகள் ஏற, ஒருவழியாக பேருந்தை அவ்விடத்திலிருந்து நகர்த்தினார் ஓட்டுநர். மேலும் நடத்துநரை வசை பாடியே வர, ஒரு கட்டத்தில் அவரும் ஓட்டுனரின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்தார். கடுப்பாகிய நான், ஓட்டுநரிடம் நடத்துநருக்காக பரிந்து பேச நினைப்பதற்குள் பயணச்சீட்டு கேட்டு நடத்துநர் எங்கள் பக்கம் வர நான் அடங்கிப் போனேன்.  


பயணக் கட்டணம் தெரியாத நிலையில் ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் நான் நீட்ட, மீதம் எண்பத்தி நான்கு ரூபாய் சில்லறையை செழிக்க கொடுத்தார் நடத்துநர். அப்போது தான் ஓட்டுனரின் நிலையை நான் உணர்ந்தேன். ஆம், எனக்கு அந்த சில்லறையை கொடுக்காமல் என்னிடம் பதினாறு ரூபாய் சில்லறையை வசூலித்திருந்தால் மேலும் தொலை தூரம் செல்லும் பயணியருக்கு மீதி சில்லறையை கொடுப்பதில் சிரமம் இருக்காது என்பதை கூட அறியாமல் அவர் செய்த செயல் என்னை யோசிக்க வைத்தது.


  பயணச்சீட்டை கொடுத்தவுடன் தன் இருக்கையில் அமராமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார் நடத்துநர். ஓட்டுநர் மறுபடியும் அவரை அழைத்து பாந்தமாக பேசினார். "என்னப்பா! நான் திட்டினதுக்கு கோவிச்சிக்கிட்டியா? அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்போது தான் புதுசா வந்திருக்கிற. தொழில் பத்தி நீ தெரிஞ்சிக்கணும் இல்லையா? அதான் நான் உன்னிடம் கோபத்தை காட்டி விட்டேன். உனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னைக் கேள். நான் சொல்லித் தருகிறேன். நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்ளாதே. உனக்கு நிறைய வருடங்கள் சர்வீஸ் இருக்கு. வா! உன் இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள். நான் சொல்ல சொல்ல என் அனுபவத்தை தெரிந்து கொள்" என்றார். மேலும் நடத்துநரும் "இல்லைங்க நான் உங்களை தவறாக நினைக்கவில்லை" என்றார். 


இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த என் மகளும் "அம்மா! அந்த டிரைவர் ரொம்ப நல்லவருமா. அவர் நடத்துனர திட்டிக்கொண்டே வந்ததால் நாமும் அவரை தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவர் பாருங்கள், கண்டக்டரை திட்டினாலும் கொஞ்ச நேரம் கழித்து அவரை சமாதானம் செய்கிறார்" என்று சொன்னதும் நான் என் வளர்ப்பில் வெற்றி வாகை சூடியதாய் நினைத்துக் கொண்டேன். 


ஆம். இப்போதைய பிள்ளைகள் எல்லாம் சிறிது கடிந்து கொண்டால் கூட சகஜ நிலைக்கு வருவது கிடையாது. ஆனால் தனக்கு பாடத்தை தான் கற்று தருகிறார் என்று நடத்துநர் நினைத்ததால் அங்கே விவாதங்கள் தடுக்கப்பட்டது. 


 இதில் யார் சிறந்தவர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஓட்டுநரை தவறாக நினைக்காத நடத்துநரா?இல்லை நடத்துநர் சொன்னதை தவறாக எடுக்கவில்லை என்று நினைத்த ஓட்டுநரா?

Tuesday, October 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இரைக்கான வழியை

இறை காட்டும் போது

பசியும் மறந்து

வயிறு நிரம்பும்

எதிலும் ஏற்றம் காண பிறரை புறந்தள்ளி ஏறி நிற்க தான் வேண்டும்

மிதிபடுவது ஏணியாய் இருக்க 

வேண்டியது இல்லை

எதுவும். ஆகுமே!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே!


 ஊருக்கு பெரியவன் யார்?

தன் வலியை மறந்து

அடுத்தவரின் பசிக்கு

உறுதுணையாய் இருப்பவனே

- Veena 

ஒன்றை ஒன்று சார்ந்த

 வாழ்க்கை பயணம்

இதில் குனிந்தவர் எல்லாம்

 கோழையும் இல்லை,

மேலே நிற்பவரும் பலசாலி

 இல்லை,

ஒன்றன் துணை மற்றொன்று

 வளர உதவினால் போதும்,

 தொந்தரவாக மாறினால்,

 மனஅமைதியை கெடுத்தால்

 விலகி நில்.

- Vidhya 

Wednesday, October 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அழகு எது?

அறிவு எது?

இரண்டும் ஒரு சேர

பார்வையும் அழகே!

புத்தகத்தின் மதிப்பு

அதில் அடங்கியுள்ள

பொக்கிஷத்திலே!

அதற்கு சிறப்பு கூட்ட 

படித்தவர் நடப்பதிலே!


 காணும் போது ஆனந்தம் மனதில்

அலைபேசியின் இடத்தை

புத்தகம் ஆக்கிரமித்தது


 படிப்பதாய் நடிப்பது கூட உண்டு

மாணவ பருவத்திலே

இருப்பினும்

நடிப்பு கைகொடுக்காது இங்கே

பாடம் விளங்கி அவன் உயர

படிப்பு என்பதும் வாசிப்பு மட்டுமல்ல

வாசிப்பதை மனதில்

அடைக்கலம் தருவதே படிப்பு

- Veena 

புத்தகமும் நானும்

புரியாத புதிராக எப்போது எப்படி

 இருப்போம் என்று எங்களுக்கே

 தெரியாது..படிப்பவருக்கு ஒரு

 உரு படைத்தவருக்கு ஒரு உரு

 மொத்தத்தில் மாற்றான்,ஆனால்

 வேற்றான் .

- Vidhya 

Tuesday, October 14, 2025

படமும் கருத்தும் by Veena Shankar




அதிகாரத்தின் உச்ச வரம்பு சொல்லாத இடத்தில் விரல்களின் நர்த்தன நடனம் எவரும் தன் காலுக்கடியில் என்ற இறுமாப்பு நாவினின்று ஒருமையில் விளிக்கும் வார்த்தையின் சங்கேதம் கரத்தில் என்று சிறக்கும் மனிதனின் உள்ளத்து மகிமை நாம் என்றும் சமமே என்ற ஒற்றுமை

Friday, October 10, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


இதயம் பற்றிக் கொண்டது 

மனங்களின் இணைப்பால்

திருமணத்தில் முடிவதும்

இணைந்து வாழ்வதும்

காதலர் கரங்களிலே


 இதயங்கள் இணைவது காதலாலே!

அந்த காதலும் கேளிக்கையாவது

கரங்களில் உள்ள பொருளாலே!

அந்த பொருளும் எதிர்மறையாவது

காதலரின் இதயத்தினிலே!

Thursday, October 9, 2025

சாயிஷா by Veena Shankar



 சாதனையில் அமைப்பு சாயிஷா


அன்பின் வெளிப்பாட்டால்

இணையும் தம்பதியின் காதலில் உருவாகும் கருவிற்கு

பிறந்ததும் கிடைப்பதே தாய்ப்பால் என்பதாம் 


அதனை

அருந்தி வளரும் சிசுவும்

காண்பது சுவர்க்கமே!


எதிர்ப்புசக்தி உருவான இடத்திலே

சில பெண்கள் மட்டும் 

தங்கள் சக்தியை இழந்து

தவிப்பதும் எதனாலே?


அன்றோ கண்டது மரணம் அதற்குரிய 

மருந்து தெரியாமலே!


காலத்தின் போக்கில் அறிவியலார் முயற்சியில்

தள்ளிபோடப்பட்டது மரணமும் இங்கே!! 


புனிதம் புதிரான போது

புதிதாய் புரட்சி நடக்க

உறுப்பு இழப்பு மட்டும் போதும்

நம் பெண்டிரின்

உயிர் நிலைக்கும் என்ற நம்பிக்கையே 

ஓர் வித்தானது இங்கே

சாயிஷா என்ற அமைப்பு

உருவாக்கம் கொள்ள


எண்ணற்ற நாடுகளில்

எண்ணற்ற மகளிரின்

இரு கரங்கள்

உறவாடி அழகாய்

வடிவமும் பெற்றதே! 


ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து ஒன்றிணைந்து உருப்பெற்றது வண்ணம் வண்ணமாய் 

அவரவர் உடலமைப்பு

கொண்ட வகையிலே! 


ஒற்றை பாகம் இழந்தவருக்கும் 

மறு பாகத்தை சமன் செய்து

அவர்களுக்குள்  

தாழ்வு மனப்பான்மை

இல்லாது போக 

அவர்களும் நிமிர்ந்து நிற்க

செய்யும் அமைப்பிற்கு

நன்றி நவிழ 

வார்த்தைகள் உண்டோ? இல.


விடையறியா வினாக்கள் நம் முன்னே!

இருந்தும் விடை நம் தன்னாலவர்களின் கரங்களிலே!

அதற்கு தேவைப்படும் பொருட்களுக்கு உதவும்

குணம் கொண்ட மனதிற்கும் வாழ்த்துக்கள் எந்நாளும் 


இருப்பதை மாற்றுவது எளிது

இல்லாததை உருவாக்குவதும்

எளிதானது தன்னலம் துறந்து

பிறர் நன்மை கருதி

கைகோர்த்த பெண் சிங்கங்களுக்கும் 

சாதனை படைக்கும் சாயிஷாவிற்கும் 


ஆள்வது எளிதல்ல ஆட்கள் சேர்ப்பதும் சிறப்பே என்றும் சேவை செய்விக்க கைமாறு இல்லையே

இந்த அமைப்பிற்கு

https://www.instagram.com/reel/DPgyRwgEkYH/?igsh=dnB3bmdraHBtc2E3

Saaisha India

இன்றைய மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை 


பெரிய நகரம் என்றாலும் சந்து பொந்துகளும் அங்கே உள்ளடக்கம். அப்படிப்பட்ட அந்த தெருவில் இருப்பதே பதினைந்து வீடுகள் தான். ஆனால் அங்கே தண்ணீர் பிடிக்கும் போது எங்கிருந்து தான் சண்டை ஆரம்பிக்குமோ என்று தெரியாது. யாராவது இருவருக்கு சண்டை முற்றிப் போய்விடும். பின் சுரத்து இறங்க, . எந்த சண்டையும் நடக்காதது போலே நிலைமை சகஜமாகி

 அமைதியாகிவிடும். இது தான் அந்த தெருவின் வழக்கம்.


 அன்றும் அப்படி தான் இருவர் சண்டை மூன்று நான்கு என அணி சேர கூச்சல் மட்டுமே விண்ணை பிளந்தது. இது காணாது என்று நாய்கள் கூட்டம் வேறு. ஏரியா பிரச்சனைக்காக கூச்சல் போட, ஆஹா! தெருவே இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல தெரிந்தது. " ச்சு! போங்க" . என ஒருவர் குரல் கொடுக்க, முதலில் நிசப்தமானது நாய்கள் கூட்டம் தான். தாமதமாக உணர்ந்தது மனிதக் கூட்டம். குரல் வந்த வழியே எல்லோரும் பார்க்க ஊரின் பிராதன ரௌடி ஒருவன் ஊர் நாட்டாண்மையாக மாறி இருந்தான். 


தேவைக்காக தேவையில்லாமல் சண்டை போடும் நிலை மாற வேண்டும்

Wednesday, October 8, 2025

இன்றைய மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


" சில்லறை இருக்குள்ள, அதை கொடுக்காம முழு ஐநூறு ரூபாய் தாளை கொடுத்திருறீங்களே?" என்று சுமி கத்திக் கொண்டிருக்க , "யாருக்கும் இனாமாகவா கொடுத்தேன்? கோயிலுக்கு கேட்டாங்க அவரத்துலே எங்கிட்ட பணம் இல்ல . அது தான் உன் பர்சிலிருந்து எடுத்து கொடுத்தேன்" என ரவி சொல்லவும், "ஆமா ! பெருசா நன்கொடை கொடுத்திட்டாரு. அதை பாப்பா பர்சிலிருந்து சில்லறை எடுத்து கொடுத்தா என்னவாம். நான் கணக்கு போட்டு ஒவ்வொருத்தருக்கும் தனியா எடுத்து வைத்திருப்பேன், அதுவும் ஐநூறு ரூபாய் தாளாய்" என ஆவேசமாக கத்தினாள் சுமி.  


இது நடந்தது முன் தினம் இரவு. அடுத்த நாள் காலையில் ஐநூறு ரூபாய் தாள் செல்லாது என அரசு அறிவித்துள்ளதாக செய்தி வர, ரவியை ஓரக்கண்ணால் பார்த்து தலை கவிழ்ந்தாள் சுமி. "ஒரு ஐநூறு ரூபாய் தாளை மாற்றுவதை உனக்கு மிச்சம் பண்ணிவிட்டேன் என ரவி யதார்த்தமாய் சொன்னான். 


தான் செய்வது தவறல்ல, அடுத்தவர் தவறை உன்னிப்பாக கவனிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

Friday, October 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவிலிருந்து பிறக்கும் வார்த்தைக்கு

தண்டனை பெறுவது

என்னவோ வாய்தான்

அது தன்னிலை மறந்து 

திறப்பதாலே

தண்டிக்கப்படுகிறது பிறரால்


 தனக்கு தானே பூட்டிக்கொள்ள 

தெரியாதா மனிதன்

அடுத்தவரின் வலியை உணர முடியாது


ஆதரவு இல்லாதவனுக்கு ஓர் 

அடைக்கலம்

ஆராய்ந்து பேசாத ஒருவனிடத்து

பூட்டு யாவும் சாவியின் இணையே

மனிதன் என்பதால்

நாவின் மொழியும் 

இலவச இணைப்பே என்றும்

- Veena 

ஏன் இந்த கொடுமை

அதன் இயல்பு பேசுவதே

இயல்பை முடக்கி எதை பெற

 முடியும்,வலியை தவிர .

- Vidhya 

Thursday, October 2, 2025

படித்தத்தில் பிடித்தது by Vidhya Nivash

 


'தம்மபதம்' என்பதற்கு பல பொருள் உண்டு. நீதி,விதிமுறை,நன்மை,உண்மை,கட்டுப்பாடு ,அறத்தின் வழியான பாதை .

எண்ணங்களின் பிறப்பிடம் மனம்,தூய்மையற்றது. 

மனமற்ற நிலையே தூய்மை, உண்மை.

மனத்தின் தேடுதலே பொய்கள், அவற்றை தேடி திரிகிறோம்,பழையவை மறைய புதிதாக அவை பல கண்டுபிடிக்கப்படுகிறது.உண்மையை அறிய, ஏற்க மறுக்க. 

உண்மையை கண்டுபிடிக்க முடியாது ,அது நிரந்தரமானது, அதை நாம் புறக்கணிக்க பொய்யை தேடுகிறோம். 

அதை ஏற்கும் நாளில் மனமற்ற,விழிப்புணர்பு பிறக்கும்.

மனம் பற்றி , 

முதல் உலகம் புறவுலகு விஞ்ஞானிகள் தேடுவது,இரண்டாவது மனவுலகம் ,மூன்றாவது அகவுலம்,உள்ளிருப்பு சுயம்.

வெறுப்பை வெறுப்பால் அழிக்க முடியாது, வெறுப்பு இறந்த ,எதிர்காலத்தின் பிள்ளை அதன் அடித்தளம் அன்பு,அது உண்மையானது அல்ல.அந்த அன்பிற்கு பிண்ணனி உண்டு அது வெறுப்பாக மாறும் ஒருநாள்.

உண்மையான அன்பு வெட்ட வெளியில் காரணமின்றி வரும் மகிழ்ச்சி,தூரத்தில் ஒலிக்கும் குயிலின் குரல் காதில் இனிப்பது போல்,அது தொடர்பற்றது.

மனத்தின் இருள் துன்பம் அதை மாற்ற முடியாது,அதன் அருகில் ஒளியை கொண்டு சென்று இன்பத்தை பெற முடியும்.

மனம் மறைய,ஆணவம் போக, விழிப்புணர்வு பிறக்க மௌனமும், சிந்தனையும் வழி நிற்க, ஒளியை அருகில் நிறுத்த தியானம் துணை புரியும்.

வாழ்வில் பிறப்பும், இறப்பும் நிரந்தரமானது.

தியானத்தின் மூலம் மனமற்ற நிலையை அடைய, இறப்பை அறிவதை உணர்த்தியது புத்தரின் தம்மபதம். 

இறப்பை நோக்கி போவது எதிர்காலத்தை பற்றிய பயம்.

தியானத்தின் வழி வாழ் என்றது ஓசோவின் தம்மபதம். 

வாழ்வு நோக்கி போவது நிகழ்காலம்,எந்த நேரத்திலும் உணரக்கூடியது.

வாழ்வு நோக்கிய உணர்வு விழிப்புணர்வை உண்டாக்கிவிடும்.

தொடரும்..


Tuesday, September 30, 2025

படமும் கருத்தும் by Veena, Kiruthika and Vidhya

 


எவனுக்கு எவன் செய்யும் உதவி

எலும்புக்கூடாய் மாறிய மனிதனுக்கு

பணம் தேவையில்லை

பணம் பத்திரமாய் பாதுகாக்க இவன் மனிதனுமில்லை


உன் கடைசி சடங்கிற்காகவாவது பணத்தை சேமிக்க சொல்கிறது

இந்த எரியூட்ட பணமில்லாததால் மாறிய எலும்புக் கூடு

மனங்கள் பார்த்து பூத்த காதல்

இங்கே

ஒன்று பணமாய் மற்றொன்று எலும்புக்கூடாய்

பணத்திற்கு மனம் விலை போனதால்

இந்த அவலம்

- Veena 


இது மட்டுமே நிரந்தரம் என்பதை

 நிரந்தரமற்றதே

 கற்றுக்கொடுக்கும் ..

ஒன்றின் பின்னால் ஓடும் போது

 பல மாற்றங்கள் வரும் ஆனால்

 அதில் மெய்யை உணர தனது

 மெய்யை மறந்துவிடும் மாக்கள்!

- Vidhya 

இங்கு 

எதுவுமே நிரந்தரம் இல்லை...!..

அது -

மனமோ..

பணமோ...!..

இருந்தும்...

இரண்டின் ஒன்றின் பின்னே தான்..செல்கிறது பலரது வாழ்க்கையும் இங்கே...!....

பற்றாக்குறையும் சரி..

அளவுக்கு மீறினாலும் சரி ...

ஆபத்து தான்...!..

ஒன்று

வறுமை..

இன்னொன்று..

வெறுமை...!..

பணம் இல்லாது மனம் - வாழ ..வறுமை பழக செய்யும்..!..

 ஆனால் ...

மனம் இல்லாது 

பணம் - பிணமாக தான் ஆக்கும் ..!..

உயிர் இருக்கும் போதே...!....

- Kiruthika 


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...