Monday, February 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

தூங்கா இதயத்தை

தாங்கும் கரங்கள்

இங்கே கண்டாலும்

தங்கும் மாசை கூட 

தேங்காமல் விலக்கிடுமா ?

இதயம் அடைபடுவது 

ஓர் கரத்திலே தானே?

அதுவும் தாங்காமல் போனால்

தொங்குவதும் உயிரே காலன் பிடியில் அது

தீங்கே அடுத்தவர் இதயத்திற்கும்

Vidhya :

எங்கு கொண்டு மாட்டி வைக்க

காற்றுப்பையில் காற்றை தவிர

புகையே அதிகம் நிரம்ப

 சுவாசிக்க முடியாமல் திணற

எங்கே சென்று பாதுகாக்க!

உள்ளே உள்ளதை வெளியே

 தள்ளி உள்ளுக்கு எதை மீண்டும்

 இழுக்க ,இந்த மாசை

சுவாசிக்காமல் இருக்க நான்

 வேலைநிறுத்தம் செய்யவா!

ஏஐ கொண்டு சுவாசித்து

 கொள்ளுங்கள்!



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...