Monday, February 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 Veena Shankar:

 நிஜம் அனுபவத்தில் நிழல் ஆனந்தத்தில்

Veena Shankar: 

முகப்பொலிவு மட்டும் இழப்பதல்ல முதுமை

சில நேரம் அகமும் வேதனையில் பொலிவிழக்கும் 

நிழல் கூட பின்தொடரும் முதுமையின் கடைசி நிமிடம் வரை

ஆனால் தொடராது ஏதும் அதைப்போல

பிறரிடம் சொல்லிப் பகிர முடியாத பாஷைகள் இங்கே மட்டும் பரிமாறப்படுகிறதே!

மொழிகள் கூட அந்நியப்படும் மௌனம் ஆய்கொள்வதால் 

இந்த மௌன மொழிகள் பகிர்வது என்ன?

இளமையின் முதுமைப் பற்றியா?

முதுமையில் இளமைப் பற்றியா?

ஆனந்தத்தின் தொடர்ச்சியா?

தொடர்ச்சியில் தான் ஆனந்தமா?

ஏளனமும் கொடையா?

கொடை கொண்டதால் வரும் ஏளனமா ?

எட்டியிருப்பதும் சுகமா?

சுகமும் எட்டப்போய்விடுமா?

சுருங்குவது எண்ணமா?

எண்ணத்தையும் சுருக்கவா?

Vidhya, 

மீண்டும் குழந்தை பருவம்

தொட்டதை விட்ட பருவம்

ஊருக்கில்லாமல் தனக்கு தானே

 பேசி தன் அழகை ரசித்த

 உலகம் !

ஊரே சொல்லுது ஞாபக மறதி

 என்று உனக்கும் எனக்கும் மட்டும்

 தான் தெரியும் அவர்கள்

 மறுத்ததை காக்கும் பூதம்

 கண்ணாடி என்று,,நினைக்க

 மறந்தால் தானே மறக்க!

மனதிற்கும் மூளைக்கும் தெரியும்

 எதை மறக்க வேண்டுமென!

நீயும் பொம்மை நானும் பொம்மை

மற்றவை யாவும் மெய் என்னும்

 பொய்!



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...