Tuesday, February 11, 2025

படமும்,கதையும், கருத்தும் by Veena and Vidhya

 


வீடு


"வீடு கட்ட லோன் தரங்களாம்" என்ற விஷாலின் பேச்சு சூர்யாவிற்கு கேட்க, திருமணத்திற்கு பின்பு தான் சிறிது சிறிதாக காசு சேர்த்து வாங்கிய இடத்தில் வீடு கட்டிடலாம் என்ற நினைப்போடு அன்று இரவு உணவை முடித்தான். அப்போது அவன் மனைவி, குழந்தைகளிடம் இதைப்பற்றி சொல்ல, உடனே "வீடு கட்டுவோம்" என்றாள் மனைவி. "அப்பா! வீடு கட்ட அவங்க லோன் கொடுத்தாலும் அதில் சிறிது பங்களிப்பு நாம் செய்தால் நன்றாக இருக்கும்" என்று சூரியாவின் மூத்த பையன் சொல்ல, "சரி" என்று ஆமோதித்தான் சூரியா. " ஏங்க! அவன் சின்ன பிள்ளை. அவன் சொன்னதற்கு நீங்க ஏன் தலையாட்டுனீங்க, பணத்திற்கு என்ன செய்வது,? நாம மொத்த பணத்திற்கும் லோன் போட்டிடுவோம். அது தான் நல்லது. எங்க வீட்டுல போட்ட நகையெல்லாம் கேட்காதீங்க!" என்று கறாராக மனைவி சொல்ல அதற்கும் விழித்தவாறே தலையசைத்தான் சூரியா. சூரியா குழப்பத்துடனே தூங்கப் போனான். மனம் நினைவால் வீடு கட்ட தொடங்கிய நிலையில் அவன் செவியும் கைகோர்த்தது. அஸ்திவாரம் போட்டு வீடு செங்கற்கட்டிற்கு மாற கற்பனையில் வீடு கட்டி குடி புகுந்தான் சூரியா. பின்னாளில் அவன் புது வீட்டில் மணம் வீச மனம் பூத்ததா?


 ஒவ்வொருவரின் வாழ்விலும் வீடு என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளமும் அவரவர் நம்பிக்கையிலும் உழைப்பிலும் பூப்பவையே!


Veena Shankar: 

சத்தமில்லாமல் கட்டினேன்  

ஓர் வீடு

என் அகத்துள் அல்ல

செவிக்குள் 

இளகி நிற்கும் நெஞ்சந்தனில் நிலைக்காது என்று தெரிந்தே

Veena Shankar: 

வீட்டை கட்டி உட்புக கதவிற்கு பதில் 

சுவர் வைத்து கட்டிய

அவன் உயிர் மீண்டானா?

- Veena 


ஆஹா என்ன ஒரு கற்பனை,

inbuilted headphone 🎧 Aaa..

எவ்வளவு பேசினாலும் அசையாத

 ஜடம் என்பதற்கான

 அடையாளமா!

அல்லது பெருகி வரும் ஒலி

 மாசுவிற்கான விடுதலையா!

தேவையுள்ள போது திறந்து மூட

 புதுவிதமான கட்டுமானம்!

செங்கலில் ஓட்டை போடும்

 வண்டாக நான் இருக்க..

எதை வைத்து அடைத்தாலும்

 உடைத்து தள்ளுவேன்!

இங்கே கேட்க

 காத்திருந்தும்(காது)

பேச வாயிருந்தும் பெருகி

 வரும் இயந்திர உலகம்,

அதை தகர்த்து எறிவோம் 

இனிய சொல் கொண்டு!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...